Isaiah 24 (IRVT)
1 இதோ, யெகோவா தேசத்தை வெறுமையும் பாழுமாக்கி, அதைக் கவிழ்த்து, அதின் குடிமக்களைச் சிதறடிப்பார். 2 அப்பொழுது, மக்களுக்கு எப்படியோ அப்படியே ஆசாரியனுக்கும் வேலைக்காரனுக்கு எப்படியோ அப்படியே எஜமானுக்கும், வேலைக்காரிக்கு எப்படியோ அப்படியே எஜமானிக்கும், கொண்டவனுக்கு எப்படியோ அப்படியே விற்றவனுக்கும், கடன் கொடுத்தவனுக்கு எப்படியோ அப்படியே கடன்வாங்கினவனுக்கும், வட்டிவாங்கினவனுக்கு எப்படியோ அப்படியே வட்டிகொடுத்தவனுக்கும் எல்லோருக்கும் சரியாக நடக்கும். 3 தேசம் முழுவதும் கொள்ளையாகி, முற்றிலும் வெறுமையாகும்; இது யெகோவா சொன்ன வார்த்தை. 4 தேசம் புலம்பி வாடும்; பூமி சத்துவமற்று உலர்ந்துபோகும்; தேசத்து மக்களிலே உயர்ந்தவர்கள் தவிப்பார்கள். 5 தேசம் தன் குடிமக்களின் மூலமாக தீட்டுப்பட்டது; அவர்கள் நியாயப்பிரமாணங்களை மீறி, கட்டளையை மாறுபாடாக்கி, நித்திய உடன்படிக்கையை முறித்தார்கள். 6 இதினிமித்தம் சாபம் தேசத்தை அழித்தது, அதின் குடிமக்கள் தண்டிக்கப்பட்டார்கள்; தேசத்தார் சுட்டெரிக்கப்பட்டார்கள், சிலர்மாத்திரம் மீந்திருக்கிறார்கள். 7 திராட்சைரசம் துக்கங்கொண்டாடும், திராட்சைச்செடி வதங்கும்; மனமகிழ்ச்சியாயிருந்தவர்கள் எல்லோரும் பெருமூச்சுவிடுவார்கள். 8 மேளங்களின் சந்தோஷம் ஓயும், களிகூருகிறவர்களின் நடமாட்டம் ஒழியும், வீணையின் களிப்பு நின்றுபோகும். 9 பாடலோடே திராட்சைரசம் குடிக்கமாட்டார்கள்; மதுபானம் அதைக் குடிக்கிறவர்களுக்குக் கசக்கும். 10 வெறுமையாய்ப்போன நகரம் தகர்ந்து, ஒருவரும் உள்ளே நுழையமுடியாதபடி, வீடுகளெல்லாம் அடைபட்டுக்கிடக்கும். 11 திராட்சைரசத்துக்காக வீதிகளிலே கூக்குரல் உண்டு; அனைத்து சந்தோஷமும் குறைந்து, தேசத்தின் மகிழ்ச்சி இல்லாமல் போகும். 12 நகரத்தில் மீதியாயிருப்பது அழிவே; வாசல்கள் இடிக்கப்பட்டுப் பாழாய்க் கிடக்கும். 13 ஒலிவமரத்தை உலுக்கும்போதும், திராட்சைப்பழங்களை அறுத்துத் முடியும்போதும், பின்பறிப்புக்குக் கொஞ்சம் மீந்திருப்பதுபோல, தேசத்திற்குள்ளும் இந்த மக்களின் நடுவிலும் கொஞ்சம் மீந்திருக்கும். 14 அவர்கள் சத்தமிட்டுக் கெம்பீரிப்பார்கள்; யெகோவாவுடைய மகத்துவத்திற்காக சமுத்திரத்திலிருந்து ஆர்ப்பரிப்பார்கள். 15 ஆகையால் யெகோவாவை, சூரியன் உதிக்கும் திசையிலும், இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவின் நாமத்தைச் சமுத்திரத் தீவுகளிலும் மகிமைப்படுத்துங்கள். 16 நீதிபரனுக்கு மகிமை என்று பாடும் கீதங்களை பூமியின் கடைசிமுனையிலிருந்து கேட்கிறோம்; நானோ, இளைத்துப்போனேன், இளைத்துப்போனேன்; எனக்கு ஐயோ, துரோகிகள் துரோகம் செய்கிறார்கள்; துரோகிகள் மிகுதியாகத் துரோகம்செய்கிறார்கள் என்கிறேன். 17 தேசத்து மக்களே, பயமும், படுகுழியும், கண்ணியும் உங்களுக்கு நேரிடும். 