Ezekiel 25 (BOITCV)
1 யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது. 2 “மனுபுத்திரனே, நீ அம்மோனியருக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி அவர்களுக்கு விரோதமாய் இறைவாக்கு உரைத்து. 3 அவர்களுக்குச் சொல்லவேண்டியதாவது: ஆண்டவராகிய யெகோவா சொல்வதைக் கேளுங்கள். ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. என் பரிசுத்த ஆலயம் தூய்மைக் கேடாக்கப்பட்டபோதும், இஸ்ரயேல் பாழாக்கப்பட்டபோதும், யூதா மக்கள் நாடுகடத்தப்பட்டபோதும் “ஆகா!” என்று நீங்கள் சொன்னீர்கள் அல்லவா? 4 ஆகவே நான் உங்களைக் கீழ்த்திசையைச் சேர்ந்த மக்களுக்கு உரிமையாகக் கொடுக்கப்போகிறேன். அவர்கள் உங்கள் மத்தியில் தங்களுக்கு முகாம்களை அமைத்துத் தங்கள் கூடாரங்களையும் போடுவார்கள். உங்கள் பழங்களைச் சாப்பிட்டு, உங்கள் பாலைக் குடிப்பார்கள். 5 நான் ரப்பா பட்டணத்தை ஒட்டகங்களின் மேய்ச்சலிடமாக மாற்றுவேன். அம்மோனை செம்மறியாடுகளின் இளைப்பாறுகிற இடமாகவும் மாற்றுவேன். அப்பொழுது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். 6 ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நீங்கள் கைகொட்டி, துள்ளிக் குதித்து, இஸ்ரயேல் நாட்டுக்கு விரோதமாக உங்கள் மனதில் தீய எண்ணங்கொண்டு மகிழ்ந்தீர்கள். 7 ஆகவே நான் உங்களுக்கு விரோதமாய் என் கையை நீட்டி, பல நாடுகளுக்கும் கொள்ளைப்பொருளாக உங்களை ஒப்புவிப்பேன். உங்களைப் பல நாடுகளிலிருந்தும் வேரறுத்து, நாடுகளிலிருந்து முற்றிலும் அழிப்பேன். நான் உங்களை அழிப்பேன். அப்பொழுது நானே யெகோவா’ ” என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். 8 “ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: ‘ “பாருங்கள் யூதா குடும்பத்தார் மற்ற எல்லா ஜனங்களைப் போலானார்கள்” என மோவாபும் சேயீரும் சொன்னார்களே. 9 ஆகவே நான் மோவாபின் மலைப்பக்கங்களை பகைவர்கள் தாக்க அனுமதிப்பேன். அவர்கள் அந்த நாட்டின் மகிமையான எல்லைப் பட்டணங்களான பெத்யெசிமோத், பாகால் மெயோன், கீரியாத்தாயீம் ஆகியவற்றைத் தாக்குவார்கள். 10 மோவாபியரை அம்மோனியரோடுகூட கீழ்த்திசை மக்களுக்கு உரிமையாகக் கொடுப்பேன். அப்பொழுது அம்மோனியர் பல நாடுகளுக்குள்ளும் நினைக்கப்படமாட்டார்கள். 11 நான் மோவாபியரையும் தண்டிப்பேன். அப்பொழுது அவர்கள் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள்.’ ” 12 “ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: ‘ஏதோம் யூதா வீட்டாரைப் பழிவாங்கி, அதன் காரணமாக பெரும் குற்றவாளியாகிவிட்டது. 13 ஆகவே ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நான் ஏதோமுக்கெதிராக எனது கரத்தை நீட்டி, அதன் மனிதரையும் அவர்களுடைய மிருகங்களையும் கொல்லுவேன். அதை நான் பாழாக்குவேன். அங்குள்ளோர் தேமானிலிருந்து தேதான்வரை வாளினால் மடிவார்கள். 14 நான் என் மக்களாகிய இஸ்ரயேலரின் கைகளினால் ஏதோமைப் பழிவாங்குவேன். அவர்கள் என் கோபத்திற்கும் கடுங்கோபத்திற்கும் ஏற்றபடி ஏதோமுக்குச் செய்வார்கள். அப்பொழுது நான் பழிவாங்குவது இன்னதென்று அறிந்துகொள்வார்கள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.’ ” 15 “ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. ‘பெலிஸ்தியர் பழைய பகையினிமித்தம் யூதாவை அழிக்க எண்ணி, தங்கள் உள்ளத்தின் தீய எண்ணங்களால் பழிவாங்கினார்கள். 16 ஆகவே ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நான் பெலிஸ்தியருக்கு விரோதமாய் எனது கரத்தை நீட்டப்போகிறேன். கிரேத்தியரை நான் வேரோடழிப்பேன். கடற்கரையில் எஞ்சி இருப்பவர்களையும் அழிப்பேன். 17 நான் அவர்களைக் கொடுமையாய்ப் பழிவாங்கி, என் கோபத்தில் அவர்களைத் தண்டிப்பேன். அவர்களை நான் பழிவாங்கும்போது, நானே யெகோவா என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்’ ” என்றார்.
