Isaiah 43 (IRVT)

1 இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய யெகோவா சொல்கிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பெயர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன். 2 நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ நெருப்பில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; நெருப்புத்தழல் உன்னை சுட்டெரிக்காது. 3 நான் இஸ்ரவேலின் பரிசுத்தரும், உன் இரட்சகருமாயிருக்கிற உன் தேவனாகிய யெகோவா; உன்னை மீட்கும்பொருளாக எகிப்தையும், உனக்கு ஈடாக எத்தியோப்பியாவையும் சேபாவையும் கொடுத்தேன். 4 நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய்; நானும் உன்னைச் சிநேகித்தேன், ஆதலால் உனக்குப் பதிலாக மனிதர்களையும், உன் ஜீவனுக்கு ஈடாக மக்களையும் கொடுப்பேன். 5 பயப்படாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்; நான் உன் சந்ததியைக் கிழக்கிலிருந்து வரச்செய்து, உன்னை மேற்கிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பேன். 6 நான் வடக்கை நோக்கி: கொடு என்றும், தெற்கை நோக்கி: வைத்திராதே என்றும் சொல்லி, தூரத்திலிருந்து என் மகன்களையும், பூமியின் கடையாந்தரத்திலிருந்து என் மகள்களையும், 7 நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்து, என் பெயர் சூட்டப்பட்ட அனைவரையும் கொண்டுவா என்பேன். 8 கண்களிருந்தும் குருடர்களாயிருக்கிற மக்களையும், காதுகளிருந்தும் செவிடர்களாயிருக்கிறவர்களையும் புறப்பட்டு வரச்செய்யுங்கள். 9 சகல தேசங்களும் ஏகமாகச் சேர்ந்துகொண்டு, சகல மக்களும் கூடிவரட்டும்; இதை அறிவித்து, முந்தி சம்பவிப்பவைகளை நமக்குத் தெரிவிக்கிறவன் யார்? கேட்டு உண்மையென்று சொல்லக்கூடும்படிக்கு, அவர்கள் தங்கள் சாட்சிகளைக் கொண்டுவந்து நேர்மையானவர்களாக விளங்கட்டும். 10 நானே அவரென்று நீங்கள் உணர்ந்து என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு, நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் ஊழியக்காரனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று யெகோவா சொல்கிறார்; எனக்குமுன் ஏற்பட்ட தேவன் இல்லை; எனக்குப்பின் இருப்பதும் இல்லை. 11 நான், நானே யெகோவா; என்னையல்லாமல் இரட்சகர் இல்லை. 12 நானே அறிவித்து, இரட்சித்து, விளங்கச்செய்தேன்; உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன் இல்லை; நானே தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று யெகோவா சொல்கிறார். 