1 Samuel 5 (IRVT)
1 பெலிஸ்தர்கள் தேவனுடைய பெட்டியைப் பிடித்து, அதை எபெனேசரிலிருந்து அஸ்தோத்திற்குக் கொண்டுபோனார்கள். 2 பெலிஸ்தர்கள் தேவனுடைய பெட்டியைப் பிடித்து, தாகோனின் கோவிலிலே கொண்டுவந்து, தாகோனின் அருகில் வைத்தார்கள். 3 அஸ்தோத் ஊர்க்காரர்கள் மறுநாள் காலையில் எழுந்து வந்தபோது, இதோ, தாகோன் யெகோவாவுடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்தது; அப்பொழுது அவர்கள் தாகோனை எடுத்து, அதை அதின் இடத்திலே திரும்பவும் நிறுத்தினார்கள். 4 அவர்கள் மறுநாள் அதிகாலையில் எழுந்து வந்தபோது, இதோ, தாகோன் யெகோவாவுடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து கிடந்ததுமல்லாமல், தாகோனின் தலையும் அதின் இரண்டு கைகளும் வாசற்படியின்மேல் உடைந்து கிடந்தது; தாகோனுக்கு உடல்மாத்திரம் மீதியாக இருந்தது. 5 ஆதலால் இந்த நாள்வரைக்கும் தாகோனின் ஆசாரியர்களும் தாகோனின் கோவிலுக்குள் போகிற யாவரும் அஸ்தோத்திலிருக்கிற தாகோனுடைய வாசற்படியை மிதிக்கிறதில்லை. 6 அஸ்தோத் ஊர்க்காரர்களை வாதிக்கும்படி யெகோவாவுடைய கை அவர்கள்மேல் பாரமாயிருந்தது; அவர் அஸ்தோத்தின் மக்களையும், அதின் எல்லைகளுக்குள் இருக்கிறவர்களையும் மூலவியாதியினால் வாதித்தார். 7 இப்படி நடந்ததை அஸ்தோத்தின் மக்கள் பார்த்தபோது: இஸ்ரவேலின் தேவனுடைய கை நமதுமேலும், நம்முடைய தேவனாகிய தாகோனின்மேலும் கடினமாக இருந்ததால், அவருடைய பெட்டி நம்மிடத்தில் இருக்ககூடாது என்று சொல்லி; 8 பெலிஸ்தர்களின் அதிபதிகளையெல்லாம் அழைத்து, தங்களின் அருகிலே கூடிவரச் செய்து: இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை நாம் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அவர்கள்: இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை காத் பட்டணம்வரை எடுத்துச் சுற்றிக்கொண்டு போகவேண்டும் என்றார்கள்; அப்படியே இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை எடுத்துச் சுற்றிக்கொண்டு போனார்கள். 9 அதை எடுத்துச் சுற்றிக்கொண்டு போனபின்பு, யெகோவாவுடைய கை அந்தப் பட்டணத்தின்மேல் கடுங்கோபமாக இறங்கினது; அந்தப் பட்டணத்தின் மனிதருக்குள் சிறியவர் துவங்கிப் பெரியவர்வரை மூலவியாதியை உண்டாக்கி, அவர்களை வாதித்தார். 10 அதினால் அவர்கள் தேவனுடைய பெட்டியை எக்ரோனுக்கு அனுப்பினார்கள்; தேவனுடைய பெட்டி எக்ரோனுக்கு வருகிறபோது, எக்ரோன் ஊர்க்காரர்கள்: எங்களையும் எங்கள் மக்களையும் கொன்றுபோட, இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை எடுத்து, எங்கள் அருகில் சுற்றிக்கொண்டு வந்தார்கள் என்று கூக்குரலிட்டார்கள். 11 அவர்கள் பெலிஸ்தர்களின் அதிபதிகளையெல்லாம் கூடிவரும்படி அழைத்து: இஸ்ரவேலின் தேவன் எங்களையும் எங்கள் மக்களையும் கொன்றுபோடாதபடி, அவருடைய பெட்டியை அதின் இடத்திற்குத் திரும்ப அனுப்பிவிடுங்கள் என்றார்கள்; அந்தப் பட்டணமெங்கும் மரணம் அதிகமாக இருந்தது; தேவனுடைய கை அங்கே மகா பாரமாயிருந்தது. 12 இறந்துபோகாமல் இருந்தவர்கள் மூலவியாதியினால் வாதிக்கப்பட்டதினால், அந்தப் பட்டணத்தின் கூக்குரல் வானம்வரை எழும்பினது.
