Jeremiah 30 (BOITCV)

1 யெகோவாவிடமிருந்து எரேமியாவுக்கு வந்த வார்த்தை: 2 “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: ‘நான் உன்னோடு பேசிய எல்லா வார்த்தைகளையும் ஒரு புத்தகத்தில் எழுது. 3 நாட்கள் வருகிறது,’ என்று யெகோவா அறிவிக்கிறார். ‘அப்பொழுது நான், இஸ்ரயேல் யூதா ஆகிய என் மக்களை அவர்களுடைய சிறையிருப்பிலிருந்து கொண்டுவருவேன். நான் அவர்கள் முற்பிதாக்களுக்கு உரிமையாக்கிக்கொள்ளும்படி கொடுத்த நாட்டில் அவர்களைத் திரும்பவும் குடியமர்த்துவேன்’ என்று யெகோவா சொல்கிறார்.” 4 இஸ்ரயேலையும், யூதாவையும் குறித்து யெகோவா கூறும் வார்த்தைகள் இவையே. 5 “யெகோவா சொல்வதாவது:“ ‘பயத்தின் அழுகுரல்கள் கேட்கின்றன;அது சமாதானத்தின் குரல் அல்ல, பயத்தின் குரல். 6 கேட்டுப் பாருங்கள்;ஒரு ஆண் பிள்ளைகளைப் பெறமுடியுமோ?அப்படியிருக்க ஒவ்வொரு பெலமுள்ள மனிதனும் பிரசவிக்கும் பெண்ணைப்போல்,தன் கைகளை வயிற்றில் வைத்துக்கொண்டிருப்பதை நான் காண்பது ஏன்?ஒவ்வொருவரின் முகமும் வெளிறியிருப்பதையும் நான் காண்கிறேனே. 7 ஐயோ! அந்த நாள் எவ்வளவு பயங்கரமாயிருக்கும்?அதைப் போன்ற நாள் ஒருபோதும் இருந்ததில்லை.யாக்கோபுக்கு அது ஒரு கஷ்டமான காலமாயிருக்கும்.ஆனாலும் அவன் அதிலிருந்து காப்பாற்றப்படுவான். 8 “ ‘அந்த நாளில்,’ என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறதாவது,‘நான் அவர்களுடைய கழுத்திலிருந்து நுகத்தை முறிப்பேன்.கட்டுகளை அறுப்பேன்.பிறநாட்டினர் அவர்களை இனி அடிமையாக்கமாட்டார்கள். 9 ஆனால் அவர்களோ,தங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பணிசெய்வார்கள்.அவர்களுக்காக நான் எழுப்பப்போகிறஅவர்களுடைய அரசனாகிய தாவீதுக்கும் பணிசெய்வார்கள். 10 “ ‘ஆகையால் என் அடியானாகிய யாக்கோபே, நீ பயப்படாதே,இஸ்ரயேலே, நீ திகையாதே’என்று யெகோவா அறிவிக்கிறார்.‘நிச்சயமாக நான் உன்னைத் தூரமான இடத்திலிருந்து காப்பாற்றுவேன்.உன் சந்ததிகளை அவர்கள் நாடுகடத்தப்பட்ட நாட்டிலிருந்து காப்பாற்றுவேன்.இஸ்ரயேலர் திரும்பிவந்து சமாதானத்தோடும், பாதுகாப்போடும்தங்கள் நாட்டில் இருப்பார்கள்;அவர்களை ஒருவரும் பயமுறுத்தமாட்டார்கள். 11 நான் உங்களோடு இருக்கிறேன்; உங்களைக் காப்பாற்றுவேன்’என்று யெகோவா அறிவிக்கிறார்.‘எந்த நாடுகளின் மத்தியில் நான் உங்களைச் சிதறடித்தேனோ,அந்த நாடுகளை நான் முற்றிலும் அழித்தாலும்,உங்களை முற்றிலும் அழிக்கமாட்டேன்.உங்களை நான் தண்டித்துச் சீர்படுத்துவேன்.உங்களைத் தண்டிக்காமல் விடமாட்டேன், ஆனாலும் நீதியாகவே தண்டிப்பேன்.’ 12 “யெகோவா கூறுவது இதுவே:“ ‘உங்கள் புண் ஆற்ற முடியாதது;உங்கள் காயமும் குணப்படுத்த முடியாதது. 13 உங்களுக்காக வழக்காட ஒருவருமில்லை;உங்கள் காயங்களுக்கு மருந்தில்லை.