Psalms 54 (BOITCV)
undefined தாவீது தங்களிடம் ஒளிந்திருக்கிறான் என்று சீப்பூரார் சவுலுக்கு சொன்னபோது, கம்பியிசைக் கருவிகளுடன் தாவீது பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மஸ்கீல் என்னும் சங்கீதம். 1 இறைவனே, உமது பெயரால் என்னைக் காப்பாற்றும்,உமது வல்லமையால் எனக்கு நியாயம் செய்யும். 2 இறைவனே, என் மன்றாட்டைக் கேளும்;என் வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடும். 3 தற்பெருமையுள்ளவர்கள் என்னைத் தாக்குகிறார்கள்;இறைவனை மதியாத, ஈவு இரக்கமற்ற மனிதர்என் உயிரை வாங்கத் தேடுகிறார்கள். 4 நிச்சயமாக இறைவனே எனக்கு உதவுபவர்;யெகோவாவே என்னை ஆதரிக்கிறவர். 5 எனக்குத் தீமை செய்கிறவர்கள் மேலேயே அவர்களுடைய தீமை திரும்பட்டும்;உமது உண்மையின் நிமித்தம் அவர்களை தண்டித்துவிடும். 6 நான் உமக்கு சுயவிருப்பக் காணிக்கையைப் பலியிடுவேன்;யெகோவாவே, நான் உமது பெயரைத் துதிப்பேன், ஏனெனில் அது நல்லது. 7 நீர் என்னை என்னுடைய எல்லாக் கஷ்டங்களிலிருந்தும் விடுவித்தீர்;என் கண்கள் என் எதிரிகளின் வீழ்ச்சியைப் பார்த்தன.