Jeremiah 20 (IRVT)

1 எரேமியா இந்த வார்த்தைகளைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறதை ஆசாரியனான இம்மேருடைய மகனும், யெகோவாவுடைய ஆலயத்து தலைமை விசாரணைக் கர்த்தனுமாகிய பஸ்கூர் கேட்டபோது, 2 எரேமியா தீர்க்கதரிசியை பஸ்கூர் அடித்து, அவனைக் யெகோவாவுடைய ஆலயத்தில் பென்யமீன் கோத்திரத்தாரைச் சேர்ந்த மேல்வாசலில் இருக்கும் காவலறையில் போட்டான். 3 மறுநாளில் பஸ்கூர் எரேமியாவைக் காவலறையிலிருந்து வெளியே போகவிட்டான்; அப்பொழுது எரேமியா அவனை நோக்கி: யெகோவா உன்னைப் பஸ்கூர் என்று அழைக்காமல், மாகோர் மீசாபீப் என்று அழைக்கிறார். 4 மேலும் யெகோவா: இதோ, நான் உன்னையும், உன் எல்லா நண்பர்களையும் பயத்திற்கு ஒப்புக்கொடுக்கிறேன்; உன் கண்கள் காண இவர்கள் எதிரிகளின் பட்டயத்தால் விழுவார்கள்; யூதா அனைத்தையும் நான் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பேன்; அவன் அவர்களைச் சிறைபிடித்து, சிலரைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய்ச் சிலரைப் பட்டயத்தால் வெட்டிப்போடுவான். 5 இந்த நகரத்தின் எல்லாப் பலத்தையும், அதின் எல்லாச் சம்பத்தையும், அதின் அருமையான எல்லாப் பொருட்களையும், யூதா ராஜாக்களின் எல்லாப் பொக்கிஷங்களையும், நான் அவர்கள் எதிரிகள் கையில் ஒப்புக்கொடுப்பேன்; அவர்கள் அவைகளைக் கொள்ளையிட்டு, பாபிலோனுக்குக் கொண்டுபோவார்கள். 6 பஸ்கூரே, நீயும் உன் வீட்டில் வாசமாயிருக்கிற அனைவரும் சிறைப்பட்டுப்போவீர்கள்; நீயும் உன் கள்ளத் தீர்க்கதரிசனத்திற்கு காதுகொடுத்த உன் நண்பர்கள் அனைவரும் பாபிலோனுக்குப் போய், அங்கே இறந்து, அங்கே அடக்கம் செய்யப்படுவீர்களென்று சொல்லுகிறார் என்றான். 7 யெகோவாவே, என்னை இணங்கச் செய்தீர், நான் இணங்கினேன்; நீர் என்னிலும் பலத்தவராயிருந்து, என்னை மேற்கொண்டீர்; நாள்தோறும் நகைப்புக்கு இடமானேன்; எல்லோரும் என்னைப் பரிகாசம் செய்கிறார்கள். 8 நான் பேசினது முதற்கொண்டு கதறுகிறேன்; கொடுமையென்றும் அழிவு என்றும் சத்தமிட்டுச் சொல்கிறேன்; நான் சொன்ன யெகோவாவுடைய வார்த்தை அனுதினமும் எனக்கு நிந்தையும், பரியாசமுமானது. 9 ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம் செய்யாமலும் இனிக் யெகோவாவுடைய பெயரில் பேசாமலும் இருப்பேன் என்றேன்; ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற நெருப்பைப்போல என் இருதயத்தில் இருந்தது; அதைச் சகித்து சோர்ந்துபோனேன்; எனக்குப் பொறுக்கமுடியாமல் போனது. 10 அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன், பயம் சூழ்ந்திருந்தது; அறிவியுங்கள், அப்பொழுது நாங்கள் அதை அறிவிப்போம் என்கிறார்கள்; என்னுடன் சமாதானமாயிருந்த அனைவரும் நான் தவறிவிழும்வரை காத்திருந்து: ஒருவேளை இணங்குவான், அப்பொழுது அவனை மேற்கொண்டு, அவனில் கோபத்தைத் தீர்த்துக்கொள்வோம் என்கிறார்கள். 11 யெகோவாவோ பயங்கரமான பராக்கிரமசாலியாக என்னுடன் இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்; தங்கள் காரியம் வாய்க்காததினால் மிகவும் வெட்கப்படுவார்கள்; மறக்கமுடியாத நிலையான வெட்கம் அவர்களுக்கு உண்டாகும். 12 ஆனாலும் நீதிமானைச் சோதித்தறிந்து, உள் மனதையும் இருதயத்தையும் பார்க்கிற சேனைகளின் யெகோவாவே, நீர் அவர்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிறதைக் காண்பேனாக; என் காரியத்தை உம்மிடத்தில் செலுத்திவிட்டேன். 13 யெகோவாவைப் பாடுங்கள், யெகோவாவை துதியுங்கள்; அவர் எளியவனுடைய ஆத்துமாவைப் பொல்லாதவர்களின் கையிலிருந்து காப்பாற்றுகிறார். 14 நான் பிறந்த நாள் சபிக்கப்படுவதாக; என் தாயார் என்னைப் பெற்ற நாள் ஆசீர்வதிக்கப்படாதிருப்பதாக. 15 உமக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்ததென்றும் என் தகப்பனுக்கு நற்செய்தியாக அறிவித்து, அவனை மிகவும் சந்தோஷப்படுத்தின மனிதன் சபிக்கப்படுவானாக. 16 அந்த மனிதன், யெகோவா மனம் மாறாமல் கவிழ்த்துப்போட்ட பட்டணங்களைப்போலிருந்து, காலையில் அலறுதலையும் மத்தியான வேளையில் கூக்குரலையும் கேட்கக்கடவன். 17 என் தாயார் எனக்குப் பிரேதக்குழியும், நான் என்றைக்கும் பிரசவியாத கர்ப்பமாக இருப்பதற்காக கர்ப்பத்தில் நான் கொலைசெய்யப்படாமற்போனதென்ன? 18 நான் வருத்தத்தையும் சஞ்சலத்தையும் கண்டு, என் நாட்கள் வெட்கமாகக்கழிய நான் கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டதென்ன?