In Other Versions
Ezekiel 25 in the ANGEFD
Ezekiel 25 in the ANTPNG2D
Ezekiel 25 in the AS21
Ezekiel 25 in the BAGH
Ezekiel 25 in the BBPNG
Ezekiel 25 in the BBT1E
Ezekiel 25 in the BDS
Ezekiel 25 in the BEV
Ezekiel 25 in the BHAD
Ezekiel 25 in the BIB
Ezekiel 25 in the BLPT
Ezekiel 25 in the BNT
Ezekiel 25 in the BNTABOOT
Ezekiel 25 in the BNTLV
Ezekiel 25 in the BOATCB
Ezekiel 25 in the BOATCB2
Ezekiel 25 in the BOBCV
Ezekiel 25 in the BOCNT
Ezekiel 25 in the BOECS
Ezekiel 25 in the BOGWICC
Ezekiel 25 in the BOHCB
Ezekiel 25 in the BOHCV
Ezekiel 25 in the BOHLNT
Ezekiel 25 in the BOHNTLTAL
Ezekiel 25 in the BOICB
Ezekiel 25 in the BOILNTAP
Ezekiel 25 in the BOKCV
Ezekiel 25 in the BOKCV2
Ezekiel 25 in the BOKHWOG
Ezekiel 25 in the BOKSSV
Ezekiel 25 in the BOLCB
Ezekiel 25 in the BOLCB2
Ezekiel 25 in the BOMCV
Ezekiel 25 in the BONAV
Ezekiel 25 in the BONCB
Ezekiel 25 in the BONLT
Ezekiel 25 in the BONUT2
Ezekiel 25 in the BOPLNT
Ezekiel 25 in the BOSCB
Ezekiel 25 in the BOSNC
Ezekiel 25 in the BOTLNT
Ezekiel 25 in the BOVCB
Ezekiel 25 in the BOYCB
Ezekiel 25 in the BPBB
Ezekiel 25 in the BPH
Ezekiel 25 in the BSB
Ezekiel 25 in the CCB
Ezekiel 25 in the CUV
Ezekiel 25 in the CUVS
Ezekiel 25 in the DBT
Ezekiel 25 in the DGDNT
Ezekiel 25 in the DHNT
Ezekiel 25 in the DNT
Ezekiel 25 in the ELBE
Ezekiel 25 in the EMTV
Ezekiel 25 in the ESV
Ezekiel 25 in the FBV
Ezekiel 25 in the FEB
Ezekiel 25 in the GGMNT
Ezekiel 25 in the GNT
Ezekiel 25 in the HARY
Ezekiel 25 in the HNT
Ezekiel 25 in the IRVA
Ezekiel 25 in the IRVB
Ezekiel 25 in the IRVG
Ezekiel 25 in the IRVH
Ezekiel 25 in the IRVK
Ezekiel 25 in the IRVM
Ezekiel 25 in the IRVM2
Ezekiel 25 in the IRVO
Ezekiel 25 in the IRVP
Ezekiel 25 in the IRVT
Ezekiel 25 in the IRVT2
Ezekiel 25 in the IRVU
Ezekiel 25 in the ISVN
Ezekiel 25 in the JSNT
Ezekiel 25 in the KAPI
Ezekiel 25 in the KBT1ETNIK
Ezekiel 25 in the KBV
Ezekiel 25 in the KJV
