Joel 1 (BOITCV)
1 பெத்துயேலின் மகன் யோயேலுக்கு வந்த யெகோவாவின் வார்த்தை: 2 முதியோரே, இதைக் கேளுங்கள்;நாட்டில் வாழ்கிறவர்களே, எல்லோரும் செவிகொடுங்கள்.உங்கள் நாட்களிலோ அல்லது உங்கள் முற்பிதாக்களின் நாட்களிலோ,இதுபோன்று ஒன்று எப்பொழுதாவது நிகழ்ந்ததுண்டோ? 3 இதை உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள்;உங்கள் பிள்ளைகள் அதைத் தங்கள் பிள்ளைகளுக்கும்,அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் அடுத்த தலைமுறைக்கும் அதைச் சொல்லட்டும். 4 பச்சைப்புழு விட்டதை,இளம் வெட்டுக்கிளிகள் தின்றன;இளம் வெட்டுக்கிளிகள் விட்டதை,துள்ளும் வெட்டுக்கிளிகள் தின்றன;துள்ளும் வெட்டுக்கிளிகள் விட்டதை,வளர்ந்த வெட்டுக்கிளிகள் தின்றன. 5 குடிவெறியர்களே, விழித்து அழுங்கள்;திராட்சை இரசம் குடிப்போரே, நீங்கள் எல்லோரும்இனிப்பான திராட்சை இரசத்திற்காகப் புலம்புங்கள்;ஏனெனில் அது உங்கள் வாயிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டது. 6 வலிமைமிக்கதும் எண்ணற்றதுமானவெட்டுக்கிளிக் கூட்டம் இராணுவம்போல் என் நாட்டின்மேல் படையெடுத்தது.அதன் பற்கள் சிங்கத்தின் பற்கள்;பெண் சிங்கத்தின் கடைவாய்ப் பற்களும் அதற்கு உண்டு. 7 அது என் திராட்சைக்கொடியைப் பாழாக்கி,என் அத்திமரங்களையும் அழித்துப்போட்டது.அது அவற்றின் பட்டைகளைஉரித்து எறிந்தது,அதன் கிளைகள் வெளிறிப் போய்விட்டது. 8 தன் வாலிப வயதின் கணவனுக்காக துக்கவுடை உடுத்திஅழுது புலம்பும் இளம்பெண்ணைப்போல் கதறி அழுங்கள். 9 தானிய காணிக்கைகளும் பான காணிக்கைகளும்யெகோவாவினுடைய ஆலயத்திலிருந்து அகன்று போயின.யெகோவாவுக்குமுன் ஊழியம் செய்கிற ஆசாரியர்கள்புலம்பி அழுகிறார்கள். 10 வயல்வெளிகள் பாழாயின,நிலமும் உலர்ந்துபோயிற்று;தானியம் அழிந்தது,புது திராட்சை இரசம் வற்றிப்போயிற்று;எண்ணெயும் குறைவுபடுகிறது. 11 விவசாயிகளே, கலங்குங்கள்,திராட்சைத் தோட்டக்காரரே, புலம்புங்கள்;கோதுமையும் வாற்கோதுமையும் இல்லாமற்போயிற்று;ஏனெனில் வயலின் விளைச்சல் அழிந்துபோயிற்று. 12 திராட்சைக்கொடி உலர்ந்துபோயிற்று,அத்திமரம் வாடிப்போயிற்று.மாதுளையும், பேரீச்சையும்,ஆப்பிள் மரங்களுமான வயல்வெளியின்எல்லா மரங்களும் வதங்கிப்போயிற்று;மனுமக்களின் மகிழ்ச்சி மறைந்துபோயிற்று. 13 ஆசாரியர்களே, துக்கவுடை உடுத்திப் புலம்புங்கள்;பலிபீடத்தின்முன் பணி செய்வோரே, அழுங்கள்;என் இறைவனின்முன் ஊழியம் செய்வோரே,வாருங்கள், வந்து துக்கவுடை உடுத்தி இரவைக் கழியுங்கள்.