Jeremiah 19 (IRVT)
1 யெகோவா சொன்னது: நீ போய்க் குயவன் வேலையான ஒரு கலசத்தைக் கொண்டு, மக்களின் மூப்பரிலும், ஆசாரியர்களின் மூப்பரிலும் சிலரைக் கூட்டிக்கொண்டு, 2 கிழக்கு வாசலுக்கு முன்பான இன்னோமுடைய மகனின் பள்ளத்தாக்கில் புறப்பட்டுப்போய், நான் உன்னுடன் சொல்லும் வார்த்தைகளை அங்கே பிரசித்தப்படுத்து. 3 நீ அவர்களை நோக்கி: யூதாவின் ராஜாக்களே, எருசலேமின் குடிகளே, யெகோவாவுடைய வார்த்தைகளைக் கேளுங்கள்; இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்: இதோ, நான் இந்த இடத்தின்மேல் ஒரு பொல்லாப்பை வரச்செய்வேன்; அதைக் கேட்கிற அனைவருடைய காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும். 4 அவர்கள் என்னை விட்டுவிட்டு, இந்த இடத்தை அந்நிய இடமாக்கி, தாங்களும், தங்கள் முற்பிதாக்களும், யூதாவின் ராஜாக்களும், அறியாதிருந்த அந்நிய தெய்வங்களுக்கு அதில் தூபங்காட்டி, இந்த இடத்தைக் குற்றமில்லாதவர்களின் இரத்தத்தினால் நிரப்பினதினாலும், 5 தங்கள் பிள்ளைகளைப் பாகாலுக்குத் தகனபலிகளாகத் தகனிப்பதற்கு பாகாலின் மேடைகளைக் கட்டினதினாலும் இப்படி வரச்செய்வேன்; இவைகளை நான் கற்பித்ததுமில்லை, சொன்னதுமில்லை, இவைகள் என் இருதயத்தில் தோன்றினதுமில்லை. 6 ஆகையால், இதோ, நாட்கள் வரும், அப்பொழுது இந்த இடம் தோப்பேத்தென்றும், இன்னோமுடைய மகனின் பள்ளத்தாக்கென்றும் இனிச் சொல்லப்படாமல், சங்கார பள்ளத்தாக்கென்று சொல்லப்படும். 7 அப்பொழுது நான் யூதாவுக்கும் எருசலேமுக்கும் கொண்டிருந்த ஆலோசனையை இந்த இடத்தில் வெறுமையாக்கி, அவர்கள் எதிரிகளுக்கு முன்பாக அவர்களைப் பட்டயத்தினாலும், அவர்கள் உயிரை வாங்கத்தேடுகிறவர்களின் கையினாலும் விழச்செய்து, அவர்கள் பிணங்களை ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் இரையாகக் கொடுத்து, 8 இந்த நகரத்தை அழிக்கவும் சத்தமிட்டு நிந்திக்கிற நிந்தையாகவும் வைப்பேன்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து, அதின் எல்லா வாதைகளினிமித்தமும் சத்தமிடுவான். 9 அவர்களுடைய எதிரிகளும் அவர்கள் உயிரை வாங்கத் தேடுகிறவர்களும், அவர்களை இறுகப்பிடிக்கப்போகிற முற்றுகையிலும் இடுக்கத்திலும், நான் அவர்களைத் தங்கள் மகன்களின் மாம்சத்தையும் தங்கள் மகள்களின் மாம்சத்தையும் சாப்பிடச்செய்வேன்; அவனவன் தனக்கு அடுத்தவனுடைய மாம்சத்தை சாப்பிடுவான் என்று யெகோவா சொல்லுகிறார் என்று நீ சொல்லி, 10 உன்னுடன் கூடவந்த மனிதனுடைய கண்களுக்கு முன்பாக அந்தக் கலசத்தை உடைத்துப்போட்டு, 11 அவர்களை நோக்கி: திரும்பச் சரிசெய்யமுடியாத குயவனுடைய மண்பாத்திரத்தை உடைத்துப்போட்டவிதமாக, நான் இந்த மக்களையும் இந்த நகரத்தையும் உடைத்துப்போடுவேன்; புதைக்கிறதற்கு இடமில்லாததினால் தோப்பேத்தில் சவங்களைப் புதைப்பார்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். 