Psalms 99 (BOITCV)
1 யெகோவா ஆட்சி செய்கிறார்,நாடுகள் நடுங்கட்டும்;அவர் கேருபீன்களின் நடுவில் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்;பூமி அதிரட்டும். 2 சீயோனிலே யெகோவா பெரியவர்;அவர் எல்லா நாடுகளுக்கும் மேலாக புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார். 3 பெரியதும் பிரமிக்கத்தக்கதுமான உமது பெயரை அவர்கள் துதிக்கட்டும்;அவர் பரிசுத்தமானவர். 4 அரசர் வல்லமையுள்ளவர், அவர் நீதியை விரும்புகிறார்;நீர் நியாயத்தை நிலைநாட்டியிருக்கிறீர்;நீர் யாக்கோபில்நீதியையும் நேர்மையானதையும் செய்திருக்கிறீர். 5 நம் இறைவனாகிய யெகோவாவைப் புகழ்ந்துயர்த்தி,அவருடைய பாதபடியிலே வழிபடுங்கள்;அவர் பரிசுத்தமானவர். 6 அவருடைய ஆசாரியருள் மோசேயும் ஆரோனும் இருந்தார்கள்;அவருடைய பெயரைச் சொல்லி வழிபடுகிறவர்களில் சாமுயேலும் இருந்தான்;அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்;அவர் அவர்களுக்குப் பதிலளித்தார். 7 அவர் மேகத்தூணிலிருந்து அவர்களோடு பேசினார்;அவர் அவர்களுக்குக் கொடுத்தஅவருடைய நியமங்களையும் விதிமுறைகளையும் கைக்கொண்டார்கள். 8 எங்கள் இறைவனாகிய யெகோவாவே,நீர் அவர்களுடைய வேண்டுதலுக்குப் பதிலளித்தீர்;இஸ்ரயேலருடைய தீயசெயல்களுக்காக நீர் அவர்களைத் தண்டித்த போதிலும்,நீர் அவர்களுக்கு மன்னிக்கிற இறைவனாகவே இருந்தீர். 9 நமது இறைவனாகிய யெகோவாவைப் புகழ்ந்து உயர்த்திஅவருடைய பரிசுத்த மலையில் வழிபடுங்கள்;ஏனெனில் நம் இறைவனாகிய யெகோவா பரிசுத்தமானவர்.