ஏனெனில் உங்கள் இறைவனது ஆலயத்திலிருந்துதானிய காணிக்கைகளும் பான காணிக்கைகளும் நிறுத்தப்பட்டுவிட்டன. 14 பரிசுத்த உபவாசத்தை நியமியுங்கள்;பரிசுத்த திருச்சபையை ஒன்றுகூட்டுங்கள்.முதியோரையும்,நாட்டில் வாழும் அனைவரையும்உங்கள் இறைவனாகிய யெகோவாவின் ஆலயத்திற்கு அழைப்பித்து,யெகோவாவை நோக்கிக் கதறுங்கள். 15 அது எவ்வளவு பயங்கரமான நாள்,யெகோவாவின் நாள் நெருங்கி வந்திருக்கிறது;அது எல்லாம் வல்லவரிடமிருந்து ஒரு அழிவுபோல் வரும். 16 எங்கள் கண்களுக்கு முன்பாகவேஉணவும்,நம் இறைவனின் ஆலயத்திலிருந்துமகிழ்ச்சியும் சந்தோஷமும் அகற்றப்படவில்லையோ? 17 மண்கட்டிகளின் அடியில்விதைகள் காய்ந்து போயிருக்கின்றன.தானியம் அற்றுப்போனதால்பண்டகசாலைகள் பாழாகி,தானிய களஞ்சியங்கள் இடிந்துபோயின. 18 வளர்ப்பு மிருகங்கள் எவ்வளவாய்த் தவிக்கின்றன;மாட்டு மந்தைகள் மேய்ச்சலின்றிகலங்குகின்றன;செம்மறியாட்டு மந்தைகளுங்கூட கஷ்டப்படுகின்றன. 19 யெகோவாவே, உம்மையே நோக்கி நான் கதறுகிறேன்,ஏனெனில் வெளியின் மேய்ச்சல் நிலங்களை நெருப்பு சுட்டுப் பொசுக்கிவிட்டது;வயல்வெளியின் மரங்கள் அனைத்தையும் நெருப்புச் சுவாலைகள் எரித்துப்போட்டன. 20 காட்டு விலங்குகளுங்கூட உம்மை நோக்கிக் கதறுகின்றன;நீரோடைகள் வற்றிப்போய்விட்டன,வெளியின் மேய்ச்சல் நிலங்களை நெருப்பு சுட்டுப் பொசுக்கிவிட்டது.
In Other Versions
Joel 1 in the ANGEFD
Joel 1 in the ANTPNG2D
Joel 1 in the AS21
Joel 1 in the BAGH
Joel 1 in the BBPNG
Joel 1 in the BBT1E
Joel 1 in the BDS
Joel 1 in the BEV
Joel 1 in the BHAD
Joel 1 in the BIB
Joel 1 in the BLPT
Joel 1 in the BNT
Joel 1 in the BNTABOOT
Joel 1 in the BNTLV
Joel 1 in the BOATCB
Joel 1 in the BOATCB2
Joel 1 in the BOBCV
Joel 1 in the BOCNT
Joel 1 in the BOECS
Joel 1 in the BOGWICC
Joel 1 in the BOHCB
Joel 1 in the BOHCV
Joel 1 in the BOHLNT
Joel 1 in the BOHNTLTAL
Joel 1 in the BOICB
Joel 1 in the BOILNTAP
Joel 1 in the BOKCV
Joel 1 in the BOKCV2
Joel 1 in the BOKHWOG
Joel 1 in the BOKSSV
Joel 1 in the BOLCB
Joel 1 in the BOLCB2
Joel 1 in the BOMCV
Joel 1 in the BONAV
Joel 1 in the BONCB
Joel 1 in the BONLT
Joel 1 in the BONUT2
Joel 1 in the BOPLNT
Joel 1 in the BOSCB
Joel 1 in the BOSNC
Joel 1 in the BOTLNT
Joel 1 in the BOVCB
Joel 1 in the BOYCB
Joel 1 in the BPBB
Joel 1 in the BPH
Joel 1 in the BSB
Joel 1 in the CCB
Joel 1 in the CUV
Joel 1 in the CUVS
Joel 1 in the DBT
Joel 1 in the DGDNT
Joel 1 in the DHNT
Joel 1 in the DNT