நீங்கள் குணமடைய மாட்டீர்கள். 14 உங்களுடைய கூட்டாளிகள் யாவரும் உங்களை மறந்துவிட்டார்கள்.அவர்களுக்கு உங்களைப்பற்றிய எவ்வித அக்கறையும் இல்லை.ஒரு பகைவன் தாக்குவதைப்போல் நான் உங்களைத் தாக்கிகொடூரமானவன் உங்களைத் தண்டிப்பதுபோல் தண்டித்திருக்கிறேன்.ஏனெனில் உங்கள் குற்றம் பெரியது;உங்கள் பாவங்களும் அநேகமானவை. 15 காயத்திற்காக நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?தேற்றமுடியாத வேதனைக்காக நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?உங்களுடைய பெரிய குற்றத்திற்காகவும்,உங்கள் அநேக அக்கிரமங்களுக்காகவுமே இவற்றை நான் உங்களுக்குச் செய்திருக்கிறேன். 16 “ ‘ஆனால் வரப்போகும் அந்த நாளில் உங்களை விழுங்குகிறயாவரும் விழுங்கப்படுவார்கள்;உங்கள் பகைவர்கள் எல்லோரும் நாடுகடத்தப்படுவார்கள்.உங்களைக் கொள்ளையிடுகிறவர்கள் கொள்ளையிடப்படுவார்கள்;உங்களைச் சூறையாடுபவர்கள் யாவரையும் நான் சூறையாடுவேன். 17 ஒதுக்கித் தள்ளப்பட்டவள் என்றும்,ஒருவரும் கவனிக்காத சீயோன் என்றும் நீங்கள் அழைக்கப்படுவதனால்,உங்களுக்கு நான் மீண்டும் சுகத்தைக் கொடுப்பேன்.உங்கள் புண்களையும் சுகப்படுத்துவேன்’ என்று யெகோவா அறிவிக்கிறார். 18 “யெகோவா கூறுவது இதுவே:“ ‘நான் யாக்கோபின் கூடாரங்களின் செல்வச் செழிப்பைத் திரும்பவும் கொடுப்பேன்.அவனுடைய குடியிருப்புகளின்மீது இரக்கம் காட்டுவேன்;பட்டணம் அதன் இடிபாடுகளின்மேல் திரும்பக் கட்டப்படும்.அரண்மனை அதற்குரிய இடத்தில் இருக்கும். 19 அவைகளிலிருந்து நன்றிப் பாடல்களும், மகிழ்ச்சியின் சத்தமும் வரும்.நான் அவர்களுடைய எண்ணிக்கையைபெருகப்பண்ணுவேன்;அவர்கள் குறைந்துபோவதில்லை.அவர்களுக்குக் கனத்தைக் கொண்டுவருவேன்.அவர்கள் இகழப்படமாட்டார்கள். 20 அவர்களின் பிள்ளைகள் பழைய நாட்களில் இருந்ததுபோல் இருப்பார்கள்.அவர்கள் சமுதாயம் எனக்கு முன்பாக நிலைநிறுத்தப்படும்.அவர்களை ஒடுக்கிய யாவரையும் நான் தண்டிப்பேன். 21 அவர்களுடைய தலைவன் அவர்களில் ஒருவனாயிருப்பான்.அவர்களை ஆள்பவன் அவர்களின் மத்தியிலிருந்து எழும்புவான்.அவனை நானே என் அருகில் கொண்டுவருவேன்.அவன் என்னைக் கிட்டிச் சேருவான்.ஏனெனில் தானாகவே என் அருகில் வருவதற்குத் தன்னை அர்ப்பணிக்கக் கூடியவன் யார்?’என்று யெகோவா அறிவிக்கிறார். 22 ‘எனவே நீங்கள் என் மக்களாயிருப்பீர்கள்,நான் உங்கள் இறைவனாயிருப்பேன்.’ ” 23 பாருங்கள், யெகோவாவின் கோபம்புயல்காற்றைப்போல உக்கிரமாய் எழும்பும்;அது கொடியவர்களின்தலையின்மேல் சுழன்று அடிக்கும். 24 யெகோவா தமது இருதயத்திலுள்ளநோக்கத்தை முற்றிலும் நிறைவேற்றும்வரைஅவருடைய கோபம் தணியாது.வரும் நாட்களில்நீ அதை விளங்கிக்கொள்வாய்.

