Psalms 138 (BOITCV)
undefined தாவீதின் சங்கீதம். 1 யெகோவாவே, நான் என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்;“தெய்வங்கள்” முன்னிலையில் நான் உமக்குத் துதி பாடுவேன். 2 நான் உமது பரிசுத்த ஆலயத்தை நோக்கிப் பணிந்து,உமது உடன்படிக்கையின் அன்புக்காகவும் உம்முடைய சத்தியத்திற்காகவும்,உமது பெயரைத் துதிப்பேன்;ஏனெனில் எல்லாக் காரியங்களுக்கும் மேலாகஉமது பெயரையும், உமது வார்த்தையையும் உயர்த்தியிருக்கிறீர். 3 நான் கூப்பிட்டபோது நீர் எனக்குப் பதில் கொடுத்தீர்;நீர் என் ஆத்துமாவிலே பெலன் தந்து என்னை மிகவும் தைரியப்படுத்தினீர். 4 யெகோவாவே, பூமியின் அரசர்கள் எல்லோரும்உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது உம்மைத் துதிக்கட்டும். 5 யெகோவாவின் மகிமை பெரிதாக இருப்பதினால்,அவர்கள் யெகோவாவின் வழிகளைப் பாடுவார்கள். 6 யெகோவா உயர்ந்தவராக இருந்தும்,தாழ்மையுள்ளவர்களை அக்கறையுடன் நோக்கிப் பார்க்கிறார்;ஆனால் பெருமையுள்ளவர்களையோ அவர் தூரத்திலிருந்தே அறிகிறார். 7 துன்பத்தின் மத்தியிலே நான் நடக்கின்றபோதிலும்,நீர் என் உயிரைப் பாதுகாக்கிறீர்.என் பகைவரின் கோபத்திற்கு எதிராக நீர் உமது கையை நீட்டுகிறீர்;உமது வலதுகரத்தினால் என்னைக் காப்பாற்றுகிறீர். 8 யெகோவா என்னைக் குறித்த தமது நோக்கத்தை நிறைவேற்றுவார்;யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது;உமது கரத்தின் செயல்களைக் கைவிடாதேயும்.