Revelation 6 (IRVT)
1 ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக் கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னைப் பார்த்து: நீ வந்து பார் என்று இடிமுழக்கம்போல சத்தமாகச் சொல்வதைக்கேட்டேன். 2 நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடம் கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான். 3 அவர் இரண்டாம் முத்திரையை உடைத்தபோது, இரண்டாம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்லக்கேட்டேன். 4 அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு, பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலை செய்வதற்காகச் சமாதானத்தை பூமியிலிருந்து எடுத்துப்போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது; ஒரு பெரிய வாளும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. 5 அவர் மூன்றாம் முத்திரையை உடைத்தபோது, மூன்றாம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்வதைக்கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு கறுப்புக்குதிரையைப் பார்த்தேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான். 6 அப்பொழுது, ஒரு வெள்ளிக்காசுக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு வெள்ளிக்காசுக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சைரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் நடுவிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன். 7 அவர் நான்காம் முத்திரையை உடைத்தபோது, நான்காம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்லும் சத்தத்தைக் கேட்டேன். 8 நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைப் பார்த்தேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவனுக்குப் பின்னே சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், மரணத்தினாலும், பூமியின் கொடிய மிருகங்களினாலும், பூமியில் உள்ள நான்கில் ஒரு பங்கு மக்களைக் கொலைசெய்ய அவைகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. 9 அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினாலும் தாங்கள் கொடுத்த சாட்சியினாலும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின் கீழேப் பார்த்தேன். 10 அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமும் உள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடம் எங்களுடைய இரத்தத்தைக்குறித்து எவ்வளவு காலங்கள் நியாயத்தீர்ப்புச் செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று அதிக சத்தமாகக் கேட்டார்கள். 11 அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அவர்கள் தங்களைப்போலக் கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்களுடைய உடன்பணியாளர்களும் தங்களுடைய சகோதரர்களுமானவர்களின் எண்ணிக்கை நிறைவாகும்வரை இன்னும் கொஞ்சக்காலம் காத்திருக்கவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. 12 அவர் ஆறாம் முத்திரையை உடைப்பதைப் பார்த்தேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கருப்புக் கம்பளியைப்போலக் கருத்துப்போனது; சந்திரன் இரத்தம்போல ஆனது. 13 அத்திமரம் பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது. 14 வானமும் சுருட்டப்பட்ட புத்தகம்போல விலகிப்போனது; மலைகள் தீவுகள் எல்லாம் தங்களுடைய இடங்களைவிட்டு விலகிச்சென்றன. 15 பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், படைத்தளபதிகளும், பலவான்களும், அடிமைகள், சுதந்திரமானவர்கள் எல்லோரும், குகைகளிலும் மலைகளின் பாறைகளிலும் ஒளிந்துகொண்டு, 16 மலைகளையும் பாறைகளையும் பார்த்து: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்; 17 அவருடைய கோபத்தின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைத்து நிற்கமுடியும் என்றார்கள்.
In Other Versions
Revelation 6 in the ANGEFD
Revelation 6 in the ANTPNG2D
Revelation 6 in the AS21
Revelation 6 in the BAGH
Revelation 6 in the BBPNG
Revelation 6 in the BBT1E
Revelation 6 in the BDS
Revelation 6 in the BEV
Revelation 6 in the BHAD
Revelation 6 in the BIB
Revelation 6 in the BLPT
Revelation 6 in the BNT
Revelation 6 in the BNTABOOT
Revelation 6 in the BNTLV
Revelation 6 in the BOATCB
Revelation 6 in the BOATCB2
Revelation 6 in the BOBCV
Revelation 6 in the BOCNT
