Psalms 93 (IRVT)
1 யெகோவா ஆளுகை செய்கிறார்,மாட்சிமையை அணிந்துகொண்டிருக்கிறார்; யெகோவா வல்லமையை அணிந்து,அவர் அதை வார்க்கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்;ஆதலால் உலகம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது. 2 உமது சிங்காசனம் ஆரம்பம்முதல் உறுதியானது;நீர் என்றென்றும் இருக்கிறீர். 3 யெகோவாவே, நதிகள் எழும்பின;நதிகள் இரைச்சலிட்டு எழும்பின;நதிகள் அலைதிரண்டு எழும்பின. 4 திரளான தண்ணீர்களின் இரைச்சலைவிட,கடலின் வலிமையான அலைகளைவிட, யெகோவா உன்னதத்திலே வல்லமையுள்ளவர். 5 உமது சாட்சிகள் மிகவும் உண்மையுள்ளவைகள்;யெகோவாவே, பரிசுத்தமானது நிரந்தர நாளாகஉமது ஆலயத்தின் அலங்காரமாக இருக்கிறது.