Exodus 35 (IRVT)

1 மோசே இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரையும் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி: 2 “நீங்கள் ஆறுநாட்கள் வேலைசெய்யவேண்டும், ஏழாம் நாளோ உங்களுக்குப் பரிசுத்த நாளாக இருப்பதாக; அது யெகோவாவுக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வுநாள்; அதிலே வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும். 3 ஓய்வுநாளில் உங்களுடைய வீடுகளில் நெருப்பு மூட்டாதிருங்கள் என்னும் இந்த வார்த்தைகளைக் கைக்கொள்ளும்படி யெகோவா கட்டளையிட்டார்” என்றான். 4 பின்னும் மோசே இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரையும் நோக்கி, 5 “உங்களுக்கு இருப்பதிலே யெகோவாவுக்கு ஒரு காணிக்கையைக் கொண்டுவந்து செலுத்துங்கள்; மனமுள்ளவன் எவனோ, அவன் அதைக் கொண்டுவரட்டும்; யெகோவாவுக்குச் செலுத்தும் காணிக்கை என்னவென்றால், பொன்னும், வெள்ளியும், வெண்கலமும், 6 இளநீலநூலும், இரத்தாம்பரநூலும், சிவப்புநூலும், மெல்லிய பஞ்சுநூலும், வெள்ளாட்டு முடியும், 7 சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஆட்டுக்கடாத்தோலும், மெல்லிய தோலும், சீத்திம் மரமும், 8 விளக்குக்கு எண்ணெயும், அபிஷேகத்தைலத்திற்கு பரிமளத்தைலமும், தூபத்திற்கு நறுமணப் பொருட்களும், 9 ஆசாரியர்களுடைய ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கவேண்டியது கோமேதகம் முதலிய இரத்தினங்களுமே. 10 “உங்களில் ஞானஇருதயமுள்ள அனைவரும் வந்து, யெகோவா கட்டளையிட்டவைகளையெல்லாம் செய்வார்களாக. 11 ஆசரிப்புக்கூடாரத்தையும், அதின் கூடாரத்தையும், அதின் மூடியையும், அதின் கொக்கிகளையும், அதின் பலகைகளையும், அதின் தாழ்ப்பாள்களையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும், 12 பெட்டியையும், அதின் தண்டுகளையும், கிருபாசனத்தையும், மறைவின் திரைச்சீலையையும், 13 மேஜையையும், அதின் தண்டுகளையும், அதின் எல்லாப் பணிப்பொருட்களையும், சமுகத்து அப்பங்களையும், 14 வெளிச்சம்கொடுக்கும் குத்துவிளக்கையும், அதின் கருவிகளையும், அதின் அகல்களையும், வெளிச்சத்திற்கு எண்ணெயையும், 15 தூபபீடத்தையும், அதின் தண்டுகளையும், அபிஷேகத் தைலத்தையும், நறுமணப் பொருட்களையும், ஆசரிப்புக்கூடார வாசலுக்குத் தொங்கு திரையையும், 16 தகனபலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், அதின் தண்டுகளையும், அதின் எல்லா பணிப்பொருட்களையும், தொட்டியையும், அதின் பாதத்தையும், 17 பிராகாரத்தின் தொங்கு திரைகளையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும், பிராகாரத்து வாசலின் தொங்கு திரையையும், 18 கூடாரத்தின் முளைகளையும், ஆசரிப்புக்கூடாரத்தின் முளைகளையும், அவைகளின் கயிறுகளையும், 19 பரிசுத்த ஸ்தலத்திலே ஆராதனை செய்வதற்குரிய ஆடைகளையும், ஆசாரிய ஊழியம்செய்கிற ஆரோனின் பரிசுத்த ஆடைகளையும் அவனுடைய மகன்களின் ஆடைகளையும் அவர்கள் செய்யவேண்டும் என்றான். 20 அப்பொழுது இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரும் மோசேயின் சமுகத்தைவிட்டுப் புறப்பட்டார்கள். 