Hosea 9 (IRVT)
1 இஸ்ரவேலே, மகிழ்ச்சியாக இருக்காதே; மற்ற மக்களைப்போல் களிகூராதே; உன் தேவனைவிட்டு நீ வழிவிலகிப்போனாய்; தானியம் போரடிக்கிற சகல களங்களிலும் கூலியை நாடுகிறாய். 2 தானியக்களமும் திராட்சைத்தொட்டியும் அவர்களைப் பிழைக்கச்செய்வதில்லை; அவர்களுக்குத் திராட்சைரசம் ஒழிந்துபோகும். 3 அவர்கள் யெகோவாவுடைய தேசத்தில் குடியிருப்பதில்லை; எப்பிராயீமர்கள் மீண்டும் எகிப்திற்குப் போவார்கள்; அசீரியாவில் தீட்டுள்ளதைச் சாப்பிடுவார்கள். 4 அவர்கள் யெகோவாவுக்குத் திராட்சைரசத்தின் பானபலியை ஊற்றுவதுமில்லை, அவருக்கு அங்கிகரிப்பாக இருப்பதுமில்லை; அவர்களுடைய பலிகள் அவர்களுக்குத் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைபோல இருக்கும்; அதைச் சாப்பிடுகிற அனைவரும் தீட்டுப்படுவார்கள்; அவர்களுடைய அப்பம் அவர்களுக்கே உரியது, அது யெகோவாவுடைய ஆலயத்தில் வருவதில்லை. 5 ஆசரிப்பு நாளிலும், யெகோவாவுடைய பண்டிகைநாளிலும் என்ன செய்வீர்கள்? 6 இதோ, அவர்கள் அழிவிற்குத் தப்பும்படி போய்விட்டார்கள்; எகிப்து அவர்களைச் சேர்த்துக்கொள்ளும், மோப் பட்டணம் அவர்களை அடக்கம் செய்யும்; அவர்களுடைய வெள்ளியிருந்த விருப்பமான இடங்கள் நெருஞ்சிமுட்செடிகளுக்குச் சொந்தமாகும்; அவர்களுடைய குடியிருப்புகளில் முட்செடிகள் முளைக்கும். 7 விசாரிப்பின் நாட்கள் வரும், நீதி சரிக்கட்டும் நாட்கள் வரும் என்பதை இஸ்ரவேலர்கள் அறிந்துகொள்வார்கள்; உன் மிகுதியான அக்கிரமத்தினாலேயும், மிகுதியான பகையினாலேயும் தீர்க்கதரிசிகள் மூடர்களும், ஆவியைப் பெற்ற மனிதர்கள் பைத்தியம் பிடித்தவர்களுமாக இருக்கிறார்கள். 8 எப்பிராயீமின் காவற்காரர்கள் என் தேவனோடு எதிர்த்து நிற்கிறார்கள்; தீர்க்கதரிசி தன் வழிகளிலெல்லாம் குருவிபிடிக்கிறவனுடைய கண்ணியாகவும், தன் தேவனுடைய ஆலயத்திலே பகையாளியாகவும் இருக்கிறான். 9 கிபியாவின் நாட்களில் நடந்தது போல, அவர்கள் தங்களை மிகவும் கெடுத்துக்கொண்டார்கள்; அவர்களுடைய அக்கிரமத்தை அவர் நினைப்பார், அவர்களுடைய பாவங்களை விசாரிப்பார். 10 வனாந்திரத்தில் திராட்சைக்குலைகளைக் கண்டுபிடிப்பதுபோல இஸ்ரவேலைக் கண்டுபிடித்தேன்; அத்திமரத்தில் முதல்முறை பழுத்த பழங்களைப்போல உங்கள் முற்பிதாக்களைக் கண்டுபிடித்தேன்; ஆனாலும் அவர்கள் பாகால்பேயோரிடம் போய், இழிவானதற்குத் தங்களை ஒப்புவித்து, தாங்கள் நேசித்தவைகளைப்போலத் தாங்களும் அருவருப்புள்ளவர்களானார்கள். 11 எப்பிராயீமின் மகிமை ஒரு பறவையைப்போல் பறந்துபோகும்; அது பிறப்பதுமில்லை, வயிற்றிலிருப்பதும் இல்லை, கர்ப்பமடைவதும் இல்லை. 