12 இவ்விதமாக நான் இந்த இடத்திற்கும் இதின் குடிமக்களுக்கும் செய்து, இந்த நகரத்தைத் தோப்பேத்திற்குச் சரியாக்குவேன். 13 எந்த வீடுகளின்மேல் வானத்தின் எல்லா சேனைக்கும் தூபங்காட்டி, அந்நிய தெய்வங்களுக்குப் பானபலிகளை வார்த்தார்களோ, அந்த வீடுகளாகிய எருசலேமின் வீடுகளும் யூதாவுடைய ராஜாவின் வீடுகளும் தோப்பேத் என்கிற இடத்தைப்போல் தீட்டுப்பட்டவைகளாக இருக்குமென்று யெகோவா சொல்லுகிறார் என்று சொல் என்றார். 14 பின்பு எரேமியா, யெகோவா தன்னைத் தீர்க்கதரிசனஞ்சொல்ல அனுப்பின தோப்பேத்திலிருந்து வந்து, யெகோவாவுடைய ஆலயத்தின் முற்றத்தில் நின்றுகொண்டு, எல்லா மக்களையும் பார்த்து: 15 இதோ, நீங்கள் என் வார்த்தைகளைக் கேளாமல் உங்கள் கழுத்தைக் கடினப்படுத்தினதினால் நான் இந்த நகரத்திற்கு விரோதமாகச் சொன்ன எல்லாத் தீங்கையும் இதின்மேலும் இதைச் சுற்றியுள்ள பட்டணங்களின்மேலும் வரச்செய்வேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்றான்.
In Other Versions
Jeremiah 19 in the ANGEFD
Jeremiah 19 in the ANTPNG2D
Jeremiah 19 in the AS21
Jeremiah 19 in the BAGH
Jeremiah 19 in the BBPNG
Jeremiah 19 in the BBT1E
Jeremiah 19 in the BDS
Jeremiah 19 in the BEV
Jeremiah 19 in the BHAD
Jeremiah 19 in the BIB
Jeremiah 19 in the BLPT
Jeremiah 19 in the BNT
Jeremiah 19 in the BNTABOOT
Jeremiah 19 in the BNTLV
Jeremiah 19 in the BOATCB
Jeremiah 19 in the BOATCB2
Jeremiah 19 in the BOBCV
Jeremiah 19 in the BOCNT
Jeremiah 19 in the BOECS
Jeremiah 19 in the BOGWICC
Jeremiah 19 in the BOHCB
Jeremiah 19 in the BOHCV
Jeremiah 19 in the BOHLNT
Jeremiah 19 in the BOHNTLTAL
Jeremiah 19 in the BOICB
Jeremiah 19 in the BOILNTAP
Jeremiah 19 in the BOITCV
Jeremiah 19 in the BOKCV
Jeremiah 19 in the BOKCV2
Jeremiah 19 in the BOKHWOG
Jeremiah 19 in the BOKSSV
Jeremiah 19 in the BOLCB
Jeremiah 19 in the BOLCB2
Jeremiah 19 in the BOMCV
Jeremiah 19 in the BONAV
Jeremiah 19 in the BONCB
Jeremiah 19 in the BONLT
Jeremiah 19 in the BONUT2
Jeremiah 19 in the BOPLNT
Jeremiah 19 in the BOSCB
Jeremiah 19 in the BOSNC
Jeremiah 19 in the BOTLNT
Jeremiah 19 in the BOVCB
Jeremiah 19 in the BOYCB
Jeremiah 19 in the BPBB
Jeremiah 19 in the BPH
Jeremiah 19 in the BSB
Jeremiah 19 in the CCB
Jeremiah 19 in the CUV
Jeremiah 19 in the CUVS
Jeremiah 19 in the DBT
Jeremiah 19 in the DGDNT
Jeremiah 19 in the DHNT
Jeremiah 19 in the DNT
Jeremiah 19 in the ELBE
Jeremiah 19 in the EMTV
Jeremiah 19 in the ESV
Jeremiah 19 in the FBV
Jeremiah 19 in the FEB
Jeremiah 19 in the GGMNT
Jeremiah 19 in the GNT
Jeremiah 19 in the HARY
Jeremiah 19 in the HNT
Jeremiah 19 in the IRVA
Jeremiah 19 in the IRVB