Ezekiel 25 in the KNFD
Ezekiel 25 in the LBA
Ezekiel 25 in the LBLA
Ezekiel 25 in the LNT
Ezekiel 25 in the LSV
Ezekiel 25 in the MAAL
Ezekiel 25 in the MBV
Ezekiel 25 in the MBV2
Ezekiel 25 in the MHNT
Ezekiel 25 in the MKNFD
Ezekiel 25 in the MNG
Ezekiel 25 in the MNT
Ezekiel 25 in the MNT2
Ezekiel 25 in the MRS1T
Ezekiel 25 in the NAA
Ezekiel 25 in the NASB
Ezekiel 25 in the NBLA
Ezekiel 25 in the NBS
Ezekiel 25 in the NBVTP
Ezekiel 25 in the NET2
Ezekiel 25 in the NIV11
Ezekiel 25 in the NNT
Ezekiel 25 in the NNT2
Ezekiel 25 in the NNT3
Ezekiel 25 in the PDDPT
Ezekiel 25 in the PFNT
Ezekiel 25 in the RMNT
Ezekiel 25 in the SBIAS
Ezekiel 25 in the SBIBS
Ezekiel 25 in the SBIBS2
Ezekiel 25 in the SBICS
Ezekiel 25 in the SBIDS
Ezekiel 25 in the SBIGS
Ezekiel 25 in the SBIHS
Ezekiel 25 in the SBIIS
Ezekiel 25 in the SBIIS2
Ezekiel 25 in the SBIIS3
Ezekiel 25 in the SBIKS
Ezekiel 25 in the SBIKS2
Ezekiel 25 in the SBIMS
Ezekiel 25 in the SBIOS
Ezekiel 25 in the SBIPS
Ezekiel 25 in the SBISS
Ezekiel 25 in the SBITS
Ezekiel 25 in the SBITS2
Ezekiel 25 in the SBITS3
Ezekiel 25 in the SBITS4
Ezekiel 25 in the SBIUS
Ezekiel 25 in the SBIVS
Ezekiel 25 in the SBT
Ezekiel 25 in the SBT1E
Ezekiel 25 in the SCHL
Ezekiel 25 in the SNT
Ezekiel 25 in the SUSU
Ezekiel 25 in the SUSU2
Ezekiel 25 in the SYNO
Ezekiel 25 in the TBIAOTANT
Ezekiel 25 in the TBT1E
Ezekiel 25 in the TBT1E2
Ezekiel 25 in the TFTIP
Ezekiel 25 in the TFTU
Ezekiel 25 in the TGNTATF3T
Ezekiel 25 in the THAI
Ezekiel 25 in the TNFD
Ezekiel 25 in the TNT
Ezekiel 25 in the TNTIK
Ezekiel 25 in the TNTIL
Ezekiel 25 in the TNTIN
Ezekiel 25 in the TNTIP
Ezekiel 25 in the TNTIZ
Ezekiel 25 in the TOMA
Ezekiel 25 in the TTENT
Ezekiel 25 in the UBG
Ezekiel 25 in the UGV
Ezekiel 25 in the UGV2
Ezekiel 25 in the UGV3
Ezekiel 25 in the VBL
Ezekiel 25 in the VDCC
Ezekiel 25 in the YALU
Ezekiel 25 in the YAPE
Ezekiel 25 in the YBVTP
Ezekiel 25 in the ZBP