Proverbs 19 (BOITCV)
1 வஞ்சக உதடுகளுள்ள மூடரைப் பார்க்கிலும்,குற்றமற்றவராய் நடக்கிற ஏழையே சிறந்தவர். 2 அறிவில்லாமல் எதையாவது பற்றி வைராக்கியம் கொள்வது நல்லதல்ல;அவசரப்பட்டால் வழிதவறி விடுவது எவ்வளவு நிச்சயம்! 3 ஒருவருடைய மூடத்தனமே அவருடைய வாழ்க்கையை பாழாக்குகிறது;ஆனாலும் அவர்களுடைய இருதயமோ யெகோவாவுக்கு எதிராகக் கோபம்கொள்கிறது. 4 செல்வம் அநேக நண்பர்களைக் கொண்டுவரும்;ஆனால் ஏழைகளை நெருங்கிய நண்பரும் கைவிடுவார்கள். 5 பொய்ச்சாட்சி சொல்பவர் தண்டனைக்குத் தப்பமாட்டார்கள்;பொய்யைத் தாராளமாய்ப் பேசுபவரும் தப்பமுடியாது. 6 ஆளுநரின் தயவைப் பெற அநேகர் நாடுகின்றனர்;அன்பளிப்பு கொடுப்பவருக்கு அனைவரும் நண்பர்கள். 7 ஏழைகளின் உறவினர்கள் அவர்களை வெறுக்கிறார்கள்,அவர்களுடைய சிநேகிதர்கள் எவ்வளவு அதிகமாய் அவர்களைப் புறக்கணிப்பார்கள்!ஏழைகளோ அவர்களிடம் கெஞ்சினாலும்,அவர்களுடைய நண்பர்கள் போய்விடுகிறார்கள். 8 ஞானத்தைப் பெறுகிறவர் தன் வாழ்வை நேசிக்கிறார்கள்,புரிந்துகொள்ளுதலைக் காப்பவர்கள் நன்மையடைவார்கள். 9 பொய்ச்சாட்சி சொல்பவர் தண்டனைக்குத் தப்பமாட்டார்கள்;பொய்யைத் தாராளமாய்ப் பேசுபவரும் தப்பமுடியாது. 10 ஆடம்பர வாழ்வு மதியீனருக்குத் தகுந்ததல்ல;ஒரு அடிமை இளவரசர்களை ஆட்சி செய்வது எவ்வளவு மோசமானது! 11 ஒருவருடைய ஞானம் அவருக்கு பொறுமையைக் கொடுக்கிறது;குற்றத்தைப் பொருட்படுத்தாமல் இருப்பது அவர்களுக்கு மகிமை. 12 அரசனின் கடுங்கோபம் ஒரு சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்;ஆனால் அவனுடைய தயவோ புல்லின்மேலுள்ள பனியைப்போலிருக்கும். 13 மதிகெட்ட மகன் தன் தகப்பனுக்கு அழிவு;வாக்குவாதம் செய்யும் மனைவி,ஓட்டைக் கூரையிலிருந்து ஓயாமல் ஒழுகும் நீரைப்போல் இருக்கிறாள். 14 வீடுகளும் செல்வமும் பெற்றோரிடமிருந்து உரிமைச்சொத்தாய் கிடைக்கின்றன;ஆனால் விவேகமுள்ள மனைவியோ யெகோவாவிடமிருந்து கிடைக்கிறாள். 15 சோம்பல் ஆழ்ந்த நித்திரையைக் கொண்டுவரும்.வேலைசெய்ய மறுப்பவர்கள் பசியாயிருப்பார்கள். 16 கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்கள் தங்கள் வாழ்வைக் காத்துக்கொள்கிறார்கள்;ஆனால் தங்கள் வழிகள்மேல் கவனமாயிராதவர்கள் சாவார்கள். 17 ஏழைக்கு உதவுகிறவர்கள் யெகோவாவுக்குக் கடன் கொடுக்கிறார்கள்,அவர்கள் உதவியதற்கு சரியாக அவர்களுக்கு திரும்பக் கொடுப்பார். 18 உன் பிள்ளைகள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கும்போதே கண்டித்துத் திருத்து;இல்லாவிட்டால் நீ அவர்களின் வாழ்க்கை அழிய காரணமாகி விடுவாய். 19 முற்கோபமுள்ள மனிதர் தனக்குரிய தண்டனையைப் பெறவேண்டும்;அவரைத் தப்புவித்தால், திரும்பவும் தப்புவிக்க வேண்டிவரும். 20 ஆலோசனையைக் கேட்டு ஒழுக்கத்தை ஏற்றுக்கொள்;முடிவில் நீ ஞானமுள்ளவராவாய். 21 மனிதனின் இருதயத்தின் திட்டங்கள் அநேகம்;ஆனாலும் யெகோவாவின் நோக்கமே நிறைவேறுகிறது. 