Psalms 75 (IRVT)
undefined அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்கும்படி பாடலின் இசைத்தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல். 1 உம்மைத் துதிக்கிறோம்,தேவனே, உம்மைத் துதிக்கிறோம்;உமது பெயர் அருகில் இருக்கிறதென்று உமது அதிசயமான செயல்கள் அறிவிக்கிறது. 2 நியமிக்கப்பட்ட காலத்திலே, யதார்த்தமாக நியாயந்தீர்ப்பேன். 3 பூமியானது அதின் எல்லாக் குடிமக்களோடும் கரைந்துபோகிறது;அதின் தூண்களை நான் நிலைநிறுத்துகிறேன். (சேலா) 4 வீம்புக்காரர்களை நோக்கி, வீம்பு பேசாமலிருங்கள் என்றும்;துன்மார்க்கர்களை நோக்கி, கொம்பை உயர்த்தாமலிருங்கள் என்றும் சொன்னேன். 5 உங்கள் கொம்பை உயரமாக உயர்த்தாமலிருங்கள்;உயர்ந்த கழுத்துடையவர்களாகப் பேசாமலிருங்கள். 6 கிழக்கிலும் மேற்கிலும் வனாந்திரதிசையிலுமிருந்து ஜெயம் வராது. 7 தேவனே நியாயாதிபதி;ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார். 8 கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் யெகோவாவுடைய கையிலிருக்கிறது,அதிலிருந்து ஊற்றுகிறார்;பூமியிலுள்ள துன்மார்க்கர்கள் அனைவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள். 9 நானோ என்றென்றைக்கும் இதை அறிவித்து,யாக்கோபின் தேவனைக் புகழ்ந்து பாடுவேன். 10 துன்மார்க்கர்களுடைய கொம்புகளையெல்லாம் வெட்டிப்போடுவேன்;நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும்.