Numbers 19 (IRVT)
1 யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி: 2 “யெகோவா கற்பித்த நியமப்பிரமாணமாவது: பழுதற்றதும் ஊனமில்லாததும் நுகத்தடிக்கு பயன்படுத்தாதுமாகிய சிவப்பான ஒரு கிடாரியை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் மக்களுக்குச் சொல்லுங்கள். 3 அதை எலெயாசார் என்னும் ஆசாரியனிடத்தில் ஒப்புக்கொடுங்கள்; அவன் அதைப் முகாமிற்கு வெளியே கொண்டுபோகவேண்டும்; அங்கே அது அவனுக்கு முன்பாகக் கொல்லப்படக்கடவது. 4 அப்பொழுது ஆசாரியனாகிய எலெயாசார் தன்னுடைய விரலினால் அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக் கூடாரத்திற்கு எதிராக ஏழுதரம் தெளிக்கவேண்டும். 5 பின்பு கிடாரியை அவன் கண்களுக்கு முன்பாக ஒருவன் சுட்டெரிக்கவேண்டும்; அதின் தோலும் அதின் இறைச்சியும் அதின் இரத்தமும் அதின் சாணியும் சுட்டெரிக்கப்படவேண்டும். 6 அப்பொழுது ஆசாரியன் கேதுருக்கட்டையையும் ஈசோப்பையும் சிவப்பு நூலையும் எடுத்து, கிடாரி எரிக்கப்படுகிற நெருப்பின் நடுவிலே போடவேண்டும். 7 பின்பு ஆசாரியன் தன்னுடைய ஆடைகளைத் தோய்த்து, தண்ணீரிலே குளித்து, அதின்பின்பு முகாமில் நுழையவேண்டும்; ஆசாரியன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான். 8 அதைச் சுட்டெரித்தவனும் தன்னுடைய ஆடைகளை தண்ணீரில் தோய்த்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான். 9 சுத்தமாக இருக்கிற ஒருவன் அந்தக் கிடாரியின் சாம்பலை வாரிக்கொண்டு, முகாமிற்கு வெளியே சுத்தமான ஒரு இடத்திலே கொட்டிவைக்கவேண்டும்; அது இஸ்ரவேல் மக்களின் சபைக்காகத் தீட்டுக்கழிக்கும் தண்ணீருக்கென்று பாதுகாத்து வைக்கப்படவேண்டும்; அது பாவத்தைப் பரிகரிக்கும். 10 கிடாரியின் சாம்பலை வாரினவன் தன்னுடைய ஆடைகளைத் துவைக்கவேண்டும்; அவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்; இது இஸ்ரவேல் மக்களுக்கும் அவர்கள் நடுவிலே தங்குகிற அந்நியனுக்கும் நித்திய கட்டளையாக இருப்பதாக. 11 “இறந்தவனுடைய பிரேதத்தைத் தொட்டவன் ஏழுநாட்கள் தீட்டுப்பட்டிருப்பான். 12 அவன் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தீட்டுக்கழிக்கும் தண்ணீரினால் தன்னைச் சுத்திகரிக்கவேண்டும்; அப்பொழுது சுத்தமாவான்; மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தன்னைச் சுத்திகரிக்காமல் இருந்தால் சுத்தமாகமாட்டான். 13 செத்தவனுடைய பிரேதத்தைத் தொட்டும், தன்னைச் சுத்திகரித்துக்கொள்ளாதவன் யெகோவாவின் வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்துகிறான்; அந்த ஆத்துமா இஸ்ரவேலில் இல்லாமல் அழிந்துபோவான்; தீட்டுக்கழிக்கும் தண்ணீர் அவன்மேல் தெளிக்கப்படாததினால், அவன் தீட்டுப்பட்டிருப்பான்; அவனுடைய தீட்டு இன்னும் அவன்மேல் இருக்கும். 14 “கூடாரத்தில் ஒரு மனிதன் செத்தால், அதைச்சேர்ந்த நியமமாவது: அந்தக் கூடாரத்தில் நுழைகிற யாவரும் கூடாரத்தில் இருக்கிற யாவரும் ஏழுநாட்கள் தீட்டுப்பட்டிருப்பார்கள். 15 மூடிக் கட்டப்படாமல் திறந்திருக்கும் பாத்திரங்கள் எல்லாம் தீட்டுப்பட்டிருக்கும். 16 வெளியிலே பட்டயத்தால் வெட்டப்பட்டவனையோ, செத்தவனையோ, மனித எலும்பையோ, பிரேதக்குழியையோ, தொட்டவன் எவனும் ஏழுநாட்கள் தீட்டுப்பட்டிருப்பான். 