In Other Versions
1 Samuel 5 in the ANGEFD
1 Samuel 5 in the ANTPNG2D
1 Samuel 5 in the AS21
1 Samuel 5 in the BAGH
1 Samuel 5 in the BBPNG
1 Samuel 5 in the BBT1E
1 Samuel 5 in the BDS
1 Samuel 5 in the BEV
1 Samuel 5 in the BHAD
1 Samuel 5 in the BIB
1 Samuel 5 in the BLPT
1 Samuel 5 in the BNT
1 Samuel 5 in the BNTABOOT
1 Samuel 5 in the BNTLV
1 Samuel 5 in the BOATCB
1 Samuel 5 in the BOATCB2
1 Samuel 5 in the BOBCV
1 Samuel 5 in the BOCNT
1 Samuel 5 in the BOECS
1 Samuel 5 in the BOGWICC
1 Samuel 5 in the BOHCB
1 Samuel 5 in the BOHCV
1 Samuel 5 in the BOHLNT
1 Samuel 5 in the BOHNTLTAL
1 Samuel 5 in the BOICB
1 Samuel 5 in the BOILNTAP
1 Samuel 5 in the BOITCV
1 Samuel 5 in the BOKCV
1 Samuel 5 in the BOKCV2
1 Samuel 5 in the BOKHWOG
1 Samuel 5 in the BOKSSV
1 Samuel 5 in the BOLCB
1 Samuel 5 in the BOLCB2
1 Samuel 5 in the BOMCV
1 Samuel 5 in the BONAV
1 Samuel 5 in the BONCB
1 Samuel 5 in the BONLT
1 Samuel 5 in the BONUT2
1 Samuel 5 in the BOPLNT
1 Samuel 5 in the BOSCB
1 Samuel 5 in the BOSNC
1 Samuel 5 in the BOTLNT
1 Samuel 5 in the BOVCB
1 Samuel 5 in the BOYCB
1 Samuel 5 in the BPBB
1 Samuel 5 in the BPH
1 Samuel 5 in the BSB
1 Samuel 5 in the CCB
1 Samuel 5 in the CUV
1 Samuel 5 in the CUVS
1 Samuel 5 in the DBT
1 Samuel 5 in the DGDNT
1 Samuel 5 in the DHNT
1 Samuel 5 in the DNT
1 Samuel 5 in the ELBE
1 Samuel 5 in the EMTV
1 Samuel 5 in the ESV
1 Samuel 5 in the FBV
1 Samuel 5 in the FEB
1 Samuel 5 in the GGMNT
1 Samuel 5 in the GNT
1 Samuel 5 in the HARY
1 Samuel 5 in the HNT
1 Samuel 5 in the IRVA
1 Samuel 5 in the IRVB
1 Samuel 5 in the IRVG
1 Samuel 5 in the IRVH
1 Samuel 5 in the IRVK
1 Samuel 5 in the IRVM
1 Samuel 5 in the IRVM2
1 Samuel 5 in the IRVO
1 Samuel 5 in the IRVP
1 Samuel 5 in the IRVT2
1 Samuel 5 in the IRVU
1 Samuel 5 in the ISVN
1 Samuel 5 in the JSNT
1 Samuel 5 in the KAPI
1 Samuel 5 in the KBT1ETNIK
1 Samuel 5 in the KBV
1 Samuel 5 in the KJV
1 Samuel 5 in the KNFD
1 Samuel 5 in the LBA
1 Samuel 5 in the LBLA
1 Samuel 5 in the LNT
1 Samuel 5 in the LSV
1 Samuel 5 in the MAAL
1 Samuel 5 in the MBV
1 Samuel 5 in the MBV2
1 Samuel 5 in the MHNT
1 Samuel 5 in the MKNFD
1 Samuel 5 in the MNG
1 Samuel 5 in the MNT
1 Samuel 5 in the MNT2
1 Samuel 5 in the MRS1T
1 Samuel 5 in the NAA
1 Samuel 5 in the NASB
1 Samuel 5 in the NBLA
1 Samuel 5 in the NBS
1 Samuel 5 in the NBVTP
1 Samuel 5 in the NET2
1 Samuel 5 in the NIV11
1 Samuel 5 in the NNT
1 Samuel 5 in the NNT2
1 Samuel 5 in the NNT3
1 Samuel 5 in the PDDPT
1 Samuel 5 in the PFNT
1 Samuel 5 in the RMNT
1 Samuel 5 in the SBIAS
1 Samuel 5 in the SBIBS
1 Samuel 5 in the SBIBS2
1 Samuel 5 in the SBICS
1 Samuel 5 in the SBIDS
1 Samuel 5 in the SBIGS
1 Samuel 5 in the SBIHS
1 Samuel 5 in the SBIIS
1 Samuel 5 in the SBIIS2
1 Samuel 5 in the SBIIS3
1 Samuel 5 in the SBIKS
1 Samuel 5 in the SBIKS2
1 Samuel 5 in the SBIMS
1 Samuel 5 in the SBIOS
1 Samuel 5 in the SBIPS
1 Samuel 5 in the SBISS
1 Samuel 5 in the SBITS
1 Samuel 5 in the SBITS2
1 Samuel 5 in the SBITS3
1 Samuel 5 in the SBITS4
1 Samuel 5 in the SBIUS
1 Samuel 5 in the SBIVS
1 Samuel 5 in the SBT
1 Samuel 5 in the SBT1E
1 Samuel 5 in the SCHL
1 Samuel 5 in the SNT
1 Samuel 5 in the SUSU
1 Samuel 5 in the SUSU2
1 Samuel 5 in the SYNO
1 Samuel 5 in the TBIAOTANT
1 Samuel 5 in the TBT1E
1 Samuel 5 in the TBT1E2
1 Samuel 5 in the TFTIP
1 Samuel 5 in the TFTU
1 Samuel 5 in the TGNTATF3T
1 Samuel 5 in the THAI
1 Samuel 5 in the TNFD
1 Samuel 5 in the TNT
1 Samuel 5 in the TNTIK
1 Samuel 5 in the TNTIL
1 Samuel 5 in the TNTIN
1 Samuel 5 in the TNTIP
1 Samuel 5 in the TNTIZ
1 Samuel 5 in the TOMA
1 Samuel 5 in the TTENT
1 Samuel 5 in the UBG
1 Samuel 5 in the UGV
1 Samuel 5 in the UGV2
1 Samuel 5 in the UGV3
1 Samuel 5 in the VBL
1 Samuel 5 in the VDCC
1 Samuel 5 in the YALU
1 Samuel 5 in the YAPE
1 Samuel 5 in the YBVTP
1 Samuel 5 in the ZBP