Psalms 82 (IRVT)
undefined ஆசாபின் பாடல். 1 தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்;தெய்வங்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார். 2 எதுவரைக்கும் நீங்கள் அநியாயத் தீர்ப்புச்செய்து,துன்மார்க்கர்களுக்கு முகதாட்சிணியம் செய்வீர்கள். (சேலா) 3 ஏழைக்கும் திக்கற்றபிள்ளைக்கும் நியாயஞ்செய்து,சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள். 4 பலவீனனையும் எளியவனையும் விடுவித்து,துன்மார்க்கர்களின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள். 5 அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள்,இருளிலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது. 6 நீங்கள் தெய்வங்கள் என்றும்,நீங்களெல்லோரும் உன்னதமான தேவனுடைய மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன். 7 ஆனாலும் நீங்கள் மனிதர்களைப்போலச் செத்து,உலகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்து போவீர்கள். 8 தேவனே, எழுந்தருளும், பூமிக்கு நியாயத்தீர்ப்புச் செய்யும்;நீரே எல்லா தேசங்களையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவர்.