17 ஆகையால் தீட்டுப்பட்டவனுக்காக, பாவத்தைப் பரிகரிக்கும் கிடாரியின் சாம்பலிலே கொஞ்சம் எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதின்மேல் ஊற்று தண்ணீர் ஊற்றவேண்டும். 18 சுத்தமான ஒருவன் ஈசோப்பை எடுத்து, அந்த தண்ணீரிலே நனைத்து, கூடாரத்தின்மேலும் அதிலுள்ள எல்லா பணிப்பொருட்களின்மேலும் அங்கேயிருக்கிற மக்களின்மேலும் தெளிக்கிறதும் இல்லாமல், எலும்பையோ வெட்டப்பட்டவனையோ செத்தவனையோ பிரேதக்குழியையோ தொட்டவன்மேலும் தெளிக்கவேண்டும். 19 சுத்தமாக இருக்கிறவன் தீட்டுப்பட்டவன்மேல் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தெளிக்கவேண்டும்; ஏழாம் நாளில் இவன் தன்னைச் சுத்திகரித்து, தன்னுடைய ஆடைகளைத் தோய்த்து, தண்ணீரில் குளித்து, மாலையிலே சுத்தமாக இருப்பான். 20 “தீட்டுப்பட்டிருக்கிறவன் தன்னைச் சுத்திகரித்துக்கொள்ளாமல் இருந்தால், அவன் சபையில் இல்லாதபடி அழிந்துபோவான்; அவன் யெகோவாவின் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினான்; தீட்டுக்கழிக்கும் தண்ணீர் அவன்மேல் தெளிக்கப்படாததினால் அவன் தீட்டுப்பட்டிருக்கிறான். 21 தீட்டுக்கழிக்கும் தண்ணீரைத் தெளிக்கிறவனும் தன்னுடைய ஆடைகளைத் துவைக்கவேண்டும்; தீட்டுக்கழிக்கும் தண்ணீரைத் தொட்டவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான். 22 தீட்டுப்பட்டிருக்கிறவன் தொடுகிறவைகளெல்லாம் தீட்டுப்படும், அவைகளைத் தொடுகிறவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்; இது உங்களுக்கு நிரந்தர கட்டளையாக இருக்கும்” என்றார்.
In Other Versions
Numbers 19 in the ANGEFD
Numbers 19 in the ANTPNG2D
Numbers 19 in the AS21
Numbers 19 in the BAGH
Numbers 19 in the BBPNG
Numbers 19 in the BBT1E
Numbers 19 in the BDS
Numbers 19 in the BEV
Numbers 19 in the BHAD
Numbers 19 in the BIB
Numbers 19 in the BLPT
Numbers 19 in the BNT
Numbers 19 in the BNTABOOT
Numbers 19 in the BNTLV
Numbers 19 in the BOATCB
Numbers 19 in the BOATCB2
Numbers 19 in the BOBCV
Numbers 19 in the BOCNT
Numbers 19 in the BOECS
Numbers 19 in the BOGWICC
Numbers 19 in the BOHCB
Numbers 19 in the BOHCV
Numbers 19 in the BOHLNT
Numbers 19 in the BOHNTLTAL
Numbers 19 in the BOICB
Numbers 19 in the BOILNTAP
Numbers 19 in the BOITCV
Numbers 19 in the BOKCV
Numbers 19 in the BOKCV2
Numbers 19 in the BOKHWOG
Numbers 19 in the BOKSSV
Numbers 19 in the BOLCB
Numbers 19 in the BOLCB2
Numbers 19 in the BOMCV
Numbers 19 in the BONAV
Numbers 19 in the BONCB
Numbers 19 in the BONLT
Numbers 19 in the BONUT2
Numbers 19 in the BOPLNT
Numbers 19 in the BOSCB
Numbers 19 in the BOSNC
Numbers 19 in the BOTLNT
Numbers 19 in the BOVCB
Numbers 19 in the BOYCB
Numbers 19 in the BPBB
Numbers 19 in the BPH
Numbers 19 in the BSB
Numbers 19 in the CCB
Numbers 19 in the CUV
Numbers 19 in the CUVS
Numbers 19 in the DBT