In Other Versions

Jeremiah 30 in the ANGEFD

Jeremiah 30 in the ANTPNG2D

Jeremiah 30 in the AS21

Jeremiah 30 in the BAGH

Jeremiah 30 in the BBPNG

Jeremiah 30 in the BBT1E

Jeremiah 30 in the BDS

Jeremiah 30 in the BEV

Jeremiah 30 in the BHAD

Jeremiah 30 in the BIB

Jeremiah 30 in the BLPT

Jeremiah 30 in the BNT

Jeremiah 30 in the BNTABOOT

Jeremiah 30 in the BNTLV

Jeremiah 30 in the BOATCB

Jeremiah 30 in the BOATCB2

Jeremiah 30 in the BOBCV

Jeremiah 30 in the BOCNT

Jeremiah 30 in the BOECS

Jeremiah 30 in the BOGWICC

Jeremiah 30 in the BOHCB

Jeremiah 30 in the BOHCV

Jeremiah 30 in the BOHLNT

Jeremiah 30 in the BOHNTLTAL

Jeremiah 30 in the BOICB

Jeremiah 30 in the BOILNTAP

Jeremiah 30 in the BOKCV

Jeremiah 30 in the BOKCV2

Jeremiah 30 in the BOKHWOG

Jeremiah 30 in the BOKSSV

Jeremiah 30 in the BOLCB

Jeremiah 30 in the BOLCB2

Jeremiah 30 in the BOMCV

Jeremiah 30 in the BONAV

Jeremiah 30 in the BONCB

Jeremiah 30 in the BONLT

Jeremiah 30 in the BONUT2

Jeremiah 30 in the BOPLNT

Jeremiah 30 in the BOSCB

Jeremiah 30 in the BOSNC

Jeremiah 30 in the BOTLNT

Jeremiah 30 in the BOVCB

Jeremiah 30 in the BOYCB

Jeremiah 30 in the BPBB

Jeremiah 30 in the BPH

Jeremiah 30 in the BSB

Jeremiah 30 in the CCB

Jeremiah 30 in the CUV

Jeremiah 30 in the CUVS

Jeremiah 30 in the DBT

Jeremiah 30 in the DGDNT

Jeremiah 30 in the DHNT

Jeremiah 30 in the DNT

Jeremiah 30 in the ELBE

Jeremiah 30 in the EMTV

Jeremiah 30 in the ESV

Jeremiah 30 in the FBV

Jeremiah 30 in the FEB

Jeremiah 30 in the GGMNT

Jeremiah 30 in the GNT

Jeremiah 30 in the HARY

Jeremiah 30 in the HNT

Jeremiah 30 in the IRVA

Jeremiah 30 in the IRVB

Jeremiah 30 in the IRVG

Jeremiah 30 in the IRVH

Jeremiah 30 in the IRVK

Jeremiah 30 in the IRVM

Jeremiah 30 in the IRVM2

Jeremiah 30 in the IRVO

Jeremiah 30 in the IRVP

Jeremiah 30 in the IRVT

Jeremiah 30 in the IRVT2

Jeremiah 30 in the IRVU

Jeremiah 30 in the ISVN

Jeremiah 30 in the JSNT

Jeremiah 30 in the KAPI

Jeremiah 30 in the KBT1ETNIK

Jeremiah 30 in the KBV

Jeremiah 30 in the KJV