Jeremiah 19 in the IRVG
Jeremiah 19 in the IRVH
Jeremiah 19 in the IRVK
Jeremiah 19 in the IRVM
Jeremiah 19 in the IRVM2
Jeremiah 19 in the IRVO
Jeremiah 19 in the IRVP
Jeremiah 19 in the IRVT2
Jeremiah 19 in the IRVU
Jeremiah 19 in the ISVN
Jeremiah 19 in the JSNT
Jeremiah 19 in the KAPI
Jeremiah 19 in the KBT1ETNIK
Jeremiah 19 in the KBV
Jeremiah 19 in the KJV
Jeremiah 19 in the KNFD
Jeremiah 19 in the LBA
Jeremiah 19 in the LBLA
Jeremiah 19 in the LNT
Jeremiah 19 in the LSV
Jeremiah 19 in the MAAL
Jeremiah 19 in the MBV
Jeremiah 19 in the MBV2
Jeremiah 19 in the MHNT
Jeremiah 19 in the MKNFD
Jeremiah 19 in the MNG
Jeremiah 19 in the MNT
Jeremiah 19 in the MNT2
Jeremiah 19 in the MRS1T
Jeremiah 19 in the NAA
Jeremiah 19 in the NASB
Jeremiah 19 in the NBLA
Jeremiah 19 in the NBS
Jeremiah 19 in the NBVTP
Jeremiah 19 in the NET2
Jeremiah 19 in the NIV11
Jeremiah 19 in the NNT
Jeremiah 19 in the NNT2
Jeremiah 19 in the NNT3
Jeremiah 19 in the PDDPT
Jeremiah 19 in the PFNT
Jeremiah 19 in the RMNT
Jeremiah 19 in the SBIAS
Jeremiah 19 in the SBIBS
Jeremiah 19 in the SBIBS2
Jeremiah 19 in the SBICS
Jeremiah 19 in the SBIDS
Jeremiah 19 in the SBIGS
Jeremiah 19 in the SBIHS
Jeremiah 19 in the SBIIS
Jeremiah 19 in the SBIIS2
Jeremiah 19 in the SBIIS3
Jeremiah 19 in the SBIKS
Jeremiah 19 in the SBIKS2
Jeremiah 19 in the SBIMS
Jeremiah 19 in the SBIOS
Jeremiah 19 in the SBIPS
Jeremiah 19 in the SBISS
Jeremiah 19 in the SBITS
Jeremiah 19 in the SBITS2
Jeremiah 19 in the SBITS3
Jeremiah 19 in the SBITS4
Jeremiah 19 in the SBIUS
Jeremiah 19 in the SBIVS
Jeremiah 19 in the SBT
Jeremiah 19 in the SBT1E
Jeremiah 19 in the SCHL
Jeremiah 19 in the SNT
Jeremiah 19 in the SUSU
Jeremiah 19 in the SUSU2
Jeremiah 19 in the SYNO
Jeremiah 19 in the TBIAOTANT
Jeremiah 19 in the TBT1E
Jeremiah 19 in the TBT1E2
Jeremiah 19 in the TFTIP
Jeremiah 19 in the TFTU
Jeremiah 19 in the TGNTATF3T
Jeremiah 19 in the THAI
Jeremiah 19 in the TNFD
Jeremiah 19 in the TNT
Jeremiah 19 in the TNTIK
Jeremiah 19 in the TNTIL
Jeremiah 19 in the TNTIN
Jeremiah 19 in the TNTIP
Jeremiah 19 in the TNTIZ
Jeremiah 19 in the TOMA
Jeremiah 19 in the TTENT
Jeremiah 19 in the UBG
Jeremiah 19 in the UGV
Jeremiah 19 in the UGV2
Jeremiah 19 in the UGV3
Jeremiah 19 in the VBL
Jeremiah 19 in the VDCC
Jeremiah 19 in the YALU
Jeremiah 19 in the YAPE
Jeremiah 19 in the YBVTP
Jeremiah 19 in the ZBP