21 பின்பு எவர்களை அவர்களுடைய இருதயம் எழுப்பி, எவர்களை அவர்களுடைய ஆவி உற்சாகப்படுத்தினதோ, அவர்கள் எல்லோரும் ஆசரிப்புக்கூடாரத்தின் வேலைக்கும், அதின் எல்லா ஊழியத்திற்கும், பரிசுத்த ஆடைகளுக்கும் ஏற்றவைகளைக் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள். 22 மனப்பூர்வமுள்ள ஆண்கள் பெண்கள் அனைவரும், தங்கத்தினாலான ஊசிகள், காதணிகள், மோதிரங்கள், ஆரங்கள் முதலான எல்லாவித பொன் ஆபரணங்களையும் கொண்டுவந்தார்கள்; யெகோவாவுக்குக் காணிக்கை செலுத்தின ஒவ்வொருவனும் தங்கத்தைக் காணிக்கையாகச் செலுத்தினான். 23 இளநீலநூலையும் இரத்தாம்பரநூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சுநூலையும் வெள்ளாட்டு முடியையும் சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஆட்டுக்கடாத்தோலையும் மெல்லிய தோலையும் வைத்திருந்த எல்லோரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள். 24 வெள்ளியையும் வெண்கலத்தையும் கொடுக்கும் அனைவரும் அவைகளைக் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள். பற்பல வேலைகளுக்கு உதவும் சீத்திம் மரத்தை வைத்திருந்த யாவரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள். 25 ஞான இருதயமுள்ள பெண்கள் எல்லோரும் தங்கள் கைகளினால் பிண்ணி, தாங்கள் பிண்ணின இளநீலநூலையும் இரத்தாம்பரநூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சுநூலையும் கொண்டுவந்தார்கள். 26 எந்த பெண்களுடைய இருதயம் ஞான எழுப்புதல் அடைந்ததோ, அவர்கள் எல்லோரும் வெள்ளாட்டு முடியைத் திரித்தார்கள். 27 தலைவர்கள் ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகம் முதலிய இரத்தினங்களையும், 28 நறுமணப் பொருட்களையும், விளக்கெண்ணெயையும், அபிஷேகத் தைலத்திற்கும் வாசனை தூபத்திற்கும் வேண்டியவைகளையும் கொண்டுவந்தார்கள். 29 செய்யப்படும்படி யெகோவா மோசேயைக்கொண்டு கற்பித்த வேலைக்குரிய யாவையும் கொண்டுவர, இஸ்ரவேலர்களுக்குள் தங்களுடைய இருதயத்தில் உற்சாகமடைந்த ஆண்கள் பெண்கள் அனைவரும் யெகோவாவுக்குக் காணிக்கையை மனப்பூர்வமாக கொண்டுவந்தார்கள். 30 பின்பு மோசே இஸ்ரவேலர்களை நோக்கி: “பாருங்கள், யெகோவா யூதாவின் கோத்திரத்தில் ஊரின் மகனான ஊரியின் மகன் பெசலெயேலைப் பெயர்சொல்லி அழைத்து, 31 அவன் மிகுந்த விசித்திரமான வேலைகளை யோசித்துச் செய்யவும், தங்கத்திலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலை செய்யவும், 32 இரத்தினங்களை முத்திரை வெட்டாக வெட்டிப் பதிக்கவும், மரத்தில் சித்திரவேலை செய்து எல்லா வித்தியாசமான வேலைகளைச் செய்யவும், 33 அவனுக்கு ஞானத்தையும் புத்தியையும் அறிவையும் அருளி, அவன் எல்லாவித வேலைகளையும் செய்யும்படி தேவ ஆவியினாலே அவனை நிரப்பினார். 34 அவனுடைய இருதயத்திலும், தாண் கோத்திரத்தின் அகிசாமாகின் மகனாகிய அகோலியாபின் இருதயத்திலும், போதிக்கும் வரத்தையும் அருளினார். 35 சித்திரவேலையையும் சிற்பவேலையையும், இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்படும் விசித்திரத் தையல் வேலையையும், எல்லா விசித்திர நெசவு வேலைகளையும் வித்தியாசமான வேலைகளை யூகிக்கிறவர்களும் செய்கிறவர்களும் நிறைவேற்றும் எல்லாவித வேலைகளையும் செய்யும்படி அவர்களுடைய இருதயத்தை ஞானத்தினால் நிரப்பினார்” என்றான்.