13 நாள் உண்டாகாததற்குமுன்னும் நானே இருக்கிறேன்; என் கைக்குத் தப்புவிக்கத்தக்கவன் இல்லை; நான் செய்கிறதைத் தடுப்பவன் யார்? 14 நான் உங்களுக்காக அரண்களெல்லாம் இடிந்துவிழவும், கல்தேயர்கள் படகுகளிலிருந்து அலறவும் செய்யத்தக்கவர்களைப் பாபிலோனுக்கு அனுப்பினேனென்று, உங்கள் மீட்பரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய யெகோவா சொல்கிறார். 15 நானே உங்கள் பரிசுத்தராகிய யெகோவாவும், இஸ்ரவேலின் சிருஷ்டிகரும், உங்கள் ராஜாவுமானவர். 16 கடலிலே வழியையும் திரளான தண்ணீர்களிலே பாதையையும் உண்டாக்கி, 17 இரதங்களையும் குதிரைகளையும் படைகளையும் பராக்கிரமசாலிகளையும் புறப்படச்செய்து, அவைகள் எழுந்திராதபடிக்கு ஒருமித்து விழுந்துகிடக்கவும், ஒரு திரி அணைகிறதுபோல் அவைகள் அணைந்துபோகவும்செய்கிற யெகோவா சொல்கிறதாவது: 18 முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; முந்தினமானவைகளைச் சிந்திக்கவேண்டாம். 19 இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்திரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன். 20 நான் தெரிந்துகொண்ட என் மக்களின் தாகத்திற்கு வனாந்திரத்திலே தண்ணீர்களையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவதினால், காட்டுமிருகங்களும், வலுசர்ப்பங்களும், ஆந்தைக் குஞ்சுகளும் என்னைக் கனப்படுத்தும். 21 இந்த மக்களை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள். 22 ஆனாலும் யாக்கோபே, நீ என்னை நோக்கிக் கூப்பிடவில்லை; இஸ்ரவேலே, நீ என்னைக்குறித்து மனம்சலித்துப்போனாய். 23 உன் ஆடுகளைத் தகனபலிகளாக நீ எனக்குச் செலுத்தவில்லை; உன் பலிகளாலே நீ என்னைக் கனப்படுத்தவுமில்லை; காணிக்கைகளைச் செலுத்தும்படி நான் உன்னைச் சங்கடப்படுத்தாமலும், தூபங்காட்டும்படி உன்னை வருத்தப்படுத்தாமலும் இருந்தேன். 24 நீ எனக்குப் பணங்களால் சுகந்தப்பட்டையைக் கொள்ளாமலும், உன் பலிகளின் கொழுப்பினால் என்னைத் திருப்தியாக்காமலும், உன் பாவங்களினால் என்னைச் சங்கடப்படுத்தி, உன் அக்கிரமங்களினால் என்னை வருத்தப்படுத்தினாய். 25 நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினைக்காமலும் இருப்பேன். 26 நாம் ஒருவரோடொருவர் வழக்காடும்படி எனக்கு நினைப்பூட்டு; நீ நீதிமானாக விளங்கும்படி உன் காரியத்தைச் சொல். 27 உன் ஆதிதகப்பன் பாவம்செய்தான்; உனக்கு முன்னின்று பேசுகிறவர்களும் எனக்கு விரோதமாகத் துரோகம்செய்தார்கள். 28 ஆகையால், நான் பரிசுத்த ஸ்தலத்தின் தலைவர்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, யாக்கோபைச் சாபத்திற்கும், இஸ்ரவேலை நிந்தனைக்கும் ஒப்புக்கொடுப்பேன்.

