Psalms 87 (BOITCV)
undefined கோராகின் மகன்களின் பாட்டாகிய சங்கீதம். 1 யெகோவா தமது அஸ்திபாரத்தைப் பரிசுத்த மலையில் அமைத்திருக்கிறார். 2 யெகோவா யாக்கோபிலுள்ள எல்லா வாழ்விடங்களைப் பார்க்கிலும்,சீயோனின் வாசல்களை நேசிக்கிறார். 3 இறைவனின் நகரமே,உன்னைக்குறித்து மகிமையான காரியங்கள் சொல்லப்படுகின்றன: 4 “என்னை ஏற்றுக்கொள்ளுகிறவர்களோடுநான் ராகாபையும் பாபிலோனையும் குறித்து,‘இவர்கள் சீயோனிலே பிறந்தவர்கள்’ என்று சொல்வேன்;பெலிஸ்தியாவையும் தீருவையும் எத்தியோப்பியாவையும் குறித்தும் அப்படியே சொல்வேன்.” 5 உண்மையாகவே சீயோனைக் குறித்து,“இன்னார் இன்னார் அங்கே பிறந்தார்கள் என்றும்,மகா உன்னதமானவர் தாமே அதை நிலைநிறுத்துவார்” என்றும் சொல்லப்படும். 6 “இன்னார் சீயோனிலே பிறந்தார்”என்பதாக யெகோவா மக்களின் பதிவேட்டில் எழுதுவார். 7 அவர்கள் இசை மீட்டும்பொழுது,“எங்கள் ஊற்றுகள் எல்லாம் உம்மிலேயே இருக்கிறது” என்று பாடுவார்கள்.