22 எல்லோரும் நேர்மையான அன்பையே விரும்புகிறார்கள்;பொய்யராய் இருப்பதைவிட ஏழையாய் இருப்பது சிறந்தது. 23 யெகோவாவுக்குப் பயந்து நடப்பது வாழ்விற்கு வழிநடத்தும்;அவ்வாறு இருந்தால் பிரச்சனை இல்லாமல், மனநிறைவுடன் இருக்கலாம். 24 சோம்பேறிகள் தங்கள் கையில் உணவை எடுத்துக்கொள்வார்கள்;ஆனால் அதைத் தங்கள் வாய்க்குக்கூட கொண்டுபோகமாட்டார்கள். 25 ஏளனம் செய்பவர்களுக்கு அடி கிடைக்கும், அப்பொழுது அறிவற்றவர்கள் விவேகத்தைக் கற்றுக்கொள்வார்கள்;பகுத்தறிவுள்ளவர்களைக் கடிந்துகொள், அவர்கள்மேலும் அறிவைப் பெறுவார்கள். 26 தங்கள் தகப்பனின் பொருட்களை அபகரித்து,தங்கள் தாயைத் துரத்திவிடுகிறார்கள் வெட்கமும் அவமானமும் கொண்டுவருகிற பிள்ளைகள். 27 என் பிள்ளையே, நீ அறிவுரைகளைக் கேட்பதை நிறுத்தினால்,அறிவுள்ள வார்த்தைகளிலிருந்து விலகிப்போவாய். 28 சீர்கெட்ட சாட்சி நீதியைக் கேலி செய்கிறது,கொடியவர்களின் வாயோ தீமையை விழுங்குகிறது. 29 ஏளனம் செய்வோருக்கு தண்டனையும்,மூடருடைய முதுகிற்கு அடிகளும் ஆயத்தமாயிருக்கிறது.
In Other Versions
Proverbs 19 in the ANGEFD
Proverbs 19 in the ANTPNG2D
Proverbs 19 in the AS21
Proverbs 19 in the BAGH
Proverbs 19 in the BBPNG
Proverbs 19 in the BBT1E
Proverbs 19 in the BDS
Proverbs 19 in the BEV
Proverbs 19 in the BHAD
Proverbs 19 in the BIB
Proverbs 19 in the BLPT
Proverbs 19 in the BNT
Proverbs 19 in the BNTABOOT
Proverbs 19 in the BNTLV
Proverbs 19 in the BOATCB
Proverbs 19 in the BOATCB2
Proverbs 19 in the BOBCV
Proverbs 19 in the BOCNT
Proverbs 19 in the BOECS
Proverbs 19 in the BOGWICC
Proverbs 19 in the BOHCB
Proverbs 19 in the BOHCV
Proverbs 19 in the BOHLNT
Proverbs 19 in the BOHNTLTAL
Proverbs 19 in the BOICB
Proverbs 19 in the BOILNTAP
Proverbs 19 in the BOKCV
Proverbs 19 in the BOKCV2
Proverbs 19 in the BOKHWOG
Proverbs 19 in the BOKSSV
Proverbs 19 in the BOLCB
Proverbs 19 in the BOLCB2
Proverbs 19 in the BOMCV
Proverbs 19 in the BONAV
Proverbs 19 in the BONCB
Proverbs 19 in the BONLT
Proverbs 19 in the BONUT2
Proverbs 19 in the BOPLNT
Proverbs 19 in the BOSCB
Proverbs 19 in the BOSNC
Proverbs 19 in the BOTLNT
Proverbs 19 in the BOVCB
Proverbs 19 in the BOYCB
Proverbs 19 in the BPBB
Proverbs 19 in the BPH
Proverbs 19 in the BSB
Proverbs 19 in the CCB
Proverbs 19 in the CUV
Proverbs 19 in the CUVS
Proverbs 19 in the DBT
Proverbs 19 in the DGDNT
Proverbs 19 in the DHNT
Proverbs 19 in the DNT
Proverbs 19 in the ELBE
Proverbs 19 in the EMTV
Proverbs 19 in the ESV
Proverbs 19 in the FBV
Proverbs 19 in the FEB
Proverbs 19 in the GGMNT
Proverbs 19 in the GNT
Proverbs 19 in the HARY
Proverbs 19 in the HNT
Proverbs 19 in the IRVA
Proverbs 19 in the IRVB
Proverbs 19 in the IRVG
Proverbs 19 in the IRVH
Proverbs 19 in the IRVK
Proverbs 19 in the IRVM
Proverbs 19 in the IRVM2
Proverbs 19 in the IRVO
Proverbs 19 in the IRVP
Proverbs 19 in the IRVT
Proverbs 19 in the IRVT2
Proverbs 19 in the IRVU
Proverbs 19 in the ISVN
Proverbs 19 in the JSNT
Proverbs 19 in the KAPI
Proverbs 19 in the KBT1ETNIK
Proverbs 19 in the KBV
Proverbs 19 in the KJV
Proverbs 19 in the KNFD
Proverbs 19 in the LBA
Proverbs 19 in the LBLA
Proverbs 19 in the LNT
Proverbs 19 in the LSV
Proverbs 19 in the MAAL
Proverbs 19 in the MBV
Proverbs 19 in the MBV2
Proverbs 19 in the MHNT
Proverbs 19 in the MKNFD
Proverbs 19 in the MNG
Proverbs 19 in the MNT
Proverbs 19 in the MNT2
Proverbs 19 in the MRS1T
Proverbs 19 in the NAA
Proverbs 19 in the NASB
Proverbs 19 in the NBLA
Proverbs 19 in the NBS
Proverbs 19 in the NBVTP
Proverbs 19 in the NET2
Proverbs 19 in the NIV11
Proverbs 19 in the NNT
Proverbs 19 in the NNT2
Proverbs 19 in the NNT3
Proverbs 19 in the PDDPT
Proverbs 19 in the PFNT
Proverbs 19 in the RMNT
Proverbs 19 in the SBIAS
Proverbs 19 in the SBIBS
Proverbs 19 in the SBIBS2
Proverbs 19 in the SBICS
Proverbs 19 in the SBIDS
Proverbs 19 in the SBIGS
Proverbs 19 in the SBIHS
Proverbs 19 in the SBIIS
Proverbs 19 in the SBIIS2
Proverbs 19 in the SBIIS3
Proverbs 19 in the SBIKS
Proverbs 19 in the SBIKS2
Proverbs 19 in the SBIMS
Proverbs 19 in the SBIOS
Proverbs 19 in the SBIPS
Proverbs 19 in the SBISS
Proverbs 19 in the SBITS
Proverbs 19 in the SBITS2
Proverbs 19 in the SBITS3
Proverbs 19 in the SBITS4
Proverbs 19 in the SBIUS
Proverbs 19 in the SBIVS
Proverbs 19 in the SBT
Proverbs 19 in the SBT1E
Proverbs 19 in the SCHL
Proverbs 19 in the SNT
Proverbs 19 in the SUSU
Proverbs 19 in the SUSU2
Proverbs 19 in the SYNO
Proverbs 19 in the TBIAOTANT
Proverbs 19 in the TBT1E
Proverbs 19 in the TBT1E2
Proverbs 19 in the TFTIP
Proverbs 19 in the TFTU
Proverbs 19 in the TGNTATF3T
Proverbs 19 in the THAI
Proverbs 19 in the TNFD
Proverbs 19 in the TNT
Proverbs 19 in the TNTIK
Proverbs 19 in the TNTIL
Proverbs 19 in the TNTIN
Proverbs 19 in the TNTIP
Proverbs 19 in the TNTIZ
Proverbs 19 in the TOMA
Proverbs 19 in the TTENT
Proverbs 19 in the UBG
Proverbs 19 in the UGV
Proverbs 19 in the UGV2
Proverbs 19 in the UGV3
Proverbs 19 in the VBL
Proverbs 19 in the VDCC
Proverbs 19 in the YALU
Proverbs 19 in the YAPE
Proverbs 19 in the YBVTP
Proverbs 19 in the ZBP