Job 20 (BOITCV)
1 அதற்கு நாகமாத்தியனான சோப்பார் மறுமொழியாக சொன்னது: 2 “நான் மிகவும் கலக்கம் அடைந்திருக்கிறபடியால்,என் சிந்தனை மறுமொழிக்கூற என்னைத் தூண்டுகிறது. 3 என்னை அவமதிக்கும் கண்டனத்தை நான் கேட்கிறேன்;என் உள்ளுணர்வு என்னைப் பதிலளிக்கும்படி ஏவுகின்றது. 4 “மனிதன் பூமியில் தோன்றிய பூர்வகாலத்திலிருந்து,எவ்வாறு இருந்தது என்பது உனக்கு நிச்சயமாய்த் தெரியும்: 5 கொடியவர்களின் சந்தோஷம் குறுகியகாலம்,இறைவனை மறுதலிக்கிறவனின் மகிழ்ச்சி நொடிப்பொழுது. 6 இறைவனற்றவனின் பெருமை வானங்களை எட்டினாலும்,அவனுடைய தலை மேகங்களைத் தொட்டாலும், 7 அவன் உரம் போல அழிந்தே போவான்;அவனை முன்பு கண்டவர்கள், ‘அவன் எங்கே?’ என்று கேட்பார்கள். 8 ஒரு கனவைப்போல் அவன் பறந்துபோய், இனி ஒருபோதும் காணப்படமாட்டான்;இரவில் தோன்றும் தரிசனத்தைப்போல் மறைந்துபோகிறான். 9 அவனைப் பார்த்த கண் மீண்டும் அவனைப் பார்க்காது;அவனுடைய இருப்பிடமும் இனி அவனைக் காணாது. 10 அவனுடைய பிள்ளைகள் ஏழைகளின் தயவை நாடுவார்கள்;அவனுடைய கைகள் அவனுடைய செல்வத்தைத் திருப்பிக் கொடுக்கவேண்டும். 11 அவனுடைய எலும்புகளில் நிரம்பியிருக்கிற இளமையின் வலிமை,அவனுடன் தூசியில் கிடக்கும். 12 “தீமை இறைவனற்றவனின் வாயில் இனிமையாயிருந்தாலும்,அவன் அதைத் தன் நாவின்கீழ் மறைத்து வைக்கிறான். 13 அதை விட்டுவிட மனமில்லாமல்தன் வாயில் வைத்திருக்கிறான். 14 ஆனாலும் அவனுடைய உணவு அவன் வயிற்றுக்குள் புளிப்பாக மாறி,அவனுக்குள் பாம்பின் விஷம் போலாகிவிடும். 15 அவன் தான் விழுங்கிய செல்வத்தை வெளியே துப்பிவிடுவான்;இறைவன் அவனுடைய வயிற்றிலிருந்து அதை வெளியேறும்படி செய்வார். 16 அவன் பாம்புகளிலிருந்து நஞ்சை உறிஞ்சுவான்;விரியன் பாம்பின் நச்சு அவனைக் கொன்றுவிடும். 17 தேனும் வெண்ணெயும் ஓடும் ஆறுகளிலும்,நீரோடைகளிலும் அவன் இன்பம் காணமாட்டான். 18 அவன் தான் கஷ்டப்பட்டு உழைத்ததை உண்ணாமலே திருப்பிக் கொடுக்கவேண்டும்;அவன் தன் வியாபாரத்தின் இலாபத்தையும் அனுபவிப்பதில்லை. 19 அவன் ஏழைகளை ஒடுக்கி, அநாதைகளாக்கினான்;தான் கட்டாத வீடுகளைக் கைப்பற்றிக்கொண்டான். 20 “நிச்சயமாகவே இறைவனற்றவனுடைய ஆசைக்கு அளவேயில்லை;ஆதலால், தான் இச்சித்த பொக்கிஷங்களில் எதுவும் மீந்துவதில்லை. 21 அவன் விழுங்குவதற்கும் ஒன்றும் மீதமில்லை;அவனுடைய செழிப்பும் நிலைக்காது. 22 அவனுடைய நிறைவின் மத்தியில் துயரம் அவனை மேற்கொள்ளும்;அவலத்தின் கொடுமை முழுமையாய் அவன்மேல் வரும். 23 அவன் வயிறு நிரம்பும்போது,இறைவன் தமது கடுங்கோபத்தை அவன்மேல் வரப்பண்ணி,அடிமேல் அடியாக அவனை வாதிப்பார். 24 அவன் இரும்பு ஆயுதத்திற்குத் தப்பி ஓடினாலும்,வெண்கல முனையுள்ள அம்பு அவனைக் குத்துகிறது. 25 அவன் அதைத் தன் முதுகிலிருந்தும்,அதின் மினுங்கும் நுனியைத் தன் ஈரலிலிருந்தும் இழுத்தெடுக்கிறான்.பயங்கரங்கள் அவனை ஆட்கொள்கின்றன; 26 அவனுடைய பொக்கிஷங்கள் காரிருளில் கிடக்கும்.அணையாத நெருப்பு அவனைச் சுட்டெரித்து,அவனுடைய கூடாரத்தில் மீதியாயிருப்பதையும் விழுங்கிப்போடும். 27 வானங்கள் அவன் குற்றங்களை வெளிப்படுத்தும்;பூமி அவனுக்கெதிராக எழும்பும். 28 அவனுடைய வீட்டின் செல்வம் போய்விடும்;இறைவனுடைய கோபத்தின் நாளிலே, அதை வெள்ளம் அள்ளிக்கொண்டுபோகும். 29 கொடியவர்களுக்கு இறைவன் நியமித்த பலன் இதுவே;இறைவனால் அவர்களுக்கு நியமிக்கப்பட்ட பங்கும் இதுவே.”
