Proverbs 15 (IRVT)
1 சாந்தமான பதில் கடுங்கோபத்தை அடக்கும்;கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும். 2 ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்;மூடர்களின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும். 3 யெகோவாவின் கண்கள் எந்த இடத்திலுமிருந்து,நல்லவர்களையும், தீயவர்களையும் நோக்கிப்பார்க்கிறது. 4 ஆரோக்கியமுள்ள நாவு ஜீவமரம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும். 5 மூடன் தன்னுடைய தகப்பனுடைய புத்தியை அலட்சியப்படுத்துகிறான்;கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி. 6 நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷம் உண்டு;துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பம் உண்டு. 7 ஞானிகளின் உதடுகள் அறிவை விதைக்கும்;மூடர்களின் இருதயமோ அப்படியல்ல. 8 துன்மார்க்கர்களுடைய பலி யெகோவாவுக்கு அருவருப்பானது;செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம். 9 துன்மார்க்கர்களுடைய வழி யெகோவாவுக்கு அருவருப்பானது;நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார். 10 வழியைவிட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி எரிச்சலாக இருக்கும்;கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான். 11 பாதாளமும் அழிவும் யெகோவாவின் பார்வைக்கு முன்பாக இருக்க,மனுமக்களுடைய இருதயம் அதிகமாக அவர் முன்பாக இருக்குமல்லவோ? 12 பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசிக்கமாட்டான்;ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான். 13 மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்;மனதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோகும். 14 புத்திமானுடைய மனம் அறிவைத்தேடும்;மூடர்களின் வாயோ மதியீனத்தை மேயும். 15 சிறுமைப்பட்டவனுடைய நாட்களெல்லாம் தீங்குள்ளவைகள்;மனரம்மியமோ நிரந்தர விருந்து. 16 சஞ்சலத்தோடு கூடிய அதிகப் பொருட்களைவிட,யெகோவாவைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம். 17 பகையோடு இருக்கும் கொழுத்த எருதின் கறியைவிட,சிநேகத்தோடு இருக்கும் இலைக்கறியே நல்லது. 18 கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்;நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான். 19 சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமம்;நீதிமானுடைய வழியோ ராஜபாதை. 20 ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்;மதியற்ற மனிதனோ தன்னுடைய தாயை அலட்சியப்படுத்துகிறான். 21 மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்;புத்திமானோ தன்னுடைய செயல்களைச் செம்மைப்படுத்துகிறான். 22 ஆலோசனை இல்லாததால் எண்ணங்கள் சிதைந்துபோகும்;ஆலோசனைக்காரர்கள் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும். 23 மனிதனுக்குத் தன்னுடைய வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்;ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது! 24 கீழான பாதாளத்தைவிட்டு விலகும்படி,விவேகிக்கு வாழ்வின் வழியானது உன்னதத்தை நோக்கும் வழியாகும். 25 அகங்காரியின் வீட்டைக் யெகோவா பிடுங்கிப்போடுவார்;விதவையின் எல்லையையோ நிலைப்படுத்துவார். 26 துன்மார்க்கர்களுடைய நினைவுகள்யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்;சுத்தமானவர்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள். 27 பொருளாசைக்காரன் தன்னுடைய வீட்டைக் கலைக்கிறான்;லஞ்சங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான். 28 நீதிமானுடைய மனம் பதில் சொல்ல யோசிக்கும்;துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும். 29 துன்மார்க்கர்களுக்குக் யெகோவா தூரமாக இருக்கிறார்;நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார். 30 கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்;நற்செய்தி எலும்புகளை ஆரோக்கியமாக்கும். 31 வாழ்வுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காதுஞானிகளிடத்திலே தங்கும். 32 புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை வெறுக்கிறான்;கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான். 33 யெகோவாவுக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்;மேன்மைக்கு முன்னானது தாழ்மை.