Psalms 96 (BOITCV)
1 யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்;பூமியில் உள்ளவர்களே, எல்லோரும் யெகோவாவுக்குத் துதி பாடுங்கள். 2 யெகோவாவுக்குத் துதி பாடுங்கள், அவர் பெயரைத் துதியுங்கள்,நாள்தோறும் அவருடைய இரட்சிப்பை அறிவியுங்கள். 3 நாடுகளுக்குள்ளே அவரது மகிமையையும்,மக்கள் எல்லோருக்கும் அவரது அற்புத செயல்களையும் அறிவியுங்கள். 4 ஏனெனில் யெகோவா மேன்மையானவர், அவரே மிகவும் துதிக்கப்படத்தக்கவர்;எல்லா தெய்வங்களுக்கும் மேலாக பயப்படத்தக்கவர் அவரே. 5 நாடுகளின் தெய்வங்கள் எல்லாம் விக்கிரகங்களாகவே இருக்கின்றன;ஆனால் யெகோவாவே வானங்களை உண்டாக்கினார். 6 மாட்சிமையும் மகத்துவமும் அவருக்கு முன்பாக இருக்கின்றன;வல்லமையும் மகிமையும் அவருடைய பரிசுத்த இடத்தில் இருக்கின்றன. 7 நாடுகளின் குடும்பங்களே, மகிமையையும் வல்லமையையும்யெகோவாவுக்கு செலுத்துங்கள்;யெகோவாவுக்கே அதைச் செலுத்துங்கள். 8 யெகோவாவின் பெயருக்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்;காணிக்கையை எடுத்துக்கொண்டு அவருடைய ஆலய முற்றத்திற்கு வாருங்கள். 9 அவருடைய பரிசுத்தத்தின் மகிமையிலே யெகோவாவை வழிபடுங்கள்;பூமியில் உள்ள யாவரும் அவருக்குமுன் நடுங்குங்கள். 10 “யெகோவா ஆளுகிறார்” என்று நாடுகளின் மத்தியில் சொல்லுங்கள்;உலகம் உறுதியாய் நிலைநிறுத்தப்பட்டுள்ளது, அது அசையாது;அவர் நாடுகளை நீதியாய் நியாயந்தீர்ப்பார். 11 வானங்கள் மகிழட்டும், பூமி களிகூரட்டும்;கடலும் அதிலுள்ள அனைத்தும் சத்தமிடட்டும். 12 வயல்வெளிகளும் அவைகளிலுள்ள அனைத்தும் பூரிப்படையட்டும்;அப்பொழுது காட்டு மரங்கள் அனைத்தும் மகிழ்ச்சியாய்ப் பாடட்டும். 13 யெகோவா வருகிறார், அதினால் அவருக்கு முன்பாகஅனைத்துப் படைப்புகளும் மகிழ்ச்சியுடன் பாடட்டும்;ஏனெனில் அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்;அவர் உலகத்தை நீதியுடனும்மக்களை அவருடைய சத்தியத்தின்படியும் நியாயந்தீர்ப்பார்.