Lamentations 1 (BOITCV)
1 ஒருகாலத்தில் மக்களால் நிறைந்திருந்த எருசலேம் பட்டணம்,இப்பொழுது எவ்வளவு பாழாய்க் கிடக்கிறது!ஒருகாலத்தில் நாடுகளின் மத்தியில் மிகவும் பெரியவளாய் இருந்தவள்,இன்று ஒரு விதவையைப் போலானாளே!நாடுகளின் மத்தியில் அரசியாய் இருந்தவள்இப்பொழுது அடிமையானாளே. 2 இரவில் அவள் மனங்கசந்து அழுகிறாள்,அவளுடைய கன்னங்களில் கண்ணீர் வடிகிறது.அவளுக்குப் பிரியமானவர்களில் அவளைஆறுதல் செய்வதற்கு ஒருவரும் இல்லை.அவளுடைய நண்பர்கள் அவளுக்கு துரோகம் செய்தார்கள்;அவர்கள் அவளின் விரோதிகளானார்கள். 3 துன்பத்தையும், கொடுமையான அடிமை வேலையையும் அனுபவித்தபின்,யூதா நாடுகடத்தப்பட்டுப் போனாள்.பிறநாடுகளின் மத்தியில் அவள் குடியிருக்கிறாள்;ஆனால் அவளுக்கோ இளைப்பாறும் இடம் இல்லை.அவளுடைய துன்பத்தின் மத்தியில்அவளைப் பின்தொடர்ந்த யாவரும் அவளைப் பிடித்துக்கொண்டார்கள். 4 நியமிக்கப்பட்ட பண்டிகைகளுக்கு ஒருவரும் வராததால்,சீயோனின் தெருக்கள் துக்கங்கொண்டாடுகின்றன.அவளுடைய வாசல்கள் யாவும் பாழாய்க் கிடக்கின்றன.அவளுடைய ஆசாரியர்கள் புலம்புகிறார்கள்.அவளுடைய இளம்பெண்கள் துயரப்படுகிறார்கள்,அவள் கசப்பான வேதனையில் இருக்கிறாள். 5 அவளுடைய பகைவர்கள் அவளுக்கு தலைவர்களாகி விட்டார்கள்;அவளுடைய பகைவர்கள் சுகவாழ்வு அடைந்திருக்கிறார்கள்.அவளுடைய அநேக பாவங்களின் நிமித்தம்யெகோவா அவளுக்கு துக்கத்தைக் கொடுத்தார்.அவளுடைய பிள்ளைகள் எதிரிக்கு முன்கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டனர். 6 சீயோன் மகளின்சீர்சிறப்பெல்லாம் அவளைவிட்டு நீங்கிற்று.அவளுடைய இளவரசர்கள் மேய்ச்சலை காணாதமான்களைப் போலானார்கள்;அவர்கள் தங்களை துரத்துகிறவர்களுக்கு முன்பாகபலவீனமுற்று தப்பி ஓடினார்கள். 7 எருசலேம் துன்பப்பட்டு அலைந்த நாட்களில்,முற்காலத்தில் தனக்குச் சொந்தமாயிருந்தசெல்வங்களையெல்லாம் நினைவுகூருகிறாள்.அவளுடைய மக்கள் பகைவரின் கையில் விழுந்தபோது,அவளுக்கு உதவிசெய்ய ஒருவருமே இருந்ததில்லை.மக்களுக்கு ஏற்பட்ட அழிவைக் கண்டு,அவளுடைய பகைவர் அவளைப் பார்த்து நகைத்தார்கள். 8 எருசலேம் பெரும் பாவம் செய்து அசுத்தமடைந்தாள்.அவளை கனம்பண்ணின யாவரும்அவளுடைய நிர்வாணத்தைக் கண்டதினால்,அவளை அவமதிக்கிறார்கள்;அவள் தனக்குள் அழுது,தன் முகத்தை மறைத்துக் கொள்கிறாள். 9 அவளுடைய அசுத்தம் அவளுடைய உடைகளில் ஒட்டிக் கொண்டிருக்கிறது;அவள் தன்னுடைய எதிர்காலத்தை எண்ணிப்பார்க்கவில்லை.ஆகையினால் அவளுடைய வீழ்ச்சி அதிர்ச்சியாயிருந்தது;அவளை தேற்றுவார் ஒருவரும் இல்லை.“யெகோவாவே, என்னுடைய துன்பத்தைப் பாரும்;என்னுடைய பகைவன் என்னை வெற்றி கொண்டானே” என்று அழுகிறாள். 10 பகைவன் எருசலேமின் இன்பமானஎல்லாவற்றின்மேலும் தன் கைகளை வைத்தான்.அவளுடைய பரிசுத்த இடத்திற்குள்பிறநாட்டினர் நுழைவதை அவள் கண்டாள்.யெகோவா தடைசெய்தவர்கள்அவருடைய சபைக்குள் நுழைவதை அவள் கண்டாள். 11 அவளுடைய மக்கள் யாவரும்அப்பத்தைத் தேடித் தவிக்கிறார்கள்.அவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக தங்கள் திரவியங்களைஉணவுக்காக பண்டம் மாற்றம் செய்கிறார்கள்.அவள், “யெகோவாவே கவனித்துப் பாரும்!