12 அவர்கள் தங்கள் பிள்ளைகளை வளர்த்தாலும், அவர்களுக்கு மனிதர்கள் இல்லாதபடிக்கு அவர்களைப் பிள்ளைகள் இல்லாதவர்களாக்குவேன்; நான் அவர்களை விட்டுப்போகும்போது அவர்களுக்கு ஐயோ, 13 நான் எப்பிராயீமைத் தீருவின் திசைவரை இருக்கிறதைப் பார்க்கிறபோது, அது நல்ல வசதியான இடத்திலே நாட்டப்பட்டிருக்கிறது; ஆனாலும் எப்பிராயீமர்கள் தங்கள் மகன்களைக் கொலை செய்கிறவனிடத்தில் வெளியே கொண்டுபோய்விடுவார்கள். 14 யெகோவாவே, நீர் அவர்களுக்குக் கொடுப்பதைக் கொடும்; அவர்களுக்கு விழுந்துபோகிற கர்ப்பத்தையும் பால் இல்லாத முலைகளையும் கொடும். 15 அவர்களுடைய பொல்லாப்பெல்லாம் கில்காலிலே நடக்கும்; அங்கே நான் அவர்களை வெறுத்தேன்; அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களை நான் என் சமுகத்தைவிட்டுத் துரத்துவேன்; இனி அவர்களை நேசிக்கமாட்டேன்; அவர்களுடைய அதிபதிகள் எல்லோரும் துரோகிகள். 16 எப்பிராயீமர்கள் வெட்டுண்டுபோனார்கள்; அவர்கள் வேர் உலர்ந்துபோயிற்று, கனிகொடுக்கமாட்டார்கள்; அவர்கள் பிள்ளைகளைப் பெற்றாலும், அவர்களுடைய கர்ப்பத்தின் பிரியமான கனிகளை அழிப்பேன். 17 அவர்கள் அவருக்குச் செவிகொடாமற்போனதினால் என் தேவன் அவர்களை வெறுத்துவிடுவார்; அவர்கள் அந்நிய மக்களுக்குள்ளே அலைந்து திரிவார்கள்.
In Other Versions
Hosea 9 in the ANGEFD
Hosea 9 in the ANTPNG2D
Hosea 9 in the AS21
Hosea 9 in the BAGH
Hosea 9 in the BBPNG
Hosea 9 in the BBT1E
Hosea 9 in the BDS
Hosea 9 in the BEV
Hosea 9 in the BHAD
Hosea 9 in the BIB
Hosea 9 in the BLPT
Hosea 9 in the BNT
Hosea 9 in the BNTABOOT
Hosea 9 in the BNTLV
Hosea 9 in the BOATCB
Hosea 9 in the BOATCB2
Hosea 9 in the BOBCV
Hosea 9 in the BOCNT
Hosea 9 in the BOECS
Hosea 9 in the BOGWICC
Hosea 9 in the BOHCB
Hosea 9 in the BOHCV
Hosea 9 in the BOHLNT
Hosea 9 in the BOHNTLTAL
Hosea 9 in the BOICB
Hosea 9 in the BOILNTAP
Hosea 9 in the BOITCV
Hosea 9 in the BOKCV
Hosea 9 in the BOKCV2
Hosea 9 in the BOKHWOG
Hosea 9 in the BOKSSV
Hosea 9 in the BOLCB
Hosea 9 in the BOLCB2
Hosea 9 in the BOMCV
Hosea 9 in the BONAV
Hosea 9 in the BONCB
Hosea 9 in the BONLT
Hosea 9 in the BONUT2
Hosea 9 in the BOPLNT
Hosea 9 in the BOSCB
Hosea 9 in the BOSNC
Hosea 9 in the BOTLNT
Hosea 9 in the BOVCB
Hosea 9 in the BOYCB
Hosea 9 in the BPBB
Hosea 9 in the BPH
Hosea 9 in the BSB
Hosea 9 in the CCB
Hosea 9 in the CUV
Hosea 9 in the CUVS
Hosea 9 in the DBT
Hosea 9 in the DGDNT
Hosea 9 in the DHNT
Hosea 9 in the DNT
Hosea 9 in the ELBE
