Job 18 (IRVT)
1 அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக: 2 “நீங்கள் எதுவரைக்கும் பேச்சுகளை முடிக்காதிருப்பீர்கள்?புத்திமான்களாயிருங்கள்; நாங்களும் பேசட்டும். 3 நாங்கள் மிருகங்களைப்போல எண்ணப்பட்டு,உங்கள் பார்வைக்குக் கீழானவர்களாக ஏன் இருக்கவேண்டும்? 4 கோபத்தினால் உன்னை நீயே காயப்படுத்துகிற உனக்காக பூமி அழிந்துபோகுமோ?கன்மலை தன்னிடத்தைவிட்டுப் பெயருமோ? 5 துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோகும்;அவனுடைய அடுப்பின் நெருப்பும் அவிந்துபோகும். 6 அவனுடைய கூடாரத்தில் வெளிச்சம் இருளாக்கப்படும்;அவனுடைய விளக்கு அவனுடனே அணைந்துபோகும். 7 அவன் பெலனாய் நடந்த நடைகள் குறைந்துபோகும் அவனுடைய ஆலோசனை அவனை விழவைக்கும். 8 அவன் தன் கால்களினால் வலையில் பிடிபட்டு,வலையின் சிக்கலிலே நடக்கிறான். 9 கண்ணி அவனுடைய குதிகாலைப் பிடிக்கும்;பறிகாரர் அவனை மேற்கொள்வார்கள். 10 அவனுக்காகச் சுருக்கு தரையிலும்,அவனுக்காகக் கண்ணி வழியிலும் வைக்கப்பட்டிருக்கிறது. 11 சுற்றிலுமிருந்து உண்டாகும் பயங்கரங்கள் அவனை அதிர்ச்சியடையச்செய்து,அவனுடைய கால்களைத் திசைதெரியாமல் அலையவைக்கும். 12 அவன் பசியினால் பெலனற்றுப்போவான்;அவன் பக்கத்தில் ஆபத்து ஆயத்தமாக நிற்கும். 13 அது அவனுடைய அங்கத்தின் பலத்தை எரிக்கும்;பயங்கரமான மரணமே அவனுடைய உறுப்புகளை எரிக்கும். 14 அவனுடைய நம்பிக்கை அவனுடைய கூடாரத்திலிருந்து வேருடன் பிடுங்கப்படும்;அது அவனைப் பயங்கரமான ராஜாவினிடத்தில் துரத்தும். 15 அவனுக்கு ஒன்றுமில்லாமற் போனதினால்,பயங்கரம் அவனுடைய கூடாரத்தில் குடியிருக்கும்;கந்தகம் அவனுடைய குடியிருப்பின்மேல் தெளிக்கப்படும். 16 கீழே இருக்கிற அவனுடைய வேர்கள் அழிந்துபோகும்;மேலே இருக்கிற அவனுடைய கிளைகள் பட்டுப்போகும். 17 அவனை நினைக்கும் நினைவு பூமியிலிருந்து அழியும்,வீதிகளில் அவன் பெயரில்லாமற்போகும். 18 அவன் வெளிச்சத்திலிருந்து இருளில் துரத்திவிடப்பட்டு,பூலோகத்திலிருந்து தள்ளுண்டுபோவான். 19 அவனுடைய மக்களுக்குள்ளே அவனுக்கு மகனும் இல்லை மகளும் இல்லை;அவனுடைய வீட்டில் மீதியாயிருக்க வேண்டியவன் ஒருவனும் இல்லை. 20 அவனுடைய அழிவின் காலத்தில் மேற்கில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்ததுபோல,கிழக்கில் உள்ள மக்களும் அதிர்ச்சியடைவார்கள். 21 அக்கிரமக்காரன் குடியிருந்த இடங்கள் இவைகள்தான்;தேவனை அறியாமற்போனவனுடைய இடம் இதுவே என்பார்கள்” என்றான்.