Isaiah 42 (IRVT)

1 இதோ, நான் ஆதரிக்கிற என் ஊழியக்காரன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரச்செய்தேன்; அவர் அந்நியமக்களுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார். 2 அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கச்செய்யவுமாட்டார். 3 அவர் நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை அணைக்காமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார். 4 அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்தும்வரை தடுமாறுவதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்திற்குத் தீவுகள் காத்திருக்கும். 5 வானங்களைச் சிருஷ்டித்து, அவைகளை விரித்து, பூமியையும், அதிலே உற்பத்தியாகிறவைகளையும் பரப்பினவரும், அதில் இருக்கிற மக்களுக்குச் சுவாசத்தையும், அதில் நடமாடுகிறவர்களுக்கு ஆவியையும் கொடுக்கிறவருமான கர்த்தராகிய தேவன் சொல்கிறதாவது: 6 நீர் குருடருடைய கண்களைத் திறக்கவும், கட்டுண்டவர்களைக் காவலிலிருந்தும், இருளில் இருக்கிறவர்களைச் சிறைச்சாலையிலிருந்தும் விடுவிக்கவும், 7 கர்த்தராகிய நான் நீதியின்படி உம்மை அழைத்து, உம்முடைய கையைப் பிடித்து, உம்மைத் தற்காத்து, உம்மை மக்களுக்கு உடன்படிக்கையாகவும் தேசங்களுக்கு ஒளியாகவும் வைக்கிறேன். 8 நான் யெகோவா, இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை சிலைகளுக்கும் கொடுக்கமாட்டேன். 9 ஆரம்பகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்கு முன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்கிறேன். 10 கடலில் பயணம்செய்கிறவர்களே, அதிலுள்ளவைகளே, தீவுகளே, அவைகளின் குடிகளே, யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் கடையாந்தரத்திலிருந்து அவருடைய துதியைப் பாடுங்கள். 11 வனாந்திரமும், அதின் ஊர்களும், கேதாரியர்கள் குடியிருக்கிற கிராமங்களும் உரத்த சத்தமிடுவதாக; கன்மலைகளிலே குடியிருக்கிறவர்கள் கெம்பீரித்து, மலைகளின் கொடுமுடியிலிருந்து ஆர்ப்பரிப்பார்களாக. 12 யெகோவாவுக்கு மகிமையைச் செலுத்தி, அவர் துதியைத் தீவுகளில் அறிவிப்பார்களாக. 13 யெகோவா பராக்கிரமசாலியைப்போல் புறப்பட்டு, போர்வீரனைப்போல் வைராக்கியமடைந்து, முழங்கிக் கெர்ச்சித்து, தம்முடைய எதிரிகளை மேற்கொள்ளுவார். 14 நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன்; சும்மாயிருந்து எனக்குள்ளே அடக்கிக்கொண்டிருந்தேன்; இப்பொழுது பிள்ளை பெறுகிறவளைப்போலச் சத்தமிட்டு, அவர்களைப் பாழாக்கி விழுங்குவேன். 15 நான் மலைகளையும் குன்றுகளையும் பாழாக்கி, அவைகளிலுள்ள தாவரங்களையெல்லாம் வாடச்செய்து, ஆறுகளைத் திட்டுகளாக்கி, ஏரிகளை வற்றிப்போகச்செய்வேன். 16 குருடர்களை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன்; இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச்செய்து, அவர்களைக் கைவிடாமலிருப்பேன். 17 சித்திரவேலையான சிலைகளை நம்பி, வார்ப்பிக்கப்பட்ட உருவங்களை நோக்கி: நீங்கள் எங்கள் தெய்வங்கள் என்று சொல்கிறவர்கள் பின்னடைந்து மிகவும் வெட்கப்படுவார்கள். 18 செவிடர்களே, கேளுங்கள்; குருடர்களே, நீங்கள் காணும்படி நோக்கிப்பாருங்கள். 19 என் தாசனையல்லாமல் குருடன் யார்? நான் அனுப்பிய தூதனையல்லாமல் செவிடன் யார்? உத்தமனையல்லாமல் குருடன் யார்? யெகோவாவுடைய ஊழியக்காரனையல்லாமல் குருடன் யார்? 20 நீ அநேக காரியங்களைக் கண்டும் கவனிக்காமல் இருக்கிறாய்; அவனுக்குச் செவிகளைத் திறந்தாலும் கேளாதேபோகிறான். 21 யெகோவா தமது நீதியினிமித்தம் அவன்மேல் பிரியம் வைத்திருந்தார்; அவர் வேதத்தை முக்கியப்படுத்தி அதை மகிமையுள்ளதாக்குவார். 22 இந்த மக்களோ கொள்ளையிடப்பட்டும், சூறையாடப்பட்டும் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவரும் கெபிகளிலே அகப்பட்டு, காவலறைகளிலே அடைக்கப்பட்டிருக்கிறார்கள்; தப்புவிப்பார் இல்லாமல் கொள்ளையாகி, விட்டுவிடு என்பார் இல்லாமல் சூறையாவார்கள். 23 உங்களில் இதற்குச் செவிகொடுத்துப் பின்வருகிறதைக் கவனித்துக் கேட்கிறவன் யார்? 24 யாக்கோபைச் சூறையிட்டு இஸ்ரவேலைக் கொள்ளைக்காரருக்கு ஒப்புக்கொடுக்கிறவர் யார்? அவர்கள் பாவம்செய்து விரோதித்த யெகோவா அல்லவோ? அவருடைய வழிகளில் நடக்க மனதாயிராமலும், அவருடைய வேதத்திற்குச் செவிகொடாமலும் போனார்களே. 25 இவர்கள்மேல் அவர் தமது கோபத்தின் உக்கிரத்தையும், போரின் வலிமையையும் வரச்செய்து, அவர்களைச்சூழ அக்கினிஜூவாலைகளைக் கொளுத்தியிருந்தும் உணராதிருந்தார்கள்; அது அவர்களை எரித்தும், அதை மனதிலே வைக்காதேபோனார்கள்.