Hosea 9 in the EMTV
Hosea 9 in the ESV
Hosea 9 in the FBV
Hosea 9 in the FEB
Hosea 9 in the GGMNT
Hosea 9 in the GNT
Hosea 9 in the HARY
Hosea 9 in the HNT
Hosea 9 in the IRVA
Hosea 9 in the IRVB
Hosea 9 in the IRVG
Hosea 9 in the IRVH
Hosea 9 in the IRVK
Hosea 9 in the IRVM
Hosea 9 in the IRVM2
Hosea 9 in the IRVO
Hosea 9 in the IRVP
Hosea 9 in the IRVT2
Hosea 9 in the IRVU
Hosea 9 in the ISVN
Hosea 9 in the JSNT
Hosea 9 in the KAPI
Hosea 9 in the KBT1ETNIK
Hosea 9 in the KBV
Hosea 9 in the KJV
Hosea 9 in the KNFD
Hosea 9 in the LBA
Hosea 9 in the LBLA
Hosea 9 in the LNT
Hosea 9 in the LSV
Hosea 9 in the MAAL
Hosea 9 in the MBV
Hosea 9 in the MBV2
Hosea 9 in the MHNT
Hosea 9 in the MKNFD
Hosea 9 in the MNG
Hosea 9 in the MNT
Hosea 9 in the MNT2
Hosea 9 in the MRS1T
Hosea 9 in the NAA
Hosea 9 in the NASB
Hosea 9 in the NBLA
Hosea 9 in the NBS
Hosea 9 in the NBVTP
Hosea 9 in the NET2
Hosea 9 in the NIV11
Hosea 9 in the NNT
Hosea 9 in the NNT2
Hosea 9 in the NNT3
Hosea 9 in the PDDPT
Hosea 9 in the PFNT
Hosea 9 in the RMNT
Hosea 9 in the SBIAS
Hosea 9 in the SBIBS
Hosea 9 in the SBIBS2
Hosea 9 in the SBICS
Hosea 9 in the SBIDS
Hosea 9 in the SBIGS
Hosea 9 in the SBIHS
Hosea 9 in the SBIIS
Hosea 9 in the SBIIS2
Hosea 9 in the SBIIS3
Hosea 9 in the SBIKS
Hosea 9 in the SBIKS2
Hosea 9 in the SBIMS
Hosea 9 in the SBIOS
Hosea 9 in the SBIPS
Hosea 9 in the SBISS
Hosea 9 in the SBITS
Hosea 9 in the SBITS2
Hosea 9 in the SBITS3
Hosea 9 in the SBITS4
Hosea 9 in the SBIUS
Hosea 9 in the SBIVS
Hosea 9 in the SBT
Hosea 9 in the SBT1E
Hosea 9 in the SCHL
Hosea 9 in the SNT
Hosea 9 in the SUSU
Hosea 9 in the SUSU2
Hosea 9 in the SYNO
Hosea 9 in the TBIAOTANT
Hosea 9 in the TBT1E
Hosea 9 in the TBT1E2
Hosea 9 in the TFTIP
Hosea 9 in the TFTU
Hosea 9 in the TGNTATF3T
Hosea 9 in the THAI
Hosea 9 in the TNFD
Hosea 9 in the TNT
Hosea 9 in the TNTIK
Hosea 9 in the TNTIL
Hosea 9 in the TNTIN
Hosea 9 in the TNTIP
Hosea 9 in the TNTIZ
Hosea 9 in the TOMA
Hosea 9 in the TTENT
Hosea 9 in the UBG
Hosea 9 in the UGV
Hosea 9 in the UGV2
Hosea 9 in the UGV3
Hosea 9 in the VBL
Hosea 9 in the VDCC
Hosea 9 in the YALU
Hosea 9 in the YAPE
Hosea 9 in the YBVTP
Hosea 9 in the ZBP