18 அப்பொழுது பயத்தின் சத்தத்திற்கு விலகி ஓடுகிறவன் படுகுழியில் விழுவான்; படுகுழியிலிருந்து ஏறுகிறவன் கண்ணியில் அகப்படுவான்; உயர இருக்கும் மதகுகள் திறக்கப்பட்டு, பூமியின் அஸ்திபாரங்கள் குலுங்கும். 19 தேசம் நொறுங்கவே நொறுங்கும், தேசம் முறியவே முறியும், தேசம் அசையவே அசையும். 20 வெறித்தவனைப்போல தேசம் தள்ளாடி, ஒரு குடிசையைப்போலப் பெயர்த்துப்போடப்படும்; அதின் பாதகம் அதின்மேல் பாரமாயிருப்பதினால், அது விழுந்துபோகும், இனி எழுந்திருக்காது. 21 அக்காலத்தில் யெகோவா உன்னதமான சேனையை உன்னதத்திலும், பூமியின் ராஜாக்களைப் பூமியிலும் விசாரிப்பார். 22 அவர்கள் கெபியில் ஏகமாகக் கட்டுண்டவர்களாகச் சேர்ந்து, காவலில் அடைக்கப்பட்டு, அநேகநாட்கள் சென்றபின்பு விசாரிக்கப்படுவார்கள். 23 அப்பொழுது சேனைகளின் யெகோவா சீயோன் மலையிலும் எருசலேமிலும் ஆளுகைசெய்வதால், சந்திரன் கலங்கும், சூரியன் வெட்கப்படும்; அவருடைய மூப்பர்களுக்கு முன்பாக தம்முடைய மகிமை வெளிப்படுத்துவார்.
In Other Versions
Isaiah 24 in the ANGEFD
Isaiah 24 in the ANTPNG2D
Isaiah 24 in the AS21
Isaiah 24 in the BAGH
Isaiah 24 in the BBPNG
Isaiah 24 in the BBT1E
Isaiah 24 in the BDS
Isaiah 24 in the BEV
Isaiah 24 in the BHAD
Isaiah 24 in the BIB
Isaiah 24 in the BLPT
Isaiah 24 in the BNT
Isaiah 24 in the BNTABOOT
Isaiah 24 in the BNTLV
Isaiah 24 in the BOATCB
Isaiah 24 in the BOATCB2
Isaiah 24 in the BOBCV
Isaiah 24 in the BOCNT
Isaiah 24 in the BOECS
Isaiah 24 in the BOGWICC
Isaiah 24 in the BOHCB
Isaiah 24 in the BOHCV
Isaiah 24 in the BOHLNT
Isaiah 24 in the BOHNTLTAL
Isaiah 24 in the BOICB
Isaiah 24 in the BOILNTAP
Isaiah 24 in the BOITCV
Isaiah 24 in the BOKCV
Isaiah 24 in the BOKCV2
Isaiah 24 in the BOKHWOG
Isaiah 24 in the BOKSSV
Isaiah 24 in the BOLCB
Isaiah 24 in the BOLCB2
Isaiah 24 in the BOMCV
Isaiah 24 in the BONAV
Isaiah 24 in the BONCB
Isaiah 24 in the BONLT
Isaiah 24 in the BONUT2
Isaiah 24 in the BOPLNT
Isaiah 24 in the BOSCB
Isaiah 24 in the BOSNC
Isaiah 24 in the BOTLNT
Isaiah 24 in the BOVCB
Isaiah 24 in the BOYCB
Isaiah 24 in the BPBB
Isaiah 24 in the BPH
Isaiah 24 in the BSB
Isaiah 24 in the CCB
Isaiah 24 in the CUV
Isaiah 24 in the CUVS
Isaiah 24 in the DBT
Isaiah 24 in the DGDNT
Isaiah 24 in the DHNT
Isaiah 24 in the DNT
Isaiah 24 in the ELBE
Isaiah 24 in the EMTV
Isaiah 24 in the ESV
Isaiah 24 in the FBV
Isaiah 24 in the FEB
Isaiah 24 in the GGMNT
Isaiah 24 in the GNT
