Psalms 146 (IRVT)
1 அல்லேலூயா, என்னுடைய ஆத்துமாவே,யெகோவாவை துதி. 2 நான் உயிரோடிருக்கும்வரை யெகோவாவை துதிப்பேன்;நான் உள்ளளவும் என் தேவனைப் புகழ்ந்து பாடுவேன். 3 பிரபுக்களையும், இரட்சிக்கப் பெலனில்லாத மனிதர்களையும் நம்பவேண்டாம். 4 அவனுடைய ஆவி பிரியும், அவன் தன்னுடைய மண்ணுக்குத் திரும்புவான்;அந்த நாளிலே அவனுடைய யோசனைகள் அழிந்துபோகும். 5 யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து,தன் தேவனாகிய யெகோவாமேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான். 6 அவர் வானத்தையும் பூமியையும் கடல்களையும் அவைகளிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினவர்;அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர். 7 அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்;பசியாக இருக்கிறவர்களுக்கு உணவுகொடுக்கிறார்;கட்டப்பட்டவர்களைக் யெகோவா விடுதலையாக்குகிறார். 8 குருடர்களின் கண்களைக் யெகோவா திறக்கிறார்;விழுந்தவர்களைக் யெகோவா தூக்கிவிடுகிறார்.நீதிமான்களைக் யெகோவா நேசிக்கிறார். 9 அந்நியர்களைக் யெகோவா காப்பாற்றுகிறார்;அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்;துன்மார்க்கர்களின் வழியையோ கவிழ்த்துப் போடுகிறார். 10 யெகோவா எல்லாக் காலங்களிலும் அரசாளுகிறார்;சீயோனே, உன்னுடைய தேவன் தலைமுறை தலைமுறையாகவும் ராஜரிகம்செய்கிறார்.அல்லேலூயா.