Psalms 47 (IRVT)
undefined கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு அளிக்கப்பட்ட ஒரு பாடல். 1 எல்லா மக்களே, கைகொட்டி,தேவனுக்கு முன்பாகக் கெம்பீரசத்தமாக ஆர்ப்பரியுங்கள். 2 உன்னதமான தேவனாகிய யெகோவா பயங்கரமானவரும்,பூமியின் மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமாக இருக்கிறார். 3 மக்களை நமக்கு கீழ்படுத்தி,தேசங்களை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்துவார். 4 தமக்குப் பிரியமான யாக்கோபின் சிறப்பான தேசத்தை நமக்குச் உரிமைச்சொத்தாக தெரிந்தளிப்பார். (சேலா) 5 தேவன் ஆர்ப்பரிப்போடும், யெகோவா எக்காள சத்தத்தோடும் உயர எழுந்தருளினார். 6 தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்;நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள். 7 தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள். 8 தேவன் தேசங்களின்மேல் அரசாளுகிறார்;தேவன் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறார். 9 மக்களின் பிரபுக்கள் ஆபிரகாமின் தேவனுடைய மக்களாகச் சேர்க்கப்படுகிறார்கள்;பூமியின் கேடகங்கள் தேவனுடையவைகள்;அவர் மகா உன்னதமான தேவன்.