2 Kings 16 (BOITCV)
1 ரெமலியாவின் மகன் பெக்காவின் ஆட்சியின் பதினேழாம் வருடத்தில், யூதாவின் அரசனான யோதாமின் மகன் ஆகாஸ் அரசாளத் தொடங்கினான். 2 ஆகாஸ் அரசனானபோது இருபது வயதுள்ளவனாயிருந்தான். இவன் எருசலேமில் பதினாறு வருடங்கள் அரசாண்டான். தன் முற்பிதாவான தாவீதைப்போல் அவன் தனது இறைவனாகிய யெகோவாவின் பார்வையில் சரியானதைச் செய்யவில்லை. 3 அவன் இஸ்ரயேல் அரசர்களின் வழிகளில் நடந்தான். இவன் இஸ்ரயேலருக்கு முன்பாக யெகோவா துரத்திவிட்ட நாடுகளின் அருவருப்பான வழிகளைப் பின்பற்றி, தனது மகனையும் நெருப்பிலே பலியிட்டான். 4 அவன் மலை உச்சியிலுள்ள மேடைகளிலும், அடர்ந்த மரங்களின் கீழும் பலிசெலுத்தி, தூபங்காட்டினான். 5 அப்பொழுது சீரிய அரசன் ரேத்சீனும் ரெமலியாவின் மகனான இஸ்ரயேலின் அரசன் பெக்காவும் எருசலேமுக்கு எதிராக அணிவகுத்துச் சென்றார்கள். அவர்கள் ஆகாசை சூழ்ந்துகொண்டபோதும், அவனை மேற்கொள்ள முடியவில்லை. 6 அந்த நேரத்தில் சீரிய அரசன் ரேத்சீன் யூதாவின் மனிதரைத் துரத்திவிட்டு, ஏலாத்தை சீரியாவுக்குத் திரும்பப் பெற்றுக்கொண்டான். அப்பொழுது ஏதோமியர் ஏலாத்துக்குக் குடியிருக்கப் போனார்கள். அவர்கள் இன்றுவரையும் அங்கேயே வாழ்கிறார்கள். 7 அரசன் ஆகாஸ், அசீரியாவின் அரசன் திக்லாத்பிலேசருக்குத் தூதுவரை அனுப்பி, “நான் உமது பணியாளனும், உமக்கு வரி செலுத்துகிறவனுமாய் இருக்கிறேன். இப்போது என்னை எதிர்த்துத் தாக்குகின்ற சீரிய அரசனிடமிருந்தும், இஸ்ரயேல் அரசனிடமிருந்தும் என்னைக் காப்பாற்றும்” என்று கேட்டான். 8 அத்துடன் ஆகாஸ் யெகோவாவின் ஆலயத்திலும், அரண்மனைத் திரவிய அறையிலும் இருந்த வெள்ளியையும், தங்கத்தையும் எடுத்து அவற்றை அசீரிய அரசனுக்கு ஒரு அன்பளிப்பாக அனுப்பினான். 9 அசீரிய அரசன் இவனுடைய வேண்டுகோளுக்கு இணங்கி தமஸ்குவை தாக்கி அதைக் கைப்பற்றினான். அங்கிருந்த குடிமக்களை கீருக்கு நாடுகடத்தி ரேத்சீனையும் கொலைசெய்தான். 10 இதன்பின் அரசன் ஆகாஸ், அசீரிய அரசன் திக்லாத்பிலேசரைச் சந்திப்பதற்கு தமஸ்குவுக்குப் போனான். அவன் தமஸ்குவில் ஒரு பலிபீடத்தைக் கண்டு, அதன் அளவு விபரங்கள் உள்ளடங்கிய வரைபடத்தை ஆசாரியனான உரியாவுக்கு அனுப்பினான். 11 அப்படியே ஆசாரியனான உரியா தமஸ்குவிலிருந்து ஆகாஸ் தனக்கு அனுப்பிய வரைபடத்தின்படியே, ஆகாஸ் அரசன் திரும்பி வருவதற்கு முன்பே ஒரு பலிபீடத்தைக் கட்டிமுடித்தான். 12 ஆகாஸ் அரசன் தமஸ்குவிலிருந்து திரும்பிவந்தபோது, பலிபீடத்தைக் கண்டு அதன் கிட்டப்போய் காணிக்கைகளைச் செலுத்தினான். 13 அவன் தன் தகன காணிக்கையையும் தானிய காணிக்கையையும் செலுத்தி, பானகாணிக்கைகளையும் ஊற்றி, சமாதான காணிக்கையின் இரத்தத்தையும் பலிபீடத்தில் தெளித்தான். 14 யெகோவாவுக்கு முன்பாக இருந்த வெண்கல பலிபீடம், புதிய பலிபீடத்துக்கும் யெகோவாவின் ஆலயத்துக்கும் நடுவில் இருந்தது. அதை ஆலயத்தின் முன் பக்கத்திலிருந்து எடுத்துக்கொண்டுவந்து, புதிய பலிபீடத்தின் வடக்குப் பக்கத்தில் வைத்தான். 