In Other Versions
Job 20 in the ANGEFD
Job 20 in the ANTPNG2D
Job 20 in the AS21
Job 20 in the BAGH
Job 20 in the BBPNG
Job 20 in the BBT1E
Job 20 in the BDS
Job 20 in the BEV
Job 20 in the BHAD
Job 20 in the BIB
Job 20 in the BLPT
Job 20 in the BNT
Job 20 in the BNTABOOT
Job 20 in the BNTLV
Job 20 in the BOATCB
Job 20 in the BOATCB2
Job 20 in the BOBCV
Job 20 in the BOCNT
Job 20 in the BOECS
Job 20 in the BOGWICC
Job 20 in the BOHCB
Job 20 in the BOHCV
Job 20 in the BOHLNT
Job 20 in the BOHNTLTAL
Job 20 in the BOICB
Job 20 in the BOILNTAP
Job 20 in the BOKCV
Job 20 in the BOKCV2
Job 20 in the BOKHWOG
Job 20 in the BOKSSV
Job 20 in the BOLCB
Job 20 in the BOLCB2
Job 20 in the BOMCV
Job 20 in the BONAV
Job 20 in the BONCB
Job 20 in the BONLT
Job 20 in the BONUT2
Job 20 in the BOPLNT
Job 20 in the BOSCB
Job 20 in the BOSNC
Job 20 in the BOTLNT
Job 20 in the BOVCB
Job 20 in the BOYCB
Job 20 in the BPBB
Job 20 in the BPH
Job 20 in the BSB
Job 20 in the CCB
Job 20 in the CUV
Job 20 in the CUVS
Job 20 in the DBT
Job 20 in the DGDNT
Job 20 in the DHNT
Job 20 in the DNT
Job 20 in the ELBE
Job 20 in the EMTV
Job 20 in the ESV
Job 20 in the FBV
Job 20 in the FEB
Job 20 in the GGMNT
Job 20 in the GNT
Job 20 in the HARY
Job 20 in the HNT
Job 20 in the IRVA
Job 20 in the IRVB
Job 20 in the IRVG
Job 20 in the IRVH
Job 20 in the IRVK
Job 20 in the IRVM
Job 20 in the IRVM2
Job 20 in the IRVO
Job 20 in the IRVP
Job 20 in the IRVT
Job 20 in the IRVT2
Job 20 in the IRVU
Job 20 in the ISVN
Job 20 in the JSNT
Job 20 in the KAPI
Job 20 in the KBT1ETNIK
Job 20 in the KBV
Job 20 in the KJV
Job 20 in the KNFD
Job 20 in the LBA
Job 20 in the LBLA
Job 20 in the LNT
Job 20 in the LSV
Job 20 in the MAAL
Job 20 in the MBV
Job 20 in the MBV2
Job 20 in the MHNT
Job 20 in the MKNFD
Job 20 in the MNG
Job 20 in the MNT
Job 20 in the MNT2
Job 20 in the MRS1T
Job 20 in the NAA
Job 20 in the NASB
Job 20 in the NBLA
Job 20 in the NBS
Job 20 in the NBVTP
Job 20 in the NET2
Job 20 in the NIV11
Job 20 in the NNT
Job 20 in the NNT2
Job 20 in the NNT3
Job 20 in the PDDPT
Job 20 in the PFNT
Job 20 in the RMNT
Job 20 in the SBIAS
Job 20 in the SBIBS
Job 20 in the SBIBS2
Job 20 in the SBICS
Job 20 in the SBIDS
Job 20 in the SBIGS
Job 20 in the SBIHS
Job 20 in the SBIIS
Job 20 in the SBIIS2
Job 20 in the SBIIS3
Job 20 in the SBIKS
Job 20 in the SBIKS2
Job 20 in the SBIMS
Job 20 in the SBIOS
Job 20 in the SBIPS
Job 20 in the SBISS
Job 20 in the SBITS
Job 20 in the SBITS2
Job 20 in the SBITS3
Job 20 in the SBITS4
Job 20 in the SBIUS
Job 20 in the SBIVS
Job 20 in the SBT
Job 20 in the SBT1E
Job 20 in the SCHL
Job 20 in the SNT
Job 20 in the SUSU
Job 20 in the SUSU2
Job 20 in the SYNO
Job 20 in the TBIAOTANT
Job 20 in the TBT1E
Job 20 in the TBT1E2
Job 20 in the TFTIP
Job 20 in the TFTU
Job 20 in the TGNTATF3T
Job 20 in the THAI
Job 20 in the TNFD
Job 20 in the TNT
Job 20 in the TNTIK
Job 20 in the TNTIL
Job 20 in the TNTIN
Job 20 in the TNTIP
Job 20 in the TNTIZ
Job 20 in the TOMA
Job 20 in the TTENT
Job 20 in the UBG
Job 20 in the UGV
Job 20 in the UGV2
Job 20 in the UGV3
Job 20 in the VBL
Job 20 in the VDCC
Job 20 in the YALU
Job 20 in the YAPE
Job 20 in the YBVTP
Job 20 in the ZBP