Jeremiah 30 in the KNFD

Jeremiah 30 in the LBA

Jeremiah 30 in the LBLA

Jeremiah 30 in the LNT

Jeremiah 30 in the LSV

Jeremiah 30 in the MAAL

Jeremiah 30 in the MBV

Jeremiah 30 in the MBV2

Jeremiah 30 in the MHNT

Jeremiah 30 in the MKNFD

Jeremiah 30 in the MNG

Jeremiah 30 in the MNT

Jeremiah 30 in the MNT2

Jeremiah 30 in the MRS1T

Jeremiah 30 in the NAA

Jeremiah 30 in the NASB

Jeremiah 30 in the NBLA

Jeremiah 30 in the NBS

Jeremiah 30 in the NBVTP

Jeremiah 30 in the NET2

Jeremiah 30 in the NIV11

Jeremiah 30 in the NNT

Jeremiah 30 in the NNT2

Jeremiah 30 in the NNT3

Jeremiah 30 in the PDDPT

Jeremiah 30 in the PFNT

Jeremiah 30 in the RMNT

Jeremiah 30 in the SBIAS

Jeremiah 30 in the SBIBS

Jeremiah 30 in the SBIBS2

Jeremiah 30 in the SBICS

Jeremiah 30 in the SBIDS

Jeremiah 30 in the SBIGS

Jeremiah 30 in the SBIHS

Jeremiah 30 in the SBIIS

Jeremiah 30 in the SBIIS2

Jeremiah 30 in the SBIIS3

Jeremiah 30 in the SBIKS

Jeremiah 30 in the SBIKS2

Jeremiah 30 in the SBIMS

Jeremiah 30 in the SBIOS

Jeremiah 30 in the SBIPS

Jeremiah 30 in the SBISS

Jeremiah 30 in the SBITS

Jeremiah 30 in the SBITS2

Jeremiah 30 in the SBITS3

Jeremiah 30 in the SBITS4

Jeremiah 30 in the SBIUS

Jeremiah 30 in the SBIVS

Jeremiah 30 in the SBT

Jeremiah 30 in the SBT1E

Jeremiah 30 in the SCHL

Jeremiah 30 in the SNT

Jeremiah 30 in the SUSU

Jeremiah 30 in the SUSU2

Jeremiah 30 in the SYNO

Jeremiah 30 in the TBIAOTANT

Jeremiah 30 in the TBT1E

Jeremiah 30 in the TBT1E2

Jeremiah 30 in the TFTIP

Jeremiah 30 in the TFTU

Jeremiah 30 in the TGNTATF3T

Jeremiah 30 in the THAI

Jeremiah 30 in the TNFD

Jeremiah 30 in the TNT

Jeremiah 30 in the TNTIK

Jeremiah 30 in the TNTIL

Jeremiah 30 in the TNTIN

Jeremiah 30 in the TNTIP

Jeremiah 30 in the TNTIZ

Jeremiah 30 in the TOMA

Jeremiah 30 in the TTENT

Jeremiah 30 in the UBG

Jeremiah 30 in the UGV

Jeremiah 30 in the UGV2

Jeremiah 30 in the UGV3

Jeremiah 30 in the VBL

Jeremiah 30 in the VDCC

Jeremiah 30 in the YALU

Jeremiah 30 in the YAPE

Jeremiah 30 in the YBVTP

Jeremiah 30 in the ZBP