Revelation 6 in the BOECS
Revelation 6 in the BOGWICC
Revelation 6 in the BOHCB
Revelation 6 in the BOHCV
Revelation 6 in the BOHLNT
Revelation 6 in the BOHNTLTAL
Revelation 6 in the BOICB
Revelation 6 in the BOILNTAP
Revelation 6 in the BOITCV
Revelation 6 in the BOKCV
Revelation 6 in the BOKCV2
Revelation 6 in the BOKHWOG
Revelation 6 in the BOKSSV
Revelation 6 in the BOLCB
Revelation 6 in the BOLCB2
Revelation 6 in the BOMCV
Revelation 6 in the BONAV
Revelation 6 in the BONCB
Revelation 6 in the BONLT
Revelation 6 in the BONUT2
Revelation 6 in the BOPLNT
Revelation 6 in the BOSCB
Revelation 6 in the BOSNC
Revelation 6 in the BOTLNT
Revelation 6 in the BOVCB
Revelation 6 in the BOYCB
Revelation 6 in the BPBB
Revelation 6 in the BPH
Revelation 6 in the BSB
Revelation 6 in the CCB
Revelation 6 in the CUV
Revelation 6 in the CUVS
Revelation 6 in the DBT
Revelation 6 in the DGDNT
Revelation 6 in the DHNT
Revelation 6 in the DNT
Revelation 6 in the ELBE
Revelation 6 in the EMTV
Revelation 6 in the ESV
Revelation 6 in the FBV
Revelation 6 in the FEB
Revelation 6 in the GGMNT
Revelation 6 in the GNT
Revelation 6 in the HARY
Revelation 6 in the HNT
Revelation 6 in the IRVA
Revelation 6 in the IRVB
Revelation 6 in the IRVG
Revelation 6 in the IRVH
Revelation 6 in the IRVK
Revelation 6 in the IRVM
Revelation 6 in the IRVM2
Revelation 6 in the IRVO
Revelation 6 in the IRVP
Revelation 6 in the IRVT2
Revelation 6 in the IRVU
Revelation 6 in the ISVN
Revelation 6 in the JSNT
Revelation 6 in the KAPI
Revelation 6 in the KBT1ETNIK
Revelation 6 in the KBV
Revelation 6 in the KJV
Revelation 6 in the KNFD
Revelation 6 in the LBA
Revelation 6 in the LBLA
Revelation 6 in the LNT
Revelation 6 in the LSV
Revelation 6 in the MAAL
Revelation 6 in the MBV
Revelation 6 in the MBV2
Revelation 6 in the MHNT
Revelation 6 in the MKNFD
Revelation 6 in the MNG
Revelation 6 in the MNT
Revelation 6 in the MNT2
Revelation 6 in the MRS1T
Revelation 6 in the NAA
Revelation 6 in the NASB
Revelation 6 in the NBLA
Revelation 6 in the NBS
Revelation 6 in the NBVTP
Revelation 6 in the NET2
Revelation 6 in the NIV11
Revelation 6 in the NNT
Revelation 6 in the NNT2
Revelation 6 in the NNT3
Revelation 6 in the PDDPT
Revelation 6 in the PFNT
Revelation 6 in the RMNT
Revelation 6 in the SBIAS
Revelation 6 in the SBIBS
Revelation 6 in the SBIBS2
Revelation 6 in the SBICS
Revelation 6 in the SBIDS
Revelation 6 in the SBIGS
Revelation 6 in the SBIHS
Revelation 6 in the SBIIS
Revelation 6 in the SBIIS2
Revelation 6 in the SBIIS3
Revelation 6 in the SBIKS
Revelation 6 in the SBIKS2
Revelation 6 in the SBIMS
Revelation 6 in the SBIOS
Revelation 6 in the SBIPS
Revelation 6 in the SBISS
Revelation 6 in the SBITS
Revelation 6 in the SBITS2
Revelation 6 in the SBITS3
Revelation 6 in the SBITS4
Revelation 6 in the SBIUS
Revelation 6 in the SBIVS
Revelation 6 in the SBT
Revelation 6 in the SBT1E
Revelation 6 in the SCHL
Revelation 6 in the SNT
Revelation 6 in the SUSU
Revelation 6 in the SUSU2
Revelation 6 in the SYNO
Revelation 6 in the TBIAOTANT
Revelation 6 in the TBT1E
Revelation 6 in the TBT1E2
Revelation 6 in the TFTIP
Revelation 6 in the TFTU
Revelation 6 in the TGNTATF3T
Revelation 6 in the THAI
Revelation 6 in the TNFD
Revelation 6 in the TNT
Revelation 6 in the TNTIK
Revelation 6 in the TNTIL
Revelation 6 in the TNTIN
Revelation 6 in the TNTIP
Revelation 6 in the TNTIZ
Revelation 6 in the TOMA
Revelation 6 in the TTENT
Revelation 6 in the UBG
Revelation 6 in the UGV
Revelation 6 in the UGV2
Revelation 6 in the UGV3
Revelation 6 in the VBL
Revelation 6 in the VDCC
Revelation 6 in the YALU
Revelation 6 in the YAPE
Revelation 6 in the YBVTP
Revelation 6 in the ZBP