Joel 1 in the ELBE
Joel 1 in the EMTV
Joel 1 in the ESV
Joel 1 in the FBV
Joel 1 in the FEB
Joel 1 in the GGMNT
Joel 1 in the GNT
Joel 1 in the HARY
Joel 1 in the HNT
Joel 1 in the IRVA
Joel 1 in the IRVB
Joel 1 in the IRVG
Joel 1 in the IRVH
Joel 1 in the IRVK
Joel 1 in the IRVM
Joel 1 in the IRVM2
Joel 1 in the IRVO
Joel 1 in the IRVP
Joel 1 in the IRVT
Joel 1 in the IRVT2
Joel 1 in the IRVU
Joel 1 in the ISVN
Joel 1 in the JSNT
Joel 1 in the KAPI
Joel 1 in the KBT1ETNIK
Joel 1 in the KBV
Joel 1 in the KJV
Joel 1 in the KNFD
Joel 1 in the LBA
Joel 1 in the LBLA
Joel 1 in the LNT
Joel 1 in the LSV
Joel 1 in the MAAL
Joel 1 in the MBV
Joel 1 in the MBV2
Joel 1 in the MHNT
Joel 1 in the MKNFD
Joel 1 in the MNG
Joel 1 in the MNT
Joel 1 in the MNT2
Joel 1 in the MRS1T
Joel 1 in the NAA
Joel 1 in the NASB
Joel 1 in the NBLA
Joel 1 in the NBS
Joel 1 in the NBVTP
Joel 1 in the NET2
Joel 1 in the NIV11
Joel 1 in the NNT
Joel 1 in the NNT2
Joel 1 in the NNT3
Joel 1 in the PDDPT
Joel 1 in the PFNT
Joel 1 in the RMNT
Joel 1 in the SBIAS
Joel 1 in the SBIBS
Joel 1 in the SBIBS2
Joel 1 in the SBICS
Joel 1 in the SBIDS
Joel 1 in the SBIGS
Joel 1 in the SBIHS
Joel 1 in the SBIIS
Joel 1 in the SBIIS2
Joel 1 in the SBIIS3
Joel 1 in the SBIKS
Joel 1 in the SBIKS2
Joel 1 in the SBIMS
Joel 1 in the SBIOS
Joel 1 in the SBIPS
Joel 1 in the SBISS
Joel 1 in the SBITS
Joel 1 in the SBITS2
Joel 1 in the SBITS3
Joel 1 in the SBITS4
Joel 1 in the SBIUS
Joel 1 in the SBIVS
Joel 1 in the SBT
Joel 1 in the SBT1E
Joel 1 in the SCHL
Joel 1 in the SNT
Joel 1 in the SUSU
Joel 1 in the SUSU2
Joel 1 in the SYNO
Joel 1 in the TBIAOTANT
Joel 1 in the TBT1E
Joel 1 in the TBT1E2
Joel 1 in the TFTIP
Joel 1 in the TFTU
Joel 1 in the TGNTATF3T
Joel 1 in the THAI
Joel 1 in the TNFD
Joel 1 in the TNT
Joel 1 in the TNTIK
Joel 1 in the TNTIL
Joel 1 in the TNTIN
Joel 1 in the TNTIP
Joel 1 in the TNTIZ
Joel 1 in the TOMA
Joel 1 in the TTENT
Joel 1 in the UBG
Joel 1 in the UGV
Joel 1 in the UGV2
Joel 1 in the UGV3
Joel 1 in the VBL
Joel 1 in the VDCC
Joel 1 in the YALU
Joel 1 in the YAPE
Joel 1 in the YBVTP
Joel 1 in the ZBP