In Other Versions

Isaiah 42 in the ANGEFD

Isaiah 42 in the ANTPNG2D

Isaiah 42 in the AS21

Isaiah 42 in the BAGH

Isaiah 42 in the BBPNG

Isaiah 42 in the BBT1E

Isaiah 42 in the BDS

Isaiah 42 in the BEV

Isaiah 42 in the BHAD

Isaiah 42 in the BIB

Isaiah 42 in the BLPT

Isaiah 42 in the BNT

Isaiah 42 in the BNTABOOT

Isaiah 42 in the BNTLV

Isaiah 42 in the BOATCB

Isaiah 42 in the BOATCB2

Isaiah 42 in the BOBCV

Isaiah 42 in the BOCNT

Isaiah 42 in the BOECS

Isaiah 42 in the BOGWICC

Isaiah 42 in the BOHCB

Isaiah 42 in the BOHCV

Isaiah 42 in the BOHLNT

Isaiah 42 in the BOHNTLTAL

Isaiah 42 in the BOICB

Isaiah 42 in the BOILNTAP

Isaiah 42 in the BOITCV

Isaiah 42 in the BOKCV

Isaiah 42 in the BOKCV2

Isaiah 42 in the BOKHWOG

Isaiah 42 in the BOKSSV

Isaiah 42 in the BOLCB

Isaiah 42 in the BOLCB2

Isaiah 42 in the BOMCV

Isaiah 42 in the BONAV

Isaiah 42 in the BONCB

Isaiah 42 in the BONLT

Isaiah 42 in the BONUT2

Isaiah 42 in the BOPLNT

Isaiah 42 in the BOSCB

Isaiah 42 in the BOSNC

Isaiah 42 in the BOTLNT

Isaiah 42 in the BOVCB

Isaiah 42 in the BOYCB

Isaiah 42 in the BPBB

Isaiah 42 in the BPH

Isaiah 42 in the BSB

Isaiah 42 in the CCB

Isaiah 42 in the CUV

Isaiah 42 in the CUVS

Isaiah 42 in the DBT

Isaiah 42 in the DGDNT

Isaiah 42 in the DHNT

Isaiah 42 in the DNT

Isaiah 42 in the ELBE

Isaiah 42 in the EMTV

Isaiah 42 in the ESV

Isaiah 42 in the FBV

Isaiah 42 in the FEB

Isaiah 42 in the GGMNT

Isaiah 42 in the GNT

Isaiah 42 in the HARY

Isaiah 42 in the HNT

Isaiah 42 in the IRVA

Isaiah 42 in the IRVB

Isaiah 42 in the IRVG

Isaiah 42 in the IRVH

Isaiah 42 in the IRVK

Isaiah 42 in the IRVM

Isaiah 42 in the IRVM2

Isaiah 42 in the IRVO

Isaiah 42 in the IRVP

Isaiah 42 in the IRVT2

Isaiah 42 in the IRVU

Isaiah 42 in the ISVN

Isaiah 42 in the JSNT

Isaiah 42 in the KAPI

Isaiah 42 in the KBT1ETNIK

Isaiah 42 in the KBV

Isaiah 42 in the KJV