15 இதன்பின் ஆகாஸ் அரசன் ஆசாரியனான உரியாவுக்குப் பின்வரும் கட்டளையைக் கொடுத்தான். அவன், “இனிமேல் காலையில் செலுத்தும் தகன காணிக்கையையும், மாலையில் செலுத்தும் தானிய காணிக்கையையும், அரசனுடைய தகன காணிக்கை, தானிய காணிக்கை ஆகியவற்றையும், எல்லா நாட்டு மக்களுடைய தகன காணிக்கைகள், தானிய காணிக்கை, பானகாணிக்கை ஆகிய யாவும் புதிய, பெரிய பலிபீடத்தில் செலுத்தப்பட வேண்டும். அத்துடன் எல்லா தகன காணிக்கையின், பலிகளின், இரத்தம் முழுவதையும் புதிய பலிபீடத்தில் தெளிக்கவேண்டும். ஆனால் அந்த வெண்கலப் பலிபீடத்தையோ நான் எனக்கு வழிகாட்டுதலை அறிவதற்காக உபயோகிப்பேன்” என்றான். 16 ஆகாஸ் அரசன் கட்டளையிட்டது போலவே ஆசாரியன் உரியா செய்தான். 17 ஆகாஸ் அரசன், நகர்த்தும் வெண்கலத்தாங்கிகளின் பக்கத் துண்டுகளையும் எடுத்து தொட்டிகளையும் அகற்றினான். பெரிய தொட்டியை, அதைத் தாங்கிக்கொண்டிருந்த வெண்கல எருதுகளின் மேலிருந்து எடுத்து ஒரு கல் தளத்தின்மேல் வைத்தான். 18 அசீரிய அரசனை திருப்திப்படுத்துவதற்காக, ஆலய வாசலில் கட்டப்பட்டிருந்த ஓய்வுநாள் பயன்பாட்டிற்குரிய கூடாரத்தையும் எடுத்துவிட்டு, யெகோவாவின் ஆலயத்துக்கு வெளியே அமைந்திருந்த அரசர் உட்செல்லும் வாசலையும் அகற்றிவிட்டான். 19 ஆகாஸினுடைய ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், அவன் செய்தவைகளும் யூதா அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்தில் அல்லவோ எழுதப்பட்டுள்ளன. 20 ஆகாஸ் தன் முற்பிதாக்களைப்போல இறந்து தாவீதின் நகரத்தில் அவர்களுடன் அடக்கம் செய்யப்பட்டான். அவனுடைய மகன் எசேக்கியா அவனுக்குப்பின் அரசனானான்.
In Other Versions
2 Kings 16 in the ANGEFD
2 Kings 16 in the ANTPNG2D
2 Kings 16 in the AS21
2 Kings 16 in the BAGH
2 Kings 16 in the BBPNG
2 Kings 16 in the BBT1E
2 Kings 16 in the BDS
2 Kings 16 in the BEV
2 Kings 16 in the BHAD
2 Kings 16 in the BIB
2 Kings 16 in the BLPT
2 Kings 16 in the BNT
2 Kings 16 in the BNTABOOT
2 Kings 16 in the BNTLV
2 Kings 16 in the BOATCB
2 Kings 16 in the BOATCB2
2 Kings 16 in the BOBCV
2 Kings 16 in the BOCNT
2 Kings 16 in the BOECS
2 Kings 16 in the BOGWICC
2 Kings 16 in the BOHCB
2 Kings 16 in the BOHCV
2 Kings 16 in the BOHLNT
2 Kings 16 in the BOHNTLTAL
2 Kings 16 in the BOICB
2 Kings 16 in the BOILNTAP
2 Kings 16 in the BOKCV
2 Kings 16 in the BOKCV2
2 Kings 16 in the BOKHWOG
2 Kings 16 in the BOKSSV
2 Kings 16 in the BOLCB
2 Kings 16 in the BOLCB2
2 Kings 16 in the BOMCV
2 Kings 16 in the BONAV
2 Kings 16 in the BONCB
2 Kings 16 in the BONLT
2 Kings 16 in the BONUT2
2 Kings 16 in the BOPLNT
2 Kings 16 in the BOSCB
2 Kings 16 in the BOSNC
2 Kings 16 in the BOTLNT
2 Kings 16 in the BOVCB
2 Kings 16 in the BOYCB
2 Kings 16 in the BPBB
2 Kings 16 in the BPH
2 Kings 16 in the BSB
2 Kings 16 in the CCB
2 Kings 16 in the CUV
2 Kings 16 in the CUVS
2 Kings 16 in the DBT
2 Kings 16 in the DGDNT
2 Kings 16 in the DHNT
2 Kings 16 in the DNT
