Numbers 30 (BOITCV)
1 மோசே இஸ்ரயேல் கோத்திரத்தின் தலைவர்களிடம் சொன்னதாவது: “யெகோவா கட்டளையிடுவது இதுவே: 2 ஒரு மனிதன் யெகோவாவுடன் பொருத்தனைபண்ணுகிறபோதோ அல்லது ஒரு வாக்குறுதியின்படி தான் நடப்பதாக ஆணையிடும்போதோ, அவன் தன் வாக்கை மீறாமல் தான் சொன்ன எல்லாவற்றின்படியும் செய்யவேண்டும். 3 “ஒரு இளம்பெண் தன் தகப்பன் வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, யெகோவாவுக்கு ஒரு நேர்த்திக்கடனைச் செய்திருக்கலாம் அல்லது ஒரு வாக்குறுதியின்படி நடப்பதற்குத் தன்னைக் கடமைப்படுத்தி இருக்கலாம். 4 அப்போது அவளுடைய தகப்பன் அவளுடைய நேர்த்திக்கடனைப்பற்றியோ, வாக்குறுதியைப்பற்றியோ கேள்விப்பட்டும், அவளுக்கு ஒன்றும் சொல்லாதிருந்தால், அவள் செய்வதாக வாக்களித்த அவளுடைய எல்லா நேர்த்திக்கடன்களும் எல்லா வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவேண்டும். 5 ஆனால் அவளுடைய தகப்பன் அதைப்பற்றிக் கேள்விப்படும்போது, அவளை தடைசெய்தால், அவள் தான் செய்வதாகச் சொன்ன எந்தவொரு நேர்த்திக்கடனோ வாக்குறுதியோ நிறைவேற்றப்படத் தேவையில்லை. அவள் தகப்பன் அவளைத் தடைசெய்தபடியால், யெகோவா அவளை அதிலிருந்து நீங்கலாக்குகிறார். 6 “ஒரு நேர்த்திக்கடனைச் செய்தபின்போ அல்லது தன் உதடுகளால் முன்யோசனையின்றி வாக்குப்பண்ணி கடமைப்படுத்திய பின்போ அவள் திருமணம் செய்திருக்கலாம். 7 அப்போது அவள் கணவன் அதைப்பற்றிக் கேள்விப்பட்டும் அவளுக்குத் தடையொன்றும் தெரிவிக்காவிட்டால், அவள் செய்வதாக வாக்களித்த அவளுடைய எல்லா நேர்த்திக்கடன்களும், எல்லா வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவேண்டும். 8 ஆனால் அவள் கணவன் அதைப்பற்றிக் கேள்விப்படும்போது அவளைத் தடுத்தால், அவள் தான் செய்வதாகச் சொன்ன நேர்த்திக்கடனையும், தான் கைக்கொண்டு நடப்பதாகச்சொன்ன அவளுடைய முன்யோசனையின்றிச் செய்த வாக்குறுதிகளையும் அவளுடைய கணவன் இல்லாமலாக்கிவிடுகிறான். ஆகவே யெகோவா அவளை அதிலிருந்து நீங்கலாக்குகிறார். 9 “ஆனால் ஒரு விதவையோ அல்லது விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணோ எந்த ஒரு நேர்த்திக்கடனையோ அல்லது வாக்குறுதியையோ செய்தால் அதற்கு அவள் கட்டுப்பட்டே ஆகவேண்டும். 10 “தன் கணவனோடு வாழ்கின்ற ஒரு பெண் ஒரு நேர்த்திக்கடனைச் செய்தோ அல்லது ஒரு வாக்குறுதியை ஆணையிட்டுக்கொடுத்தோ தன்னைக் கடமைப்படுத்தக்கூடும். 11 அப்போது அவள் கணவன் அதைப்பற்றிக் கேள்விப்பட்டு ஒன்றும் சொல்லாமலும், அவளைத் தடை செய்யாமலும் இருந்தால், அவள் தன்னுடைய நேர்த்திக்கடனையும், தன்னைக் கட்டுப்படுத்த அவள் கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவேண்டும். 12 ஆனால் அவள் கணவன் அவற்றைப்பற்றிக் கேள்விப்படும்போது, அவற்றை இல்லாமல் செய்தால் அவளின் வாயிலிருந்து புறப்பட்ட நேர்த்திக்கடனையோ வாக்குறுதியையோ அவள் நிறைவேற்ற வேண்டியதில்லை. அவளுடைய கணவன் அவற்றை இல்லாமல் செய்துவிட்டான். ஆகவே யெகோவாவும் அவளை அவைகளிலிருந்து நீங்கலாக்கிவிடுவார். 