நான் அவமதிக்கப்பட்டிருக்கிறேன்” என்று துக்கிக்கிறாள். 12 “இந்த வழியாய் கடந்துபோகிறவர்களே,உங்களுக்கு இது ஒரு பொருட்டாய் தோன்றவில்லையோ?சுற்றிலும் நோக்கிப்பாருங்கள்.யெகோவா தமது கடுங்கோபத்தின் நாளில்,என்மேல் கொண்டுவந்த வேதனையைப்போன்றவேதனை ஏதும் உண்டோ? 13 “யெகோவா உயரத்திலிருந்து நெருப்பை அனுப்பினார்.அதை எனது எலும்புகளுக்குள் இறங்கப் பண்ணினார்.அவர் என்னுடைய கால்களுக்கு ஒரு வலையை விரித்து,என்னைப் பின்னோக்கி திருப்பிவிட்டார்.அவர் என்னைப் பாழாக்கி,நாள்தோறும் மயக்கமடையச் செய்தார். 14 “என்னுடைய பாவங்கள் ஒரு நுகமாக கட்டப்பட்டிருக்கின்றன;அவை அவருடைய கைகளால் ஒன்றாக்கப்பட்டு,என் கழுத்தின்மேல் போடப்பட்டுள்ளன.யெகோவா என் பெலனை குன்றப்பண்ணினார்.என்னால் எதிர்க்க முடியாதவர்களிடத்தில்என்னை ஒப்புக்கொடுத்து விட்டார். 15 “என் மத்தியிலிருந்த இராணுவவீரர்களையெல்லாம்யெகோவா புறக்கணித்துவிட்டார்;என்னிடமுள்ள என்னுடைய வாலிபரை நசுக்கும்படி,எனக்கெதிராக ஒரு படையை அழைத்திருக்கிறார்.யூதாவின் கன்னிகையை யெகோவாதம் திராட்சை ஆலையில் மிதித்துப்போட்டார். 16 “இதனால்தான் நான் அழுகிறேன்.என் கண்களில் கண்ணீர் நிரம்பி வழிகிறது.என்னைத் தேற்ற என் அருகில் யாரும் இல்லை.என் ஆவிக்கு புத்துயிர் அழிக்கவும் ஒருவரும் இல்லை.பகைவன் வெற்றிகொண்டபடியினால்,என்னுடைய பிள்ளைகள் ஆதரவற்றுப் போனார்கள்.” 17 சீயோன் தன் கைகளை உதவிக்காக நீட்டுகிறாள்,அவளை ஆறுதல்படுத்த ஒருவரும் இல்லை.யாக்கோபின் அயலவர் அவனுக்குப்பகைவர்களாகும்படி யெகோவா நியமித்திருக்கிறார்;அவர்கள் மத்தியில் எருசலேம்ஒரு அசுத்தப் பொருளாயிற்று. 18 “யெகோவா நேர்மையுள்ளவர்,இருந்தாலும் நான் அவருடைய கட்டளைக்கு எதிராகக் கலகம் செய்தேன்.மக்கள் கூட்டங்களே, நீங்கள் எல்லோரும் கேளுங்கள்;என்னுடைய துன்பத்தைப் பாருங்கள்.என் இளைஞரும், இளம்பெண்களும்நாடுகடத்தப்பட்டுப் போனார்கள். 19 “நான் என் கூட்டாளிகளை கூப்பிட்டேன்,அவர்களோ எனக்கு துரோகம் செய்தார்கள்.என்னுடைய ஆசாரியரும்,முதியோரும் தங்கள் உயிரைக் காக்கஉணவு தேடுகையில்,பட்டணத்தில் அழிந்துபோனார்கள். 20 “யெகோவாவே பாரும்! நான் எவ்வளவாய் துயரப்பட்டிருக்கிறேன்.நான் எனக்குள்ளே கடும் வேதனைப்படுகிறேன்.என் இருதயத்தில் கலக்கமுற்றிருக்கிறேன்.ஏனெனில் நான் அதிகமாய் கலகம் பண்ணினேன்.வெளியே, வாள் அழிக்கிறது;உள்ளே, மரணம் மட்டுமே இருக்கிறது. 21 “என்னுடைய புலம்பலை மக்கள் கேட்டிருக்கிறார்கள்,ஆனால் என்னைத் தேற்றுவதற்கோ ஒருவரும் இல்லை.என் பகைவர்கள் யாவரும் எனக்கு வந்த துயரத்தைக் கேள்விப்பட்டு,நீர் அதை செய்தபடியால் மகிழ்ச்சியடைகிறார்கள்.அவர்களும் என்னைப் போலாகும்படி நீர்அறிவித்த நாளை வரப்பண்ணும். 22 “அவர்களுடைய கொடுமைகள் எல்லாம் உமக்கு முன்பாக வரட்டும்;என்னுடைய எல்லா பாவங்களுக்காகநீர் எனக்குச் செய்ததுபோலவே,அவர்களுக்கும் செய்யும்.என் புலம்பல்கள் அநேகம்,என் இருதயமும் சோர்ந்துபோகிறது.”
In Other Versions
Lamentations 1 in the ANTPNG2D
Lamentations 1 in the BNTABOOT
Lamentations 1 in the BOHNTLTAL
Lamentations 1 in the BOILNTAP
Lamentations 1 in the KBT1ETNIK
Lamentations 1 in the TBIAOTANT