Psalms 11 (BOITCV)
undefined பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். 1 நான் யெகோவாவிடத்தில் தஞ்சமடைகிறேன்.அப்படியிருக்க நீங்கள் என்னிடம் எப்படி இவ்வாறு சொல்லமுடியும்:“ஒரு பறவையைப்போல உன்னுடைய மலைக்குத் தப்பிப்போ. 2 பாருங்கள், கொடியவர்கள் தங்கள் வில்லுகளை வளைக்கிறார்கள்;நேர்மையான இருதயம் உள்ளவர்மேல்இருளிலிருந்து எய்வதற்காகதங்கள் அம்புகளை நாணேற்றுகிறார்கள். 3 அஸ்திபாரங்கள் அழிக்கப்படும்போது,நீதிமான்கள் என்ன செய்யமுடியும்?” 4 யெகோவா தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்;யெகோவா தமது பரலோக சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்.அவர் மனுமக்களை உற்று நோக்குகிறார்;அவருடைய கண்கள் அவர்களை ஆராய்ந்து பார்க்கின்றன. 5 யெகோவா நீதிமான்களை ஆராய்ந்தறிகிறார்;வன்முறைகளை விரும்புகிற கொடியவர்களையோ,அவர் மனதார வெறுக்கிறார். 6 அவர் கொடியவர்களின்மேல் நெருப்புத் தணல்களையும்,எரியும் கந்தகத்தையும் பெய்யப்பண்ணுவார்;வறட்சியான காற்றே அவர்களின் பங்காயிருக்கும். 7 யெகோவா நீதியுள்ளவர்,அவர் நீதியை நேசிக்கிறார்;நேர்மையான மனிதர் அவர் முகத்தைக் காண்பார்கள்.