Romans 14 (IRVT)
1 விசுவாசத்தில் பலவீனமாக உள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் அவனுடைய மன சந்தேகங்களைக் குற்றமாக தீர்மானிக்காமல் இருங்கள். 2 ஒருவன் எந்த உணவுப்பொருளையும் சாப்பிடலாம் என்று நம்புகிறான்; பலவீனமாக உள்ளவனோ காய்கறிகளைமட்டும் சாப்பிடுகிறான். 3 சாப்பிடுகிறவன் சாப்பிடாமல் இருக்கிறவனை அற்பமாக நினைக்காமல் இருக்கவேண்டும்; சாப்பிடாமல் இருக்கிறவனும் சாப்பிடுகிறவனைக் குற்றவாளியாகத் தீர்க்காமல் இருக்கவேண்டும்; தேவன் அவனை ஏற்றுக்கொண்டாரே. 4 மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய முதலாளிக்கே அவன் பொறுப்பாளி; அவன் நிலைநிறுத்தப்படுவான்; தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராக இருக்கிறாரே. 5 அன்றியும், ஒருவன் ஒருநாளைவிட மற்றொரு நாள் சிறந்தது என்று நினைக்கிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சமமாக நினைக்கிறான்; அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாக இருக்கட்டும். 6 நாட்களை சிறப்பாக்கிக்கொள்கிறவன் கர்த்தருக்கென்று சிறப்பாக்கிக் கொள்கிறான்; நாட்களை சிறப்பாக்கிக் கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று சிறப்பாக்கிக் கொள்ளாமல் இருக்கிறான். சாப்பிடுகிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறபடியால், கர்த்தருக்கென்று சாப்பிடுகிறான்; சாப்பிடாமல் இருக்கிறவனும் கர்த்தருக்கென்று சாப்பிடாமல், தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறான். 7 நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதும் இல்லை, ஒருவனும் தனக்கென்று மரிக்கிறதும் இல்லை. 8 நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; எனவே, பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாக இருக்கிறோம். 9 கிறிஸ்துவும் மரித்தவர்களுக்கும், ஜீவனுள்ளவர்களுக்கும் ஆண்டவராக இருப்பதற்காக, மரித்தும், உயிரோடு எழுந்தும், பிழைத்தும் இருக்கிறார். 10 இப்படியிருக்க, நீ உன் சகோதரனைக் குற்றவாளி என்று தீர்க்கிறது என்ன? நீ உன் சகோதரனை அற்பமாக நினைக்கிறது என்ன? நாமெல்லோரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே. 11 அப்படியே:“முழங்கால்கள் எல்லாம் எனக்கு முன்பாக முடங்கும்,நாக்குகள் எல்லாம் தேவனை அறிக்கைப்பண்ணும் என்று என் ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன்” என்பதாகக் கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது. 12 எனவே, நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்து தேவனுக்குக் கணக்கு ஒப்புவிப்பான். 13 இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகள் என்று தீர்க்காமல் இருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடையையும் இடறலையும் போடக்கூடாது என்று தீர்மானித்துக்கொள்ளுங்கள். 14 எந்தப்பொருளும் தன்னில்தானே தீட்டானவைகள் இல்லை என்று கர்த்தராகிய இயேசுவிற்குள் அறிந்து நிச்சயித்திருக்கிறேன்; ஒரு பொருளைத் தீட்டானது என்று நினைக்கிறவன் எவனோ அவனுக்கு அது தீட்டானதாக இருக்கும். 15 ஆகாரத்தினாலே உன் சகோதரனுக்கு விசனம் உண்டாக்கினால், நீ அன்பாக நடக்கிறவன் இல்லை; அவனை உன் ஆகாரத்தினாலே கெடுக்காதே, கிறிஸ்து அவனுக்காக மரித்தாரே. 16 உங்களுடைய நல்ல செயல்கள் அவமதிக்கப்பட இடங்கொடுக்காமல் இருங்கள். 17 தேவனுடைய ராஜ்யம் சாப்பிடுவதும் குடிப்பதும் இல்லை, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியானவரால் உண்டாகும் சந்தோஷமாகவும் இருக்கிறது. 18 இவைகளிலே கிறிஸ்துவிற்கு ஊழியம் செய்கிறவன் தேவனுக்குப் பிரியமானவனும் மனிதனால் அங்கீகரிக்கப்பட்டவனுமாக இருக்கிறான். 19 எனவே, சமாதானத்திற்குரியவைகளையும், ஐக்கிய பக்திவளர்ச்சியை உண்டாக்கக்கூடியவைகளையும் நாடுவோம். 20 ஆகாரத்திற்காக தேவனுடைய செயல்களை அழித்துப்போடாதே. எந்த உணவுப்பொருளும் சுத்தமானதுதான்; ஆனாலும் இடறல் உண்டாகச் சாப்பிடுகிறவனுக்கு அது தீமையாக இருக்கும். 21 இறைச்சி சாப்பிடுவதும், மதுபானம் அருந்துகிறதும், வேறு எதையாவது செய்கிறதும், உன் சகோதரன் இடறுவதற்கோ, தவறுவதற்கோ, பலவீனப்படுகிறதற்கோ காரணமாக இருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமல் இருப்பதே நன்மையாக இருக்கும். 22 உனக்கு விசுவாசம் இருந்தால் அது தேவனுக்குமுன்பாக உனக்குள்மட்டும் இருக்கட்டும். நல்லது என்று நிச்சயித்த விஷயத்தில் தன்னைக் குற்றவாளியாக்காதவன் பாக்கியவான். 23 ஒருவன் சந்தேகத்துடன் சாப்பிட்டால், அவன் விசுவாசம் இல்லாமல் சாப்பிடுகிறதினால், தண்டனைக்குரியவனாகத் தீர்க்கப்படுகிறான். விசுவாசத்தினாலே வராத எதுவும் பாவமே.