13 அவள் செய்யும் எந்த நேர்த்திக்கடனையோ அல்லது தன்னை தாழ்மைப்படுத்தும்படி அவள் கொடுக்கும் எந்த வாக்குறுதியையோ நிலைக்கச் செய்யவும், இல்லாமல் செய்யவும் அவள் கணவனுக்கு உரிமை உண்டு. 14 அவள் கணவன் அதைப்பற்றி அறிந்தும், ஒருநாளும் அதைப்பற்றி அவளுக்கு ஒன்றும் சொல்லாதிருந்தால், அப்பொழுது அவளுடைய நேர்த்திக்கடன்களையும், தன்னைக் கட்டுப்படுத்தும் வாக்குறுதிகளையும் உறுதிப்படுத்துகிறான். அவன் அவற்றைப்பற்றிக் கேள்விப்பட்டும் அதைப்பற்றி அவளுக்கு ஒன்றும் சொல்லாதிருந்தபடியால், அவன் அவற்றை உறுதிப்படுத்துகிறான். 15 ஆனாலும், அவன் அவற்றைப்பற்றிக் கேள்விப்பட்டும் சிறிதுகாலம் கழித்தே அதை இல்லாமல் செய்வானாகில், அவளுடைய குற்றத்திற்கு அவனே பொறுப்பாளியாவான்.” 16 ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையிலும், ஒரு தகப்பனுக்கும், அவனுடைய வீட்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் இளவயதான மகளுக்கும் இடையிலும் உள்ள உறவுகளைப்பற்றி யெகோவா மோசேக்குக் கொடுத்த விதிமுறைகள் இவையே.
In Other Versions
Numbers 30 in the ANGEFD
Numbers 30 in the ANTPNG2D
Numbers 30 in the AS21
Numbers 30 in the BAGH
Numbers 30 in the BBPNG
Numbers 30 in the BBT1E
Numbers 30 in the BDS
Numbers 30 in the BEV
Numbers 30 in the BHAD
Numbers 30 in the BIB
Numbers 30 in the BLPT
Numbers 30 in the BNT
Numbers 30 in the BNTABOOT
Numbers 30 in the BNTLV
Numbers 30 in the BOATCB
Numbers 30 in the BOATCB2
Numbers 30 in the BOBCV
Numbers 30 in the BOCNT
Numbers 30 in the BOECS
Numbers 30 in the BOGWICC
Numbers 30 in the BOHCB
Numbers 30 in the BOHCV
Numbers 30 in the BOHLNT
Numbers 30 in the BOHNTLTAL
Numbers 30 in the BOICB
Numbers 30 in the BOILNTAP
Numbers 30 in the BOKCV
Numbers 30 in the BOKCV2
Numbers 30 in the BOKHWOG
Numbers 30 in the BOKSSV
Numbers 30 in the BOLCB
Numbers 30 in the BOLCB2
Numbers 30 in the BOMCV
Numbers 30 in the BONAV
Numbers 30 in the BONCB
Numbers 30 in the BONLT
Numbers 30 in the BONUT2
Numbers 30 in the BOPLNT
Numbers 30 in the BOSCB
Numbers 30 in the BOSNC
Numbers 30 in the BOTLNT
Numbers 30 in the BOVCB
Numbers 30 in the BOYCB
Numbers 30 in the BPBB
Numbers 30 in the BPH
Numbers 30 in the BSB
Numbers 30 in the CCB
Numbers 30 in the CUV
Numbers 30 in the CUVS
Numbers 30 in the DBT
Numbers 30 in the DGDNT
Numbers 30 in the DHNT
Numbers 30 in the DNT
Numbers 30 in the ELBE
Numbers 30 in the EMTV
Numbers 30 in the ESV
Numbers 30 in the FBV
Numbers 30 in the FEB
Numbers 30 in the GGMNT
Numbers 30 in the GNT