Isaiah 42 in the KNFD

Isaiah 42 in the LBA

Isaiah 42 in the LBLA

Isaiah 42 in the LNT

Isaiah 42 in the LSV

Isaiah 42 in the MAAL

Isaiah 42 in the MBV

Isaiah 42 in the MBV2

Isaiah 42 in the MHNT

Isaiah 42 in the MKNFD

Isaiah 42 in the MNG

Isaiah 42 in the MNT

Isaiah 42 in the MNT2

Isaiah 42 in the MRS1T

Isaiah 42 in the NAA

Isaiah 42 in the NASB

Isaiah 42 in the NBLA

Isaiah 42 in the NBS

Isaiah 42 in the NBVTP

Isaiah 42 in the NET2

Isaiah 42 in the NIV11

Isaiah 42 in the NNT

Isaiah 42 in the NNT2

Isaiah 42 in the NNT3

Isaiah 42 in the PDDPT

Isaiah 42 in the PFNT

Isaiah 42 in the RMNT

Isaiah 42 in the SBIAS

Isaiah 42 in the SBIBS

Isaiah 42 in the SBIBS2

Isaiah 42 in the SBICS

Isaiah 42 in the SBIDS

Isaiah 42 in the SBIGS

Isaiah 42 in the SBIHS

Isaiah 42 in the SBIIS

Isaiah 42 in the SBIIS2

Isaiah 42 in the SBIIS3

Isaiah 42 in the SBIKS

Isaiah 42 in the SBIKS2

Isaiah 42 in the SBIMS

Isaiah 42 in the SBIOS

Isaiah 42 in the SBIPS

Isaiah 42 in the SBISS

Isaiah 42 in the SBITS

Isaiah 42 in the SBITS2

Isaiah 42 in the SBITS3

Isaiah 42 in the SBITS4

Isaiah 42 in the SBIUS

Isaiah 42 in the SBIVS

Isaiah 42 in the SBT

Isaiah 42 in the SBT1E

Isaiah 42 in the SCHL

Isaiah 42 in the SNT

Isaiah 42 in the SUSU

Isaiah 42 in the SUSU2

Isaiah 42 in the SYNO

Isaiah 42 in the TBIAOTANT

Isaiah 42 in the TBT1E

Isaiah 42 in the TBT1E2

Isaiah 42 in the TFTIP

Isaiah 42 in the TFTU

Isaiah 42 in the TGNTATF3T

Isaiah 42 in the THAI

Isaiah 42 in the TNFD

Isaiah 42 in the TNT

Isaiah 42 in the TNTIK

Isaiah 42 in the TNTIL

Isaiah 42 in the TNTIN

Isaiah 42 in the TNTIP

Isaiah 42 in the TNTIZ

Isaiah 42 in the TOMA

Isaiah 42 in the TTENT

Isaiah 42 in the UBG

Isaiah 42 in the UGV

Isaiah 42 in the UGV2

Isaiah 42 in the UGV3

Isaiah 42 in the VBL

Isaiah 42 in the VDCC

Isaiah 42 in the YALU

Isaiah 42 in the YAPE

Isaiah 42 in the YBVTP

Isaiah 42 in the ZBP