Numbers 19 in the DGDNT
Numbers 19 in the DHNT
Numbers 19 in the DNT
Numbers 19 in the ELBE
Numbers 19 in the EMTV
Numbers 19 in the ESV
Numbers 19 in the FBV
Numbers 19 in the FEB
Numbers 19 in the GGMNT
Numbers 19 in the GNT
Numbers 19 in the HARY
Numbers 19 in the HNT
Numbers 19 in the IRVA
Numbers 19 in the IRVB
Numbers 19 in the IRVG
Numbers 19 in the IRVH
Numbers 19 in the IRVK
Numbers 19 in the IRVM
Numbers 19 in the IRVM2
Numbers 19 in the IRVO
Numbers 19 in the IRVP
Numbers 19 in the IRVT2
Numbers 19 in the IRVU
Numbers 19 in the ISVN
Numbers 19 in the JSNT
Numbers 19 in the KAPI
Numbers 19 in the KBT1ETNIK
Numbers 19 in the KBV
Numbers 19 in the KJV
Numbers 19 in the KNFD
Numbers 19 in the LBA
Numbers 19 in the LBLA
Numbers 19 in the LNT
Numbers 19 in the LSV
Numbers 19 in the MAAL
Numbers 19 in the MBV
Numbers 19 in the MBV2
Numbers 19 in the MHNT
Numbers 19 in the MKNFD
Numbers 19 in the MNG
Numbers 19 in the MNT
Numbers 19 in the MNT2
Numbers 19 in the MRS1T
Numbers 19 in the NAA
Numbers 19 in the NASB
Numbers 19 in the NBLA
Numbers 19 in the NBS
Numbers 19 in the NBVTP
Numbers 19 in the NET2
Numbers 19 in the NIV11
Numbers 19 in the NNT
Numbers 19 in the NNT2
Numbers 19 in the NNT3
Numbers 19 in the PDDPT
Numbers 19 in the PFNT
Numbers 19 in the RMNT
Numbers 19 in the SBIAS
Numbers 19 in the SBIBS
Numbers 19 in the SBIBS2
Numbers 19 in the SBICS
Numbers 19 in the SBIDS
Numbers 19 in the SBIGS
Numbers 19 in the SBIHS
Numbers 19 in the SBIIS
Numbers 19 in the SBIIS2
Numbers 19 in the SBIIS3
Numbers 19 in the SBIKS
Numbers 19 in the SBIKS2
Numbers 19 in the SBIMS
Numbers 19 in the SBIOS
Numbers 19 in the SBIPS
Numbers 19 in the SBISS
Numbers 19 in the SBITS
Numbers 19 in the SBITS2
Numbers 19 in the SBITS3
Numbers 19 in the SBITS4
Numbers 19 in the SBIUS
Numbers 19 in the SBIVS
Numbers 19 in the SBT
Numbers 19 in the SBT1E
Numbers 19 in the SCHL
Numbers 19 in the SNT
Numbers 19 in the SUSU
Numbers 19 in the SUSU2
Numbers 19 in the SYNO
Numbers 19 in the TBIAOTANT
Numbers 19 in the TBT1E
Numbers 19 in the TBT1E2
Numbers 19 in the TFTIP
Numbers 19 in the TFTU
Numbers 19 in the TGNTATF3T
Numbers 19 in the THAI
Numbers 19 in the TNFD
Numbers 19 in the TNT
Numbers 19 in the TNTIK
Numbers 19 in the TNTIL
Numbers 19 in the TNTIN
Numbers 19 in the TNTIP
Numbers 19 in the TNTIZ
Numbers 19 in the TOMA
Numbers 19 in the TTENT
Numbers 19 in the UBG
Numbers 19 in the UGV
Numbers 19 in the UGV2
Numbers 19 in the UGV3
Numbers 19 in the VBL
Numbers 19 in the VDCC
Numbers 19 in the YALU
Numbers 19 in the YAPE
Numbers 19 in the YBVTP
Numbers 19 in the ZBP