Numbers 30 in the HARY
Numbers 30 in the HNT
Numbers 30 in the IRVA
Numbers 30 in the IRVB
Numbers 30 in the IRVG
Numbers 30 in the IRVH
Numbers 30 in the IRVK
Numbers 30 in the IRVM
Numbers 30 in the IRVM2
Numbers 30 in the IRVO
Numbers 30 in the IRVP
Numbers 30 in the IRVT
Numbers 30 in the IRVT2
Numbers 30 in the IRVU
Numbers 30 in the ISVN
Numbers 30 in the JSNT
Numbers 30 in the KAPI
Numbers 30 in the KBT1ETNIK
Numbers 30 in the KBV
Numbers 30 in the KJV
Numbers 30 in the KNFD
Numbers 30 in the LBA
Numbers 30 in the LBLA
Numbers 30 in the LNT
Numbers 30 in the LSV
Numbers 30 in the MAAL
Numbers 30 in the MBV
Numbers 30 in the MBV2
Numbers 30 in the MHNT
Numbers 30 in the MKNFD
Numbers 30 in the MNG
Numbers 30 in the MNT
Numbers 30 in the MNT2
Numbers 30 in the MRS1T
Numbers 30 in the NAA
Numbers 30 in the NASB
Numbers 30 in the NBLA
Numbers 30 in the NBS
Numbers 30 in the NBVTP
Numbers 30 in the NET2
Numbers 30 in the NIV11
Numbers 30 in the NNT
Numbers 30 in the NNT2
Numbers 30 in the NNT3
Numbers 30 in the PDDPT
Numbers 30 in the PFNT
Numbers 30 in the RMNT
Numbers 30 in the SBIAS
Numbers 30 in the SBIBS
Numbers 30 in the SBIBS2
Numbers 30 in the SBICS
Numbers 30 in the SBIDS
Numbers 30 in the SBIGS
Numbers 30 in the SBIHS
Numbers 30 in the SBIIS
Numbers 30 in the SBIIS2
Numbers 30 in the SBIIS3
Numbers 30 in the SBIKS
Numbers 30 in the SBIKS2
Numbers 30 in the SBIMS
Numbers 30 in the SBIOS
Numbers 30 in the SBIPS
Numbers 30 in the SBISS
Numbers 30 in the SBITS
Numbers 30 in the SBITS2
Numbers 30 in the SBITS3
Numbers 30 in the SBITS4
Numbers 30 in the SBIUS
Numbers 30 in the SBIVS
Numbers 30 in the SBT
Numbers 30 in the SBT1E
Numbers 30 in the SCHL
Numbers 30 in the SNT
Numbers 30 in the SUSU
Numbers 30 in the SUSU2
Numbers 30 in the SYNO
Numbers 30 in the TBIAOTANT
Numbers 30 in the TBT1E
Numbers 30 in the TBT1E2
Numbers 30 in the TFTIP
Numbers 30 in the TFTU
Numbers 30 in the TGNTATF3T
Numbers 30 in the THAI
Numbers 30 in the TNFD
Numbers 30 in the TNT
Numbers 30 in the TNTIK
Numbers 30 in the TNTIL
Numbers 30 in the TNTIN
Numbers 30 in the TNTIP
Numbers 30 in the TNTIZ
Numbers 30 in the TOMA
Numbers 30 in the TTENT
Numbers 30 in the UBG
Numbers 30 in the UGV
Numbers 30 in the UGV2
Numbers 30 in the UGV3
Numbers 30 in the VBL
Numbers 30 in the VDCC
Numbers 30 in the YALU
Numbers 30 in the YAPE
Numbers 30 in the YBVTP
Numbers 30 in the ZBP