In Other Versions
Romans 14 in the ANGEFD
Romans 14 in the ANTPNG2D
Romans 14 in the AS21
Romans 14 in the BAGH
Romans 14 in the BBPNG
Romans 14 in the BBT1E
Romans 14 in the BDS
Romans 14 in the BEV
Romans 14 in the BHAD
Romans 14 in the BIB
Romans 14 in the BLPT
Romans 14 in the BNT
Romans 14 in the BNTABOOT
Romans 14 in the BNTLV
Romans 14 in the BOATCB
Romans 14 in the BOATCB2
Romans 14 in the BOBCV
Romans 14 in the BOCNT
Romans 14 in the BOECS
Romans 14 in the BOGWICC
Romans 14 in the BOHCB
Romans 14 in the BOHCV
Romans 14 in the BOHLNT
Romans 14 in the BOHNTLTAL
Romans 14 in the BOICB
Romans 14 in the BOILNTAP
Romans 14 in the BOITCV
Romans 14 in the BOKCV
Romans 14 in the BOKCV2
Romans 14 in the BOKHWOG
Romans 14 in the BOKSSV
Romans 14 in the BOLCB
Romans 14 in the BOLCB2
Romans 14 in the BOMCV
Romans 14 in the BONAV
Romans 14 in the BONCB
Romans 14 in the BONLT
Romans 14 in the BONUT2
Romans 14 in the BOPLNT
Romans 14 in the BOSCB
Romans 14 in the BOSNC
Romans 14 in the BOTLNT
Romans 14 in the BOVCB
Romans 14 in the BOYCB
Romans 14 in the BPBB
Romans 14 in the BPH
Romans 14 in the BSB
Romans 14 in the CCB
Romans 14 in the CUV
Romans 14 in the CUVS
Romans 14 in the DBT
Romans 14 in the DGDNT
Romans 14 in the DHNT
Romans 14 in the DNT
Romans 14 in the ELBE
Romans 14 in the EMTV
Romans 14 in the ESV
Romans 14 in the FBV
Romans 14 in the FEB
Romans 14 in the GGMNT
Romans 14 in the GNT
Romans 14 in the HARY
Romans 14 in the HNT
Romans 14 in the IRVA
Romans 14 in the IRVB
Romans 14 in the IRVG
Romans 14 in the IRVH
Romans 14 in the IRVK
Romans 14 in the IRVM
Romans 14 in the IRVM2
Romans 14 in the IRVO
Romans 14 in the IRVP
Romans 14 in the IRVT2
Romans 14 in the IRVU
Romans 14 in the ISVN
Romans 14 in the JSNT
Romans 14 in the KAPI
Romans 14 in the KBT1ETNIK
Romans 14 in the KBV
Romans 14 in the KJV
Romans 14 in the KNFD
Romans 14 in the LBA
Romans 14 in the LBLA
Romans 14 in the LNT
Romans 14 in the LSV
Romans 14 in the MAAL
Romans 14 in the MBV
Romans 14 in the MBV2
Romans 14 in the MHNT
Romans 14 in the MKNFD
Romans 14 in the MNG
Romans 14 in the MNT
Romans 14 in the MNT2
Romans 14 in the MRS1T
Romans 14 in the NAA
Romans 14 in the NASB
Romans 14 in the NBLA
Romans 14 in the NBS
Romans 14 in the NBVTP
Romans 14 in the NET2
Romans 14 in the NIV11
Romans 14 in the NNT
Romans 14 in the NNT2
Romans 14 in the NNT3
Romans 14 in the PDDPT
Romans 14 in the PFNT
Romans 14 in the RMNT
Romans 14 in the SBIAS
Romans 14 in the SBIBS
Romans 14 in the SBIBS2
Romans 14 in the SBICS
Romans 14 in the SBIDS
Romans 14 in the SBIGS
Romans 14 in the SBIHS
Romans 14 in the SBIIS
Romans 14 in the SBIIS2
Romans 14 in the SBIIS3
Romans 14 in the SBIKS
Romans 14 in the SBIKS2
Romans 14 in the SBIMS
Romans 14 in the SBIOS
Romans 14 in the SBIPS
Romans 14 in the SBISS
Romans 14 in the SBITS
Romans 14 in the SBITS2
Romans 14 in the SBITS3
Romans 14 in the SBITS4
Romans 14 in the SBIUS
Romans 14 in the SBIVS
Romans 14 in the SBT
Romans 14 in the SBT1E
Romans 14 in the SCHL
Romans 14 in the SNT
Romans 14 in the SUSU
Romans 14 in the SUSU2
Romans 14 in the SYNO
Romans 14 in the TBIAOTANT
Romans 14 in the TBT1E
Romans 14 in the TBT1E2
Romans 14 in the TFTIP
Romans 14 in the TFTU
Romans 14 in the TGNTATF3T
Romans 14 in the THAI
Romans 14 in the TNFD
Romans 14 in the TNT
Romans 14 in the TNTIK
Romans 14 in the TNTIL
Romans 14 in the TNTIN
Romans 14 in the TNTIP
Romans 14 in the TNTIZ
Romans 14 in the TOMA
Romans 14 in the TTENT
Romans 14 in the UBG
Romans 14 in the UGV
Romans 14 in the UGV2
Romans 14 in the UGV3
Romans 14 in the VBL
Romans 14 in the VDCC
Romans 14 in the YALU
Romans 14 in the YAPE
Romans 14 in the YBVTP
Romans 14 in the ZBP