Isaiah 24 in the HARY
Isaiah 24 in the HNT
Isaiah 24 in the IRVA
Isaiah 24 in the IRVB
Isaiah 24 in the IRVG
Isaiah 24 in the IRVH
Isaiah 24 in the IRVK
Isaiah 24 in the IRVM
Isaiah 24 in the IRVM2
Isaiah 24 in the IRVO
Isaiah 24 in the IRVP
Isaiah 24 in the IRVT2
Isaiah 24 in the IRVU
Isaiah 24 in the ISVN
Isaiah 24 in the JSNT
Isaiah 24 in the KAPI
Isaiah 24 in the KBT1ETNIK
Isaiah 24 in the KBV
Isaiah 24 in the KJV
Isaiah 24 in the KNFD
Isaiah 24 in the LBA
Isaiah 24 in the LBLA
Isaiah 24 in the LNT
Isaiah 24 in the LSV
Isaiah 24 in the MAAL
Isaiah 24 in the MBV
Isaiah 24 in the MBV2
Isaiah 24 in the MHNT
Isaiah 24 in the MKNFD
Isaiah 24 in the MNG
Isaiah 24 in the MNT
Isaiah 24 in the MNT2
Isaiah 24 in the MRS1T
Isaiah 24 in the NAA
Isaiah 24 in the NASB
Isaiah 24 in the NBLA
Isaiah 24 in the NBS
Isaiah 24 in the NBVTP
Isaiah 24 in the NET2
Isaiah 24 in the NIV11
Isaiah 24 in the NNT
Isaiah 24 in the NNT2
Isaiah 24 in the NNT3
Isaiah 24 in the PDDPT
Isaiah 24 in the PFNT
Isaiah 24 in the RMNT
Isaiah 24 in the SBIAS
Isaiah 24 in the SBIBS
Isaiah 24 in the SBIBS2
Isaiah 24 in the SBICS
Isaiah 24 in the SBIDS
Isaiah 24 in the SBIGS
Isaiah 24 in the SBIHS
Isaiah 24 in the SBIIS
Isaiah 24 in the SBIIS2
Isaiah 24 in the SBIIS3
Isaiah 24 in the SBIKS
Isaiah 24 in the SBIKS2
Isaiah 24 in the SBIMS
Isaiah 24 in the SBIOS
Isaiah 24 in the SBIPS
Isaiah 24 in the SBISS
Isaiah 24 in the SBITS
Isaiah 24 in the SBITS2
Isaiah 24 in the SBITS3
Isaiah 24 in the SBITS4
Isaiah 24 in the SBIUS
Isaiah 24 in the SBIVS
Isaiah 24 in the SBT
Isaiah 24 in the SBT1E
Isaiah 24 in the SCHL
Isaiah 24 in the SNT
Isaiah 24 in the SUSU
Isaiah 24 in the SUSU2
Isaiah 24 in the SYNO
Isaiah 24 in the TBIAOTANT
Isaiah 24 in the TBT1E
Isaiah 24 in the TBT1E2
Isaiah 24 in the TFTIP
Isaiah 24 in the TFTU
Isaiah 24 in the TGNTATF3T
Isaiah 24 in the THAI
Isaiah 24 in the TNFD
Isaiah 24 in the TNT
Isaiah 24 in the TNTIK
Isaiah 24 in the TNTIL
Isaiah 24 in the TNTIN
Isaiah 24 in the TNTIP
Isaiah 24 in the TNTIZ
Isaiah 24 in the TOMA
Isaiah 24 in the TTENT
Isaiah 24 in the UBG
Isaiah 24 in the UGV
Isaiah 24 in the UGV2
Isaiah 24 in the UGV3
Isaiah 24 in the VBL
Isaiah 24 in the VDCC
Isaiah 24 in the YALU
Isaiah 24 in the YAPE
Isaiah 24 in the YBVTP
Isaiah 24 in the ZBP