In Other Versions

Exodus 35 in the ANGEFD

Exodus 35 in the ANTPNG2D

Exodus 35 in the AS21

Exodus 35 in the BAGH

Exodus 35 in the BBPNG

Exodus 35 in the BBT1E

Exodus 35 in the BDS

Exodus 35 in the BEV

Exodus 35 in the BHAD

Exodus 35 in the BIB

Exodus 35 in the BLPT

Exodus 35 in the BNT

Exodus 35 in the BNTABOOT

Exodus 35 in the BNTLV

Exodus 35 in the BOATCB

Exodus 35 in the BOATCB2

Exodus 35 in the BOBCV

Exodus 35 in the BOCNT

Exodus 35 in the BOECS

Exodus 35 in the BOGWICC

Exodus 35 in the BOHCB

Exodus 35 in the BOHCV

Exodus 35 in the BOHLNT

Exodus 35 in the BOHNTLTAL

Exodus 35 in the BOICB

Exodus 35 in the BOILNTAP

Exodus 35 in the BOITCV

Exodus 35 in the BOKCV

Exodus 35 in the BOKCV2

Exodus 35 in the BOKHWOG

Exodus 35 in the BOKSSV

Exodus 35 in the BOLCB

Exodus 35 in the BOLCB2

Exodus 35 in the BOMCV

Exodus 35 in the BONAV

Exodus 35 in the BONCB

Exodus 35 in the BONLT

Exodus 35 in the BONUT2

Exodus 35 in the BOPLNT

Exodus 35 in the BOSCB

Exodus 35 in the BOSNC

Exodus 35 in the BOTLNT

Exodus 35 in the BOVCB

Exodus 35 in the BOYCB

Exodus 35 in the BPBB

Exodus 35 in the BPH

Exodus 35 in the BSB

Exodus 35 in the CCB

Exodus 35 in the CUV

Exodus 35 in the CUVS

Exodus 35 in the DBT

Exodus 35 in the DGDNT

Exodus 35 in the DHNT

Exodus 35 in the DNT

Exodus 35 in the ELBE

Exodus 35 in the EMTV

Exodus 35 in the ESV

Exodus 35 in the FBV

Exodus 35 in the FEB

Exodus 35 in the GGMNT

Exodus 35 in the GNT

Exodus 35 in the HARY

Exodus 35 in the HNT

Exodus 35 in the IRVA

Exodus 35 in the IRVB

Exodus 35 in the IRVG

Exodus 35 in the IRVH

Exodus 35 in the IRVK

Exodus 35 in the IRVM

Exodus 35 in the IRVM2

Exodus 35 in the IRVO

Exodus 35 in the IRVP

Exodus 35 in the IRVT2

Exodus 35 in the IRVU

Exodus 35 in the ISVN

Exodus 35 in the JSNT

Exodus 35 in the KAPI

Exodus 35 in the KBT1ETNIK

Exodus 35 in the KBV

Exodus 35 in the KJV

Exodus 35 in the KNFD

Exodus 35 in the LBA

Exodus 35 in the LBLA

Exodus 35 in the LNT

Exodus 35 in the LSV

Exodus 35 in the MAAL

Exodus 35 in the MBV

Exodus 35 in the MBV2

Exodus 35 in the MHNT

Exodus 35 in the MKNFD

Exodus 35 in the MNG

Exodus 35 in the MNT

Exodus 35 in the MNT2

Exodus 35 in the MRS1T

Exodus 35 in the NAA

Exodus 35 in the NASB

Exodus 35 in the NBLA

Exodus 35 in the NBS

Exodus 35 in the NBVTP

Exodus 35 in the NET2

Exodus 35 in the NIV11

Exodus 35 in the NNT

Exodus 35 in the NNT2

Exodus 35 in the NNT3

Exodus 35 in the PDDPT

Exodus 35 in the PFNT

Exodus 35 in the RMNT

Exodus 35 in the SBIAS

Exodus 35 in the SBIBS

Exodus 35 in the SBIBS2

Exodus 35 in the SBICS

Exodus 35 in the SBIDS

Exodus 35 in the SBIGS

Exodus 35 in the SBIHS

Exodus 35 in the SBIIS

Exodus 35 in the SBIIS2

Exodus 35 in the SBIIS3

Exodus 35 in the SBIKS

Exodus 35 in the SBIKS2

Exodus 35 in the SBIMS

Exodus 35 in the SBIOS

Exodus 35 in the SBIPS

Exodus 35 in the SBISS

Exodus 35 in the SBITS

Exodus 35 in the SBITS2

Exodus 35 in the SBITS3

Exodus 35 in the SBITS4

Exodus 35 in the SBIUS

Exodus 35 in the SBIVS

Exodus 35 in the SBT

Exodus 35 in the SBT1E

Exodus 35 in the SCHL

Exodus 35 in the SNT

Exodus 35 in the SUSU

Exodus 35 in the SUSU2

Exodus 35 in the SYNO

Exodus 35 in the TBIAOTANT

Exodus 35 in the TBT1E

Exodus 35 in the TBT1E2

Exodus 35 in the TFTIP

Exodus 35 in the TFTU

Exodus 35 in the TGNTATF3T

Exodus 35 in the THAI

Exodus 35 in the TNFD

Exodus 35 in the TNT

Exodus 35 in the TNTIK

Exodus 35 in the TNTIL

Exodus 35 in the TNTIN

Exodus 35 in the TNTIP

Exodus 35 in the TNTIZ

Exodus 35 in the TOMA

Exodus 35 in the TTENT

Exodus 35 in the UBG

Exodus 35 in the UGV

Exodus 35 in the UGV2

Exodus 35 in the UGV3

Exodus 35 in the VBL

Exodus 35 in the VDCC

Exodus 35 in the YALU

Exodus 35 in the YAPE

Exodus 35 in the YBVTP

Exodus 35 in the ZBP