In Other Versions

Jeremiah 20 in the ANGEFD

Jeremiah 20 in the ANTPNG2D

Jeremiah 20 in the AS21

Jeremiah 20 in the BAGH

Jeremiah 20 in the BBPNG

Jeremiah 20 in the BBT1E

Jeremiah 20 in the BDS

Jeremiah 20 in the BEV

Jeremiah 20 in the BHAD

Jeremiah 20 in the BIB

Jeremiah 20 in the BLPT

Jeremiah 20 in the BNT

Jeremiah 20 in the BNTABOOT

Jeremiah 20 in the BNTLV

Jeremiah 20 in the BOATCB

Jeremiah 20 in the BOATCB2

Jeremiah 20 in the BOBCV

Jeremiah 20 in the BOCNT

Jeremiah 20 in the BOECS

Jeremiah 20 in the BOGWICC

Jeremiah 20 in the BOHCB

Jeremiah 20 in the BOHCV

Jeremiah 20 in the BOHLNT

Jeremiah 20 in the BOHNTLTAL

Jeremiah 20 in the BOICB

Jeremiah 20 in the BOILNTAP

Jeremiah 20 in the BOITCV

Jeremiah 20 in the BOKCV

Jeremiah 20 in the BOKCV2

Jeremiah 20 in the BOKHWOG

Jeremiah 20 in the BOKSSV

Jeremiah 20 in the BOLCB

Jeremiah 20 in the BOLCB2

Jeremiah 20 in the BOMCV

Jeremiah 20 in the BONAV

Jeremiah 20 in the BONCB

Jeremiah 20 in the BONLT

Jeremiah 20 in the BONUT2

Jeremiah 20 in the BOPLNT

Jeremiah 20 in the BOSCB

Jeremiah 20 in the BOSNC

Jeremiah 20 in the BOTLNT

Jeremiah 20 in the BOVCB

Jeremiah 20 in the BOYCB

Jeremiah 20 in the BPBB

Jeremiah 20 in the BPH

Jeremiah 20 in the BSB

Jeremiah 20 in the CCB

Jeremiah 20 in the CUV

Jeremiah 20 in the CUVS

Jeremiah 20 in the DBT

Jeremiah 20 in the DGDNT

Jeremiah 20 in the DHNT

Jeremiah 20 in the DNT

Jeremiah 20 in the ELBE

Jeremiah 20 in the EMTV

Jeremiah 20 in the ESV

Jeremiah 20 in the FBV

Jeremiah 20 in the FEB

Jeremiah 20 in the GGMNT

Jeremiah 20 in the GNT

Jeremiah 20 in the HARY

Jeremiah 20 in the HNT

Jeremiah 20 in the IRVA

Jeremiah 20 in the IRVB

Jeremiah 20 in the IRVG

Jeremiah 20 in the IRVH

Jeremiah 20 in the IRVK

Jeremiah 20 in the IRVM

Jeremiah 20 in the IRVM2

Jeremiah 20 in the IRVO

Jeremiah 20 in the IRVP

Jeremiah 20 in the IRVT2

Jeremiah 20 in the IRVU

Jeremiah 20 in the ISVN

Jeremiah 20 in the JSNT

Jeremiah 20 in the KAPI

Jeremiah 20 in the KBT1ETNIK

Jeremiah 20 in the KBV

Jeremiah 20 in the KJV

