Psalms 142 (BOITCV)
undefined தாவீது குகையிலிருந்தபோது செய்த ஜெபமாகிய மஸ்கீல் என்னும் சங்கீதம். 1 நான் யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்;நான் யெகோவாவிடம் இரக்கம் கேட்டு என் குரலை உயர்த்துகிறேன். 2 அவருக்கு முன்பாக என் குறைகளைக் கொட்டுகிறேன்;என் துன்பத்தையும் அவருக்கு முன்பாக சொல்கிறேன். 3 என் ஆவி எனக்குள் சோர்ந்து போகையில்,நீரே என் வழியை அறிகிறவர்;நான் நடக்கும் பாதையில்மனிதர்கள் எனக்குக் கண்ணியை மறைத்து வைத்திருக்கிறார்கள். 4 நோக்கிப்பாரும், உதவிக்காக என் வலதுபக்கத்தில் யாரும் இல்லை;என்னில் அக்கறை கொள்பவர்கள் யாருமில்லை.எனக்குப் புகலிடம் இல்லை;என்னைக் கவனிக்க எவருமில்லை. 5 யெகோவாவே, நான் உம்மை நோக்கிக் கதறுகிறேன்;“நீரே என் புகலிடம்,வாழ்வோரின் நாட்டில் நீரே என் பங்கு” என்று நான் சொல்கிறேன். 6 என் கதறலுக்குச் செவிகொடும்;நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்;என்னைப் பிடிக்க பின்தொடர்கிறவர்களிடமிருந்து என்னை விடுவியும்;ஏனெனில் அவர்கள் என்னைவிட பலமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். 7 நான் உமது பெயரைத் துதிக்கும்படி,என் சிறையிலிருந்து என்னை விடுதலையாக்கும்;அப்பொழுது நீர் எனக்குச் செய்யும் நன்மையினிமித்தம்,நீதிமான்கள் என்னைச் சுற்றிச் சேர்ந்துகொள்வார்கள்.