2 Kings 16 in the ELBE
2 Kings 16 in the EMTV
2 Kings 16 in the ESV
2 Kings 16 in the FBV
2 Kings 16 in the FEB
2 Kings 16 in the GGMNT
2 Kings 16 in the GNT
2 Kings 16 in the HARY
2 Kings 16 in the HNT
2 Kings 16 in the IRVA
2 Kings 16 in the IRVB
2 Kings 16 in the IRVG
2 Kings 16 in the IRVH
2 Kings 16 in the IRVK
2 Kings 16 in the IRVM
2 Kings 16 in the IRVM2
2 Kings 16 in the IRVO
2 Kings 16 in the IRVP
2 Kings 16 in the IRVT
2 Kings 16 in the IRVT2
2 Kings 16 in the IRVU
2 Kings 16 in the ISVN
2 Kings 16 in the JSNT
2 Kings 16 in the KAPI
2 Kings 16 in the KBT1ETNIK
2 Kings 16 in the KBV
2 Kings 16 in the KJV
2 Kings 16 in the KNFD
2 Kings 16 in the LBA
2 Kings 16 in the LBLA
2 Kings 16 in the LNT
2 Kings 16 in the LSV
2 Kings 16 in the MAAL
2 Kings 16 in the MBV
2 Kings 16 in the MBV2
2 Kings 16 in the MHNT
2 Kings 16 in the MKNFD
2 Kings 16 in the MNG
2 Kings 16 in the MNT
2 Kings 16 in the MNT2
2 Kings 16 in the MRS1T
2 Kings 16 in the NAA
2 Kings 16 in the NASB
2 Kings 16 in the NBLA
2 Kings 16 in the NBS
2 Kings 16 in the NBVTP
2 Kings 16 in the NET2
2 Kings 16 in the NIV11
2 Kings 16 in the NNT
2 Kings 16 in the NNT2
2 Kings 16 in the NNT3
2 Kings 16 in the PDDPT
2 Kings 16 in the PFNT
2 Kings 16 in the RMNT
2 Kings 16 in the SBIAS
2 Kings 16 in the SBIBS
2 Kings 16 in the SBIBS2
2 Kings 16 in the SBICS
2 Kings 16 in the SBIDS
2 Kings 16 in the SBIGS
2 Kings 16 in the SBIHS
2 Kings 16 in the SBIIS
2 Kings 16 in the SBIIS2
2 Kings 16 in the SBIIS3
2 Kings 16 in the SBIKS
2 Kings 16 in the SBIKS2
2 Kings 16 in the SBIMS
2 Kings 16 in the SBIOS
2 Kings 16 in the SBIPS
2 Kings 16 in the SBISS
2 Kings 16 in the SBITS
2 Kings 16 in the SBITS2
2 Kings 16 in the SBITS3
2 Kings 16 in the SBITS4
2 Kings 16 in the SBIUS
2 Kings 16 in the SBIVS
2 Kings 16 in the SBT
2 Kings 16 in the SBT1E
2 Kings 16 in the SCHL
2 Kings 16 in the SNT
2 Kings 16 in the SUSU
2 Kings 16 in the SUSU2
2 Kings 16 in the SYNO
2 Kings 16 in the TBIAOTANT
2 Kings 16 in the TBT1E
2 Kings 16 in the TBT1E2
2 Kings 16 in the TFTIP
2 Kings 16 in the TFTU
2 Kings 16 in the TGNTATF3T
2 Kings 16 in the THAI
2 Kings 16 in the TNFD
2 Kings 16 in the TNT
2 Kings 16 in the TNTIK
2 Kings 16 in the TNTIL
2 Kings 16 in the TNTIN
2 Kings 16 in the TNTIP
2 Kings 16 in the TNTIZ
2 Kings 16 in the TOMA
2 Kings 16 in the TTENT
2 Kings 16 in the UBG
2 Kings 16 in the UGV
2 Kings 16 in the UGV2
2 Kings 16 in the UGV3
2 Kings 16 in the VBL
2 Kings 16 in the VDCC
2 Kings 16 in the YALU
2 Kings 16 in the YAPE
2 Kings 16 in the YBVTP
2 Kings 16 in the ZBP