Jeremiah 20 in the KNFD

Jeremiah 20 in the LBA

Jeremiah 20 in the LBLA

Jeremiah 20 in the LNT

Jeremiah 20 in the LSV

Jeremiah 20 in the MAAL

Jeremiah 20 in the MBV

Jeremiah 20 in the MBV2

Jeremiah 20 in the MHNT

Jeremiah 20 in the MKNFD

Jeremiah 20 in the MNG

Jeremiah 20 in the MNT

Jeremiah 20 in the MNT2

Jeremiah 20 in the MRS1T

Jeremiah 20 in the NAA

Jeremiah 20 in the NASB

Jeremiah 20 in the NBLA

Jeremiah 20 in the NBS

Jeremiah 20 in the NBVTP

Jeremiah 20 in the NET2

Jeremiah 20 in the NIV11

Jeremiah 20 in the NNT

Jeremiah 20 in the NNT2

Jeremiah 20 in the NNT3

Jeremiah 20 in the PDDPT

Jeremiah 20 in the PFNT

Jeremiah 20 in the RMNT

Jeremiah 20 in the SBIAS

Jeremiah 20 in the SBIBS

Jeremiah 20 in the SBIBS2

Jeremiah 20 in the SBICS

Jeremiah 20 in the SBIDS

Jeremiah 20 in the SBIGS

Jeremiah 20 in the SBIHS

Jeremiah 20 in the SBIIS

Jeremiah 20 in the SBIIS2

Jeremiah 20 in the SBIIS3

Jeremiah 20 in the SBIKS

Jeremiah 20 in the SBIKS2

Jeremiah 20 in the SBIMS

Jeremiah 20 in the SBIOS

Jeremiah 20 in the SBIPS

Jeremiah 20 in the SBISS

Jeremiah 20 in the SBITS

Jeremiah 20 in the SBITS2

Jeremiah 20 in the SBITS3

Jeremiah 20 in the SBITS4

Jeremiah 20 in the SBIUS

Jeremiah 20 in the SBIVS

Jeremiah 20 in the SBT

Jeremiah 20 in the SBT1E

Jeremiah 20 in the SCHL

Jeremiah 20 in the SNT

Jeremiah 20 in the SUSU

Jeremiah 20 in the SUSU2

Jeremiah 20 in the SYNO

Jeremiah 20 in the TBIAOTANT

Jeremiah 20 in the TBT1E

Jeremiah 20 in the TBT1E2

Jeremiah 20 in the TFTIP

Jeremiah 20 in the TFTU

Jeremiah 20 in the TGNTATF3T

Jeremiah 20 in the THAI

Jeremiah 20 in the TNFD

Jeremiah 20 in the TNT

Jeremiah 20 in the TNTIK

Jeremiah 20 in the TNTIL

Jeremiah 20 in the TNTIN

Jeremiah 20 in the TNTIP

Jeremiah 20 in the TNTIZ

Jeremiah 20 in the TOMA

Jeremiah 20 in the TTENT

Jeremiah 20 in the UBG

Jeremiah 20 in the UGV

Jeremiah 20 in the UGV2

Jeremiah 20 in the UGV3

Jeremiah 20 in the VBL

Jeremiah 20 in the VDCC

Jeremiah 20 in the YALU

Jeremiah 20 in the YAPE

Jeremiah 20 in the YBVTP

Jeremiah 20 in the ZBP