In Other Versions

Isaiah 43 in the ANGEFD

Isaiah 43 in the ANTPNG2D

Isaiah 43 in the AS21

Isaiah 43 in the BAGH

Isaiah 43 in the BBPNG

Isaiah 43 in the BBT1E

Isaiah 43 in the BDS

Isaiah 43 in the BEV

Isaiah 43 in the BHAD

Isaiah 43 in the BIB

Isaiah 43 in the BLPT

Isaiah 43 in the BNT

Isaiah 43 in the BNTABOOT

Isaiah 43 in the BNTLV

Isaiah 43 in the BOATCB

Isaiah 43 in the BOATCB2

Isaiah 43 in the BOBCV

Isaiah 43 in the BOCNT

Isaiah 43 in the BOECS

Isaiah 43 in the BOGWICC

Isaiah 43 in the BOHCB

Isaiah 43 in the BOHCV

Isaiah 43 in the BOHLNT

Isaiah 43 in the BOHNTLTAL

Isaiah 43 in the BOICB

Isaiah 43 in the BOILNTAP

Isaiah 43 in the BOITCV

Isaiah 43 in the BOKCV

Isaiah 43 in the BOKCV2

Isaiah 43 in the BOKHWOG

Isaiah 43 in the BOKSSV

Isaiah 43 in the BOLCB

Isaiah 43 in the BOLCB2

Isaiah 43 in the BOMCV

Isaiah 43 in the BONAV

Isaiah 43 in the BONCB

Isaiah 43 in the BONLT

Isaiah 43 in the BONUT2

Isaiah 43 in the BOPLNT

Isaiah 43 in the BOSCB

Isaiah 43 in the BOSNC

Isaiah 43 in the BOTLNT

Isaiah 43 in the BOVCB

Isaiah 43 in the BOYCB

Isaiah 43 in the BPBB

Isaiah 43 in the BPH

Isaiah 43 in the BSB

Isaiah 43 in the CCB

Isaiah 43 in the CUV

Isaiah 43 in the CUVS

Isaiah 43 in the DBT

Isaiah 43 in the DGDNT

Isaiah 43 in the DHNT

Isaiah 43 in the DNT

Isaiah 43 in the ELBE

Isaiah 43 in the EMTV

Isaiah 43 in the ESV

Isaiah 43 in the FBV

Isaiah 43 in the FEB

Isaiah 43 in the GGMNT

Isaiah 43 in the GNT

Isaiah 43 in the HARY

Isaiah 43 in the HNT

Isaiah 43 in the IRVA

Isaiah 43 in the IRVB

Isaiah 43 in the IRVG

Isaiah 43 in the IRVH

Isaiah 43 in the IRVK

Isaiah 43 in the IRVM

Isaiah 43 in the IRVM2

Isaiah 43 in the IRVO

Isaiah 43 in the IRVP

Isaiah 43 in the IRVT2

Isaiah 43 in the IRVU

Isaiah 43 in the ISVN

Isaiah 43 in the JSNT

Isaiah 43 in the KAPI

Isaiah 43 in the KBT1ETNIK

Isaiah 43 in the KBV

Isaiah 43 in the KJV

Isaiah 43 in the KNFD

Isaiah 43 in the LBA

Isaiah 43 in the LBLA

Isaiah 43 in the LNT

Isaiah 43 in the LSV

Isaiah 43 in the MAAL

Isaiah 43 in the MBV

Isaiah 43 in the MBV2

Isaiah 43 in the MHNT

Isaiah 43 in the MKNFD

Isaiah 43 in the MNG

Isaiah 43 in the MNT

Isaiah 43 in the MNT2

Isaiah 43 in the MRS1T

Isaiah 43 in the NAA

Isaiah 43 in the NASB

Isaiah 43 in the NBLA

Isaiah 43 in the NBS

Isaiah 43 in the NBVTP

Isaiah 43 in the NET2

Isaiah 43 in the NIV11

Isaiah 43 in the NNT

Isaiah 43 in the NNT2

Isaiah 43 in the NNT3

Isaiah 43 in the PDDPT

Isaiah 43 in the PFNT

Isaiah 43 in the RMNT

Isaiah 43 in the SBIAS

Isaiah 43 in the SBIBS

Isaiah 43 in the SBIBS2

Isaiah 43 in the SBICS

Isaiah 43 in the SBIDS

Isaiah 43 in the SBIGS

Isaiah 43 in the SBIHS

Isaiah 43 in the SBIIS

Isaiah 43 in the SBIIS2

Isaiah 43 in the SBIIS3

Isaiah 43 in the SBIKS

Isaiah 43 in the SBIKS2

Isaiah 43 in the SBIMS

Isaiah 43 in the SBIOS

Isaiah 43 in the SBIPS

Isaiah 43 in the SBISS

Isaiah 43 in the SBITS

Isaiah 43 in the SBITS2

Isaiah 43 in the SBITS3

Isaiah 43 in the SBITS4

Isaiah 43 in the SBIUS

Isaiah 43 in the SBIVS

Isaiah 43 in the SBT

Isaiah 43 in the SBT1E

Isaiah 43 in the SCHL

Isaiah 43 in the SNT

Isaiah 43 in the SUSU

Isaiah 43 in the SUSU2

Isaiah 43 in the SYNO

Isaiah 43 in the TBIAOTANT

Isaiah 43 in the TBT1E

Isaiah 43 in the TBT1E2

Isaiah 43 in the TFTIP

Isaiah 43 in the TFTU

Isaiah 43 in the TGNTATF3T

Isaiah 43 in the THAI

Isaiah 43 in the TNFD

Isaiah 43 in the TNT

Isaiah 43 in the TNTIK

Isaiah 43 in the TNTIL

Isaiah 43 in the TNTIN

Isaiah 43 in the TNTIP

Isaiah 43 in the TNTIZ

Isaiah 43 in the TOMA

Isaiah 43 in the TTENT

Isaiah 43 in the UBG

Isaiah 43 in the UGV

Isaiah 43 in the UGV2

Isaiah 43 in the UGV3

Isaiah 43 in the VBL

Isaiah 43 in the VDCC

Isaiah 43 in the YALU

Isaiah 43 in the YAPE

Isaiah 43 in the YBVTP

Isaiah 43 in the ZBP