Numbers 27 (BOITCV)

1 செலொப்பியாத்தின் மகள்கள், யோசேப்பின் மகன் மனாசேயின் வம்சங்களில் ஒன்றைச் சேர்ந்தவர்கள். இந்த செலொப்பியாத் எப்பேரின் மகன். ஏப்பேர் கீலேயாத்தின் மகன். கீலேயாத் மாகீரின் மகன். மாக்கீர் மனாசேயின் மகன். செலொப்பியாத்தின் மகள்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் ஆகியோர். 2 அவர்கள் சபைக் கூடாரவாசலுக்குச் சமீபமாய் வந்து, மோசேக்கும், ஆசாரியன் எலெயாசாருக்கும், தலைவர்களுக்கும், சபையார் அனைவருக்கும் முன்பாக நின்றார்கள். அப்பெண்கள் அவர்களிடம், 3 “எங்கள் தகப்பன் பாலைவனத்தில் இறந்துவிட்டார். யெகோவாவுக்கு விரோதமாக ஒன்றுகூடி கோராகைப் பின்பற்றியவர்களின் மத்தியில் அவர் இருக்கவில்லை. அவர் தன்னுடைய பாவத்தினாலேயே இறந்துவிட்டார். அவருக்கு மகன்கள் ஒருவரும் இல்லை. 4 அவருக்கு மகன்கள் இல்லாதபடியால், எங்களுடைய தகப்பனின் பெயர் அவருடைய வம்சத்திலிருந்து இல்லாமல் போகவேண்டியதேன்? எங்கள் தகப்பனின் உறவினர்களுக்குள்ளே எங்களுக்கும் காணி தரவேண்டும்” என்றார்கள். 5 மோசே அவர்களுடைய கோரிக்கையை யெகோவாவுக்கு முன்பாகக் கொண்டுவந்தான். 6 யெகோவா அவனிடம், 7 “செலொப்பியாத்தின் மகள்கள் கேட்பது சரியானதே. நீ அவர்களுக்குச் சொத்துரிமையாக அவர்கள் தகப்பனின் உறவினர்கள் மத்தியில் காணியைக் கொடுக்கவேண்டும். இவ்விதமாய் நீ அவர்களுடைய தகப்பனின் சொத்துரிமையை அவர்களிடம் ஒப்புவிக்கவேண்டும். 8 “நீ இஸ்ரயேலருடன் சொல்லவேண்டியதாவது, ‘ஒரு மனிதன் மகன் இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய சொத்துரிமையை அவனுடைய மகளுக்கு ஒப்புவிக்கவேண்டும். 9 அவனுக்கு மகளும் இல்லாவிட்டால், அவனுடைய சொத்துரிமையை அவனுடைய சகோதரர்களுக்குக் கொடுக்கவேண்டும். 10 அவனுக்குச் சகோதரர்களும் இல்லாவிட்டால், அவனுடைய சொத்துரிமையை அவனுடைய தகப்பனின் சகோதரர்களிடம் கொடுக்கவேண்டும். 11 அவனுடைய தகப்பனுக்கும் சகோதரன் இல்லாதிருந்தால், அவனுடைய வம்சத்தில் அவனுக்கு நெருங்கிய உறவினனுக்கு அதைக் கொடுக்கவேண்டும். அவன் அதை உரிமையாக்கிக் கொள்ளட்டும். இது யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரயேலருக்கு ஒரு சட்டபூர்வமான நடைமுறையாக இருக்கவேண்டும்’ ” என்றார். 12 பின்பு யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, “நீ அபாரீம் மலைத்தொடரிலுள்ள இம்மலையின் மேல் ஏறிப்போய், நான் இஸ்ரயேலருக்குக் கொடுத்திருக்கும் நாட்டைப் பார். 13 நீ அதைப் பார்த்தபின், உன் சகோதரன் ஆரோனைப்போல், நீயும் உன் முன்னோர்களுடன் சேர்க்கப்படுவாய். 14 ஏனென்றால், சீன் பாலைவனத்தின் தண்ணீரின் அருகே இந்த மக்கள் கலகம் பண்ணியபொழுது, அவர்களுக்குமுன் என்னைப் பரிசுத்தர் என்று கனம்பண்ணும்படி உங்களுக்குக் நான் கொடுத்த கட்டளைக்கு நீங்கள் இருவருமே கீழ்ப்படியவில்லை” என்றார். சீன் பாலைவனத்திலுள்ள காதேஸ் என்ற இடத்தில் உண்டான மேரிபாவின் தண்ணீரைப் பற்றியே இது சொல்லப்பட்டது. 15 மோசே யெகோவாவிடம் சொன்னதாவது, 16 “முழு மனுக்குலத்தின் ஆவிகளுக்கும் இறைவனாகிய யெகோவா இந்த மக்கள் சமுதாயத்தின் மேலாக ஒரு மனிதனை நியமிப்பாராக! 17 யெகோவாவின் மக்கள் மேய்ப்பனில்லாத செம்மறியாடுகளைப்போல் இராதபடி அவர்களை வெளியே வழிநடத்திச் செல்லவும், உள்ளே கொண்டுவரவும் அவனை நியமிப்பாராக” என்றான். 18 எனவே யெகோவா மோசேயிடம், “நூனின் மகனும், ஆவியானவரைப் பெற்றிருக்கிறவனுமாகிய யோசுவாவைத் தெரிந்தெடுத்து, அவன்மேல் உன் கையை வை. 19 ஆசாரியன் எலெயாசாருக்கு முன்பாகவும், சபையார் எல்லோருக்கும் முன்பாகவும், அவனை நிறுத்தி, அவர்கள் முன்னிலையில் அவனுக்குத் தலைமைப்பொறுப்பைக் கொடு. 20 இஸ்ரயேல் சமுதாயம் முழுவதும் அவனுக்குக் கீழ்ப்படியும்படியாக உன் அதிகாரத்தில் ஒரளவை அவனுக்குக் கொடு. 21 அவன் ஆசாரியன் எலெயாசாருக்கு முன்பாக நிற்கவேண்டும். யோசுவா செய்யவேண்டிய தீர்மானங்களை எலெயாசார், யெகோவாவிடம் ஊரீம் மூலமாக விசாரித்து அறிவான். யோசுவாவின் கட்டளைப்படியே, அவனுடன் முழு இஸ்ரயேல் சமுதாயத்தாரும் வெளியே போவார்கள். அவனுடைய கட்டளைப்படியே அவர்கள் உள்ளே வருவார்கள்” என்றார். 22 யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான். அவன் ஆசாரியன் எலெயாசார் முன்பாகவும், முழுசபையார் முன்பாகவும் யோசுவாவைக் கூட்டிக்கொண்டுபோய் நிறுத்தினான். 23 பின்பு மோசே யெகோவா தனக்கு அறிவுறுத்தியபடியே யோசுவாவின்மேல் தன் கைகளை வைத்து, தலைமைப்பொறுப்பை அவனிடத்தில் கொடுத்தான்.

In Other Versions

Numbers 27 in the ANGEFD

Numbers 27 in the ANTPNG2D

Numbers 27 in the AS21

Numbers 27 in the BAGH

Numbers 27 in the BBPNG

Numbers 27 in the BBT1E

Numbers 27 in the BDS

Numbers 27 in the BEV

Numbers 27 in the BHAD

Numbers 27 in the BIB

Numbers 27 in the BLPT

Numbers 27 in the BNT

Numbers 27 in the BNTABOOT

Numbers 27 in the BNTLV

Numbers 27 in the BOATCB

Numbers 27 in the BOATCB2

Numbers 27 in the BOBCV

Numbers 27 in the BOCNT

Numbers 27 in the BOECS

Numbers 27 in the BOGWICC

Numbers 27 in the BOHCB

Numbers 27 in the BOHCV

Numbers 27 in the BOHLNT

Numbers 27 in the BOHNTLTAL

Numbers 27 in the BOICB

Numbers 27 in the BOILNTAP

Numbers 27 in the BOKCV

Numbers 27 in the BOKCV2

Numbers 27 in the BOKHWOG

Numbers 27 in the BOKSSV

Numbers 27 in the BOLCB

Numbers 27 in the BOLCB2

Numbers 27 in the BOMCV

Numbers 27 in the BONAV

Numbers 27 in the BONCB

Numbers 27 in the BONLT

Numbers 27 in the BONUT2

Numbers 27 in the BOPLNT

Numbers 27 in the BOSCB

Numbers 27 in the BOSNC

Numbers 27 in the BOTLNT

Numbers 27 in the BOVCB

Numbers 27 in the BOYCB

Numbers 27 in the BPBB

Numbers 27 in the BPH

Numbers 27 in the BSB

Numbers 27 in the CCB

Numbers 27 in the CUV

Numbers 27 in the CUVS

Numbers 27 in the DBT

Numbers 27 in the DGDNT

Numbers 27 in the DHNT

Numbers 27 in the DNT

Numbers 27 in the ELBE

Numbers 27 in the EMTV

Numbers 27 in the ESV

Numbers 27 in the FBV

Numbers 27 in the FEB

Numbers 27 in the GGMNT

Numbers 27 in the GNT

Numbers 27 in the HARY

Numbers 27 in the HNT

Numbers 27 in the IRVA

Numbers 27 in the IRVB

Numbers 27 in the IRVG

Numbers 27 in the IRVH

Numbers 27 in the IRVK

Numbers 27 in the IRVM

Numbers 27 in the IRVM2

Numbers 27 in the IRVO

Numbers 27 in the IRVP

Numbers 27 in the IRVT

Numbers 27 in the IRVT2

Numbers 27 in the IRVU

Numbers 27 in the ISVN

Numbers 27 in the JSNT

Numbers 27 in the KAPI

Numbers 27 in the KBT1ETNIK

Numbers 27 in the KBV

Numbers 27 in the KJV

Numbers 27 in the KNFD

Numbers 27 in the LBA

Numbers 27 in the LBLA

Numbers 27 in the LNT

Numbers 27 in the LSV

Numbers 27 in the MAAL

Numbers 27 in the MBV

Numbers 27 in the MBV2

Numbers 27 in the MHNT

Numbers 27 in the MKNFD

Numbers 27 in the MNG

Numbers 27 in the MNT

Numbers 27 in the MNT2

Numbers 27 in the MRS1T

Numbers 27 in the NAA

Numbers 27 in the NASB

Numbers 27 in the NBLA

Numbers 27 in the NBS

Numbers 27 in the NBVTP

Numbers 27 in the NET2

Numbers 27 in the NIV11

Numbers 27 in the NNT

Numbers 27 in the NNT2

Numbers 27 in the NNT3

Numbers 27 in the PDDPT

Numbers 27 in the PFNT

Numbers 27 in the RMNT

Numbers 27 in the SBIAS

Numbers 27 in the SBIBS

Numbers 27 in the SBIBS2

Numbers 27 in the SBICS

Numbers 27 in the SBIDS

Numbers 27 in the SBIGS

Numbers 27 in the SBIHS

Numbers 27 in the SBIIS

Numbers 27 in the SBIIS2

Numbers 27 in the SBIIS3

Numbers 27 in the SBIKS

Numbers 27 in the SBIKS2

Numbers 27 in the SBIMS

Numbers 27 in the SBIOS

Numbers 27 in the SBIPS

Numbers 27 in the SBISS

Numbers 27 in the SBITS

Numbers 27 in the SBITS2

Numbers 27 in the SBITS3

Numbers 27 in the SBITS4

Numbers 27 in the SBIUS

Numbers 27 in the SBIVS

Numbers 27 in the SBT

Numbers 27 in the SBT1E

Numbers 27 in the SCHL

Numbers 27 in the SNT

Numbers 27 in the SUSU

Numbers 27 in the SUSU2

Numbers 27 in the SYNO

Numbers 27 in the TBIAOTANT

Numbers 27 in the TBT1E

Numbers 27 in the TBT1E2

Numbers 27 in the TFTIP

Numbers 27 in the TFTU

Numbers 27 in the TGNTATF3T

Numbers 27 in the THAI

Numbers 27 in the TNFD

Numbers 27 in the TNT

Numbers 27 in the TNTIK

Numbers 27 in the TNTIL

Numbers 27 in the TNTIN

Numbers 27 in the TNTIP

Numbers 27 in the TNTIZ

Numbers 27 in the TOMA

Numbers 27 in the TTENT

Numbers 27 in the UBG

Numbers 27 in the UGV

Numbers 27 in the UGV2

Numbers 27 in the UGV3

Numbers 27 in the VBL

Numbers 27 in the VDCC

Numbers 27 in the YALU

Numbers 27 in the YAPE

Numbers 